ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Tuesday, October 20, 2009

உள்ளங்கையில் மை தடவி?

என் மனசின் குரல் கேட்டதுஅப்போதுதான் முதல்முறையாக இருக்க வேண்டும். அப்போது என் வயது 12இருக்கலாம். உறவினர் ஒருவர் வீட்டில் பணம் திருட்டுப்போய் விட்டது. அவர்களிடம் வேலை செய்யும் ஒருவர் மேல் சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அடி.உதை. நகக்கண்ணில் ஊசி என்று பல சித்ரவதைகள் நடந்தாகக் கேள்விபட்டேன். ஒரு பலனும் கிடைக்கவில்லை. இப்போதாக இருந்தால் மனித உரிமை பாதிக்கப்பட்டது என்று போர்க்கொடி தூக்கிவிடுவார்கள்.


குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவயதில் இருந்தே என்னைதோள்மீது தூக்கித் திரிந்தவர். சுந்தரம் அண்ணா என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

இந்த நிலையில் ஒருநாள் இரவு என்னை குளிக்கவைத்து என் உறவினர் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். நான் தலைச்சன் பெண். அன்று அமாவாசை. என் உள்ளங்கையில் மை தடவிப்பார்த்தால் திருடனைக்கண்டு பிடித்து விடலாமாம். சுற்றிலும் நாலைந்து பெரியவர்கள். போலீஸ். மந்திரவாதி. நடுவில் நான். நேரமோ இரவுபத்துமணி. தூக்கக்கலக்கத்தில் வந்த நான் சூழ்நிலையப்பார்த்ததும் பயந்து விட்டேன். என் அப்பா வெளியூர் போய்விட்டார். இருந்திருந்தால் என்னைக்கூட்டிபோக அனுமதித்திருக்க மாட்டார்.

பூஜை போடப்பட்டது. பாப்பா! உள்ளங்கையை நன்றாகப்பார். சுந்தரம் பணத்தை எங்கே ஒழித்து வைத்திருக்கிறான் என்று. கூட யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று சொல் ! என்றார் பூசாரி.

உள்ளங்கையை உற்று உற்றுப்பார்த்தால் ஒன்றுமே தெரியவில்லை. லைட் வெளிச்சம்தான் அதில் பட்டு எதிரொலித்தது. !!ஒன்றும் தெரியவில்லை தாத்தா!! என்றேன். நன்றாகப்பார் தெரியும் பார்!! என்று மிரட்டினார். உடன் ஒரு முடிவோடு வாயில் வந்ததெல்லாம் புளுக ஆரம்பித்தேன். இரண்டு பேர் தெரிகிறார்கள். காரில் போகிறார்கள் என்று அவிழ்த்து விட ஆரம்பித்தேன். சுந்தரம்தானே அது என்று கேட்டார்கள்.

அப்போதுதான் என் மூளை வேலை செய்தது. என் அன்பிர்க்குரியவரின் சித்தரவதை செய்யப்பட்ட முகம் தெரிந்தது.கண்டிப்பாக அவர் எடுத்திருக்க மாட்டார் என்று நினைத்தேன். அதனால் இல்லவே இல்லை. இது வேறு ஆட்கள் என்று உறுதியாகத் தெரிவித்தேன்.

!! சரி! கார் போகும் வழி தெரிகிறதா!!

!! தெரிகிறது. !!

!!பணம் வைத்துள்ள இடம் தெரிகிறதா!!

!!தெரிகிறது. !!

அதோடு விட்டார்களா? !!வா! அந்த இடத்தைக் காட்டு !! என்று என்னைக் காரில் ஏற்றிக்கொண்டு ஊர் முழுவதும் விடிய விடிய சுற்றினார்கள். காசா பணமா ! ரீல் மேல் ரீல். நான் விட்டது.!!!!!!! ஒன்றும் கிடைக்கவில்லை.??? .

முடிவில் நான் தூங்கிவிட்டேன்??

இரண்டு நாள் கழித்து பணம் படுக்கும் மெத்தைக்கு அடியில் கிடைத்தது. அங்கு வைத்ததை மறந்துவிட்டு அந்த அப்பாவியை வீண்பழி சுமத்தி துன்புறுத்தி விட்டார்கள்அவர் ஊரைவிட்டே போய்விட்டார். இப்போது எங்கே இருக்கிறாரோ.

ஒரு அப்பாவியைக் காப்பாற்றிய நிம்மதி எனக்கு. எல்லோரையும் சுத்தலில் விட்டதை இன்று நினைத்தாலும் தாங்க முடியாத சிரிப்புதான். உங்களுக்கு எப்படி!!!!

Tuesday, October 13, 2009

ஜோக்

கடி கடி ஜோக்ஸ்.

கேள்வி. ??? இட்லிக்கும் , பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்???

பதில்.....பொங்கலுக்கு லீவு கிடைக்கும். இட்லிக்கு கிடைக்காது.

கேள்வி......கடல்வாழ் உயிரினங்கள் ஐந்து கூறுக

பதில்........மீன். மீனோட அப்பா, மீனோட அம்மா, அண்ணா,தங்கை மீன்.

இது எப்படி இருக்கு?

Monday, October 12, 2009

ரவுசுப்பாட்டி.

அகத்திய முனிவர் மாதிரி குள்ளமான ஒல்லியான உருவம் எங்கள் பாட்டி{அம்மத்தா}. மார்கழி பனியானாலும் விடியலில் குளித்துவிட்டு பிள்ளையாருக்கு தண்ணீர் கொண்டுபோய் ஊற்றிவிட்டு,சூரிய நமஸ்காராம் செய்துவிட்டுத்தான் வேறு வேலை பார்க்கும். அவ்வளவு சுத்தம். ஆனால் வாயைத்திறந்தால தஞ்சாவூர் தவிலுதான். எட்டு வீடுகளை வாடகைக்கு விட்டு ஒற்றை ஆளாய் கருங்கல்பாளையத்தில் அரசு பண்ணிகொண்டிருந்தது.
உச்சிமுடியைக் கையில் பற்றிக்கொண்டு அரப்பு போட்டு எங்களைக் குளிப்பாட்டும்போது நாங்கள் கத்தும் கத்தலில் பகத்துவீட்டுக்காரர்கள் எல்லாம் பஞ்சாயத்துக்கு வருவார்கள்., அப்படி ஒரு ராக்காசி அது. சின்ன வயதில் நான் ரொம்ப குறும்பாம்??? என்ன செய்தேன் என்று நியாபகம் இல்லை. தண்டனை என்ன தெரியுமா. இரண்டு பெண்கள் கயத்துக்கட்டிலில் என்னை குப்புறப் போட்டு அமுக்கிகொள்ள அடியில் ஒரு படியில் நெருப்புத்தனலுடன்,மிளகாய் போட்டு பாட்டி புகை பிடித்து விட்டது. காரம் தாங்காமல் நான் உதைத்த உதையில் என் பாட்டிக்கு இரண்டு பற்கள் விழுந்தது வேறு விசயம். அப்புறம் கேட்ட வார்த்தையில் அர்ச்சனை மலையும், சாத்த்படி பூசையும் நடந்ததும் வேறு விஷயம். அந்தகாட்சியை மனக்கண்ணில் பாருங்கள். ?
பாட்டி பேரில் லோன் ஒன்று வாங்குவதற்காக வங்கி ஒன்றுக்குச் சென்றோம். வங்கி கிளர்க் ரேகை வாங்குவதற்காக மை தடவி விரலைப்பிடித்து உருட்டினார். அவ்வளவுதான்...... அட....கட்டிதின்னி நாயே விரல் போச்சே என்று அது கத்திய கத்தலில் அவர் எட்டிக்குதித்து ஓடிவிட்டார். ஒருவாறு அவரையும்,பாட்டியையும் சமாதானப்படுத்தி ரேகை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
அந்த வயதிலும் அதற்கு வரும் கோபம். அடேங்கப்பா.... ஒருவார்த்தை கோபமாகப் பேசிவிட்டாலும் போதும். நான் இனி ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன். ... காவேரிக்குப் போகிறேன் என்று தடியைத் தூஉக்கிக்கொண்டு குண்டுகுண்டுஎன்று ஓடும்......தடுக்க மாட்டோம். ......கொஞ்ச தூரத்தில் உள்ள உறவினர் வீட்டில் போய் உட்கார்திருக்கும். சமாதானப்படுத்தி கூட்டிவருவோம் தள்ளாத வயதிலும் பிடிவாதமாக தானே சமையல் செய்து கொண்டிருக்கும். பிறகு எங்கள் வீட்டுக்கு வந்தது,
en paiyanukku அப்போது மூன்று வயது. அறுந்த வால்பையன். துருதுருவென்று இருப்பான். அவனைகண்டால் பாட்டிக்கு ஆகாது. தடியைக்காட்டி அவனை மிரட்டிக்கொண்டே இருக்கும். ஏமாந்தால் அதைப்பிடுங்கி கொண்டு ஓடிவிடுவான். பாட்டி வெளிதின்னைஇல்தான் படுத்துக்கொள்ளும். அதை ஒட்டி ஜன்னல் இருக்கும். என் பையன் உள்புரமிருந்து தண்ணீரை பாட்டி மேல் ஊற்றி விடுவான்.......அய்யய்யோ...... என்மேல் ஒண்ணுக்கிருந்து விட்டானே என்று கூப்பாடு போடும்.
ஒரு துணிப்பை வைத்திருக்கும். நாங்கள் கொடுக்கும் தின்பண்டங்கள்,பழாம், வெற்றிலை எல்லாவற்றையும் அதற்குள் போட்டு முடிந்து வைத்து தலைக்கடியில் வைத்து படுத்துக்கொள்ளும். ஒருவரும் இல்லாதபோது ஒளித்துஒளித்து சாப்பிடும், பங்கு கேட்டுவிடுவோமோ என்று. ஒருநாள் அந்தப்பையைப் பறித்துக்கொண்டு என் பையன் ஓடிவிட்டான். அவ்வளவுதான், தடியை ஊன்றிக்கொண்டுபாட்டி துரத்த வீட்டைச் சுற்றிக்கொண்டு என் பையன் ஓட பக்கத்து வீட்டாருக்கு எல்லாம் ஒரே சிரிப்புதான்.
அதனுடைய வீட்டை விற்றுவிட்டு சாமான்களை எடுத்து வந்தபோது அழுதது பார் ஒரு அழுகை. என்னால் மறக்கவே முடியவில்லை. கடிசியாக எங்கள் வீட்டில் இருந்தபோது ரொம்ப முடியாமல் போய்விட்டது. அப்போது நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம். வீட்டு ஓனர் தன வீட்டில் பாட்டி இறந்து விடும் என்று எண்ணி பாட்டியை எடுத்துப் போகச்சொல்லி விட்டார். அந்த கோபத்தில்தான் நாங்கள் உடனடியாக வீடு கட்டினோம. வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். மனிதாபிமானம் கொஞ்சமாவது மானிடர்களுக்கு வேண்டும். .......மறக்க முடியாத வயதான குழந்தைபாட்டி அது.

Wednesday, October 7, 2009

நடு இரவில் சிங்கம்.


அது ஒரு சித்திரை மாதத்து கோடைகாலம். வெக்கை தாளாமல் எங்கள் வீதியில் நிறையப்பேர் வெளியில் படுத்து உறங்குவார்கள். நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டில் நாலைந்து குடித்தனங்கள். என் மாமியாரும் வெளியில் படுத்திருந்தார். நடுராத்திரியில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் தட்டி எழுப்பினார். என்னவோ ஏதோ என்று வெளியில் வந்தோம்.

வெளியில் பத்து பதினைந்து ஆண்கள் கையில் தடிகள், டார்ச்லைட் சகிதம் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிகொண்டிருந்தார்கள். எங்கள் வீதியில் எத்தனயோ சண்டைசச்சரவுகள் இருந்தாலும் ஒரு பிரச்சனை என்றால் எல்லோரும் ஒன்று சேர்ந்தது விடுவோம். யார் வீட்டிலோ திருடன் புகுந்துவிட்டான் போல என்று நினைத்தால் விஷயம் பயங்கரமானது. சிங்கம் ஒண்ணு நம்ம வீதிக்குள் புகுந்துவிட்டதாம். பொம்பளைக எல்லாம் பிள்ளைகுட்டிகளோடு ஊட்டுக்குள்ள போய் கதவைச் சாத்தி இருங்க. ஆம்பளைக வாங்கப்பா. பக்கத்து தொண்டுப்பட்டியில் கால்தாரை தெரியுதாம். கன்னுக்குட்டி ஒன்றைக் காணோமாம். சிங்கம் இழுத்துக்கொண்டு போயிருச்சு போல, என்று பதறினார். எங்க வீட்டுக்காரரை அரைமனதோடு அனுபினேன். வேற வழி.

விடிய விடியத் தேடினார்கள். கடை,கண்ணிகளில் வெளியில் படுத்திருந்தவர்கள் எல்லோரும் உள்ளே ஓடிவிட்டார்கள். நடுஊருக்குள் எப்படி வந்தது. பக்கத்தில் எங்கேயும் காடுகள் இல்லையே. சர்க்கசில் இருந்து தப்பி வந்ததாயி இருக்குமோ, பக்கத்தில் எங்கேயும் சர்க்கஸ் நடக்கவில்லையே என்று பெண்கள் எல்லாம் வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தோம். கிடைக்கவேஇல்லை அந்த சிங்கம். அசந்துபோய் ஆண்கள் எல்லோரும் வந்து தூங்கி விட்டார்களா.

காலையில் பலத்த கூச்சல் கேட்டு , ஒளிந்திருந்த சிங்கத்தைத்தான் பிடித்துவிட்டார்கள் என்று ஓடினால் பக்கத்துவீட்டு சிறுவன் தரையில் விளுக்விளுக்கென இழுத்துக்கொண்டு கிடந்தான். அவன் கையில் ஒரு மின்கம்பி இருந்தது. தன் கோழிக்குஞ்சு இரைக்காக எறும்புகளை பொறுக்க வந்தவன், கீழே அறுந்தது கிடந்த எர்த் கம்பியை கயிறு என்று நினைத்து தொட்டிருக்கிறான். பலகை கொண்டு அந்த கம்பியை எடுத்து வீசி காப்பாற்றினார்கள். ஒரே ரகளைதான் போங்கள் அன்று.

சரி, சரி சிங்கம் என்ன ஆச்சு? என்று கேட்கிறிர்களா. பல நாட்கள் கழித்துத்தான் விஷயம் வெளியே கசிந்தது. எங்கள்வீதிக் குடிமகன் ஒருவர் மப்பில் வீடு மாறி வெளியில் படுத்திருந்தவர்களில் தன் மனைவி என்று எண்ணி பக்கத்து வீட்டம்மாவை எழுப்பிவிட்டார். விக்கித்துப்போன அந்தப்பெண் அவரைக் காட்டிக்கொடுக்காமல் சிங்கம், சிங்கம் என்று கத்தி ஊரைக்கூட்டி தான் தப்பித்துக்கொண்டார்.

இது எப்படி இருக்கு???

Monday, October 5, 2009

ஜானி நெ.2
எங்கள் நாய் இறந்ததும் மீண்டும் ஒரு நாய்க்குட்டி வாங்கினோம். டேசன்ட் என்று வாங்கியது டாபர்மேன் கிராஸ் ஆகிவிட்டது. இரண்டே மாதத்தில் நாய் இரண்டடி உயரம் வளர்ந்த்துவிட்டது. அதற்கும் ஜானி என்றே பெயர் வைத்தோம். அது செய்த அட்டகாசம்? அப்பப்பா? ரோட்டில் குழ்ந்தைகள் யாரும் நடக்க முடியவில்லை. ஒரே கடிதான். எங்கள் வீதிக்கு வரும் பெண்கள் கையில் பாதுகாப்புக்கு குச்சியுடன்தான் நடப்பார்கள். எங்கள் அக்கம்பக்கம் வீட்டினர் யாரும் வெளியில் செருப்பை விட்டால் அதோகதிதான். அவர்களுக்கெல்லாம் பழைய செருப்புக்கு எங்கள் உபயத்தில் புது செருப்பு .தினம் ஒரு புகார். எங்கள் முகத்திற்காக பலரும் பொறுத்தார்கள். சரியென்று அதற்கு ஒரு வாய்மூடி ஒன்று வாங்கி போட்டுவிட்டோம். அந்த மூடிபோட்டும் பக்கத்துவீட்டு கோழிக்குஞ்சுகளை தினம் ஒன்றாக அமுக்கி கொன்று போட்டுவிடும். ஒருநாள் செத்து அழுகிப்போன காக்காய் ஒன்றை வீட்டுக்குள் தூக்கி வந்துவிட்டது. ஒரே நாற்றம் தாங்க முடியவில்லை. மூக்கைப் பொத்திக்கொண்டு பிடுங்கிக்கொண்டுபோய் தூரத்தில் எறிந்துவிட்டு வந்தால் அடுத்த அரைமணி நேரத்தில் தூஉக்கிக்கொந்டுவந்து பக்கத்து வீட்டில் வைத்து விட்டது. அவர்கள் எங்களுடன் சண்டைக்கே வந்துவிட்டார்கள்?எவ்வளவு கெட்டியான செயின்போட்டு கட்டிவைத்தாலும் அறுத்துக்கொண்டு வெளியில் வந்த்துவிடும். அப்படித்தான் அன்று ஒரு பையனை பின்புறம் வந்து கடித்துவிட்டது. அந்த பையனின் ஆனால்வெறிநாய் என்று பயந்து கத்தி கும்பல் சேர்ந்து ஒரே ரகளை. பின் வைத்தியரிடம் அழைத்துச் சென்று வைத்தியம் செய்து அனுப்பினோம்.விட்டதடி ஆசை? விளாம்பழத்து ஓட்டோடு என்று நாய் வளர்க்கும் ஆசை இனி வேண்டாம் என்று ஒரு நண்பருக்குக் கொடுத்துவிட்டோம்.???????.உங்கள் அனுபவங்கள் எப்படி?

Sunday, October 4, 2009

உயிர் காப்பான்.


எல்லோரும் வள்ர்ப்புப்ப்ராணிகள் வைத்திருப்பதில்லை. சிலர் அதன்மேல் உள்ள பிரியத்தினால் வளர்ப்பார்கள்.பாதுகாப்புக்காகவும் வளர்ப்பார்கள். வேறு சில காரணங்களுக்காகவும் வளர்ப்பார்கள். என்ன தெரியுமா? ந்ம்கண்களுக்குத்தெரியாத உருவங்கள் பிராணிகளின் கண்களுக்குத் தெரியுமாம்.? அதேமாதிரி நமக்கு வரும் உயிர் ஆபத்துக்களை அவைகள் தாங்கிக்கொண்டு நம்மைக் காப்பாற்றி விடுமாம். கிராமங்களில் இந்தமாதிரி நம்பிக்கைகள் ஏராளம். நாங்கள் பிரியத்துக்காக வளர்த்தோம். முதலில் ஒரு பொமேரியன் அல்சேசன் கிராஸ் . ஜானி என்று பெயர். பழுப்பு கலரில் சிங்கம் மாதிரி இருக்கும். எல்லா நாய்குட்டிகள் போல்தான் கண்ணில் கண்டதை எல்லாம் கடிக்கும். வீட்டுக்கு வருபவர்களின் ஒரு செருப்பை மட்டும் கொண்டுபோய் ஒளித்து வைத்துவிடும. துணிகளைக் கிழித்துவிடும். யாரையும் கடிக்காது. குழ்ந்தைகள் அதன்மீது ஏறிவிளையாடும். இரவு பத்துமணி ஆகிவிட்டால் புதியவர்கள் யாரும் எங்கள் வீதியில் நுழைய முடியாது. பாம்பு எதையாவது பார்த்துவிட்டால் ஒருவிதமாகக் குரைக்கும். ஒரு எதிர்பாராத துன்பத்தில் என் மனம்,உடல்நலன் பாதிக்கப்பட்டது. நம்பினால் நம்புங்கள். நன்றாக இருந்த எங்கள் நாய் நோய்வாய்ப்பட்டு ஒரேவாரத்தில் இறந்துவிட்டது. நான் சரியாகிவிட்டேன். காக்காய் உட்க்கார பனம்பழமா? ஆச்சரியம்தான்.