ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Showing posts with label ரவுசுப்பாட்டி ரவுசுப்பேரன். Show all posts
Showing posts with label ரவுசுப்பாட்டி ரவுசுப்பேரன். Show all posts

Monday, October 12, 2009

ரவுசுப்பாட்டி.

அகத்திய முனிவர் மாதிரி குள்ளமான ஒல்லியான உருவம் எங்கள் பாட்டி{அம்மத்தா}. மார்கழி பனியானாலும் விடியலில் குளித்துவிட்டு பிள்ளையாருக்கு தண்ணீர் கொண்டுபோய் ஊற்றிவிட்டு,சூரிய நமஸ்காராம் செய்துவிட்டுத்தான் வேறு வேலை பார்க்கும். அவ்வளவு சுத்தம். ஆனால் வாயைத்திறந்தால தஞ்சாவூர் தவிலுதான். எட்டு வீடுகளை வாடகைக்கு விட்டு ஒற்றை ஆளாய் கருங்கல்பாளையத்தில் அரசு பண்ணிகொண்டிருந்தது.
உச்சிமுடியைக் கையில் பற்றிக்கொண்டு அரப்பு போட்டு எங்களைக் குளிப்பாட்டும்போது நாங்கள் கத்தும் கத்தலில் பகத்துவீட்டுக்காரர்கள் எல்லாம் பஞ்சாயத்துக்கு வருவார்கள்., அப்படி ஒரு ராக்காசி அது. சின்ன வயதில் நான் ரொம்ப குறும்பாம்??? என்ன செய்தேன் என்று நியாபகம் இல்லை. தண்டனை என்ன தெரியுமா. இரண்டு பெண்கள் கயத்துக்கட்டிலில் என்னை குப்புறப் போட்டு அமுக்கிகொள்ள அடியில் ஒரு படியில் நெருப்புத்தனலுடன்,மிளகாய் போட்டு பாட்டி புகை பிடித்து விட்டது. காரம் தாங்காமல் நான் உதைத்த உதையில் என் பாட்டிக்கு இரண்டு பற்கள் விழுந்தது வேறு விசயம். அப்புறம் கேட்ட வார்த்தையில் அர்ச்சனை மலையும், சாத்த்படி பூசையும் நடந்ததும் வேறு விஷயம். அந்தகாட்சியை மனக்கண்ணில் பாருங்கள். ?
பாட்டி பேரில் லோன் ஒன்று வாங்குவதற்காக வங்கி ஒன்றுக்குச் சென்றோம். வங்கி கிளர்க் ரேகை வாங்குவதற்காக மை தடவி விரலைப்பிடித்து உருட்டினார். அவ்வளவுதான்...... அட....கட்டிதின்னி நாயே விரல் போச்சே என்று அது கத்திய கத்தலில் அவர் எட்டிக்குதித்து ஓடிவிட்டார். ஒருவாறு அவரையும்,பாட்டியையும் சமாதானப்படுத்தி ரேகை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
அந்த வயதிலும் அதற்கு வரும் கோபம். அடேங்கப்பா.... ஒருவார்த்தை கோபமாகப் பேசிவிட்டாலும் போதும். நான் இனி ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன். ... காவேரிக்குப் போகிறேன் என்று தடியைத் தூஉக்கிக்கொண்டு குண்டுகுண்டுஎன்று ஓடும்......தடுக்க மாட்டோம். ......கொஞ்ச தூரத்தில் உள்ள உறவினர் வீட்டில் போய் உட்கார்திருக்கும். சமாதானப்படுத்தி கூட்டிவருவோம் தள்ளாத வயதிலும் பிடிவாதமாக தானே சமையல் செய்து கொண்டிருக்கும். பிறகு எங்கள் வீட்டுக்கு வந்தது,
en paiyanukku அப்போது மூன்று வயது. அறுந்த வால்பையன். துருதுருவென்று இருப்பான். அவனைகண்டால் பாட்டிக்கு ஆகாது. தடியைக்காட்டி அவனை மிரட்டிக்கொண்டே இருக்கும். ஏமாந்தால் அதைப்பிடுங்கி கொண்டு ஓடிவிடுவான். பாட்டி வெளிதின்னைஇல்தான் படுத்துக்கொள்ளும். அதை ஒட்டி ஜன்னல் இருக்கும். என் பையன் உள்புரமிருந்து தண்ணீரை பாட்டி மேல் ஊற்றி விடுவான்.......அய்யய்யோ...... என்மேல் ஒண்ணுக்கிருந்து விட்டானே என்று கூப்பாடு போடும்.
ஒரு துணிப்பை வைத்திருக்கும். நாங்கள் கொடுக்கும் தின்பண்டங்கள்,பழாம், வெற்றிலை எல்லாவற்றையும் அதற்குள் போட்டு முடிந்து வைத்து தலைக்கடியில் வைத்து படுத்துக்கொள்ளும். ஒருவரும் இல்லாதபோது ஒளித்துஒளித்து சாப்பிடும், பங்கு கேட்டுவிடுவோமோ என்று. ஒருநாள் அந்தப்பையைப் பறித்துக்கொண்டு என் பையன் ஓடிவிட்டான். அவ்வளவுதான், தடியை ஊன்றிக்கொண்டுபாட்டி துரத்த வீட்டைச் சுற்றிக்கொண்டு என் பையன் ஓட பக்கத்து வீட்டாருக்கு எல்லாம் ஒரே சிரிப்புதான்.
அதனுடைய வீட்டை விற்றுவிட்டு சாமான்களை எடுத்து வந்தபோது அழுதது பார் ஒரு அழுகை. என்னால் மறக்கவே முடியவில்லை. கடிசியாக எங்கள் வீட்டில் இருந்தபோது ரொம்ப முடியாமல் போய்விட்டது. அப்போது நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம். வீட்டு ஓனர் தன வீட்டில் பாட்டி இறந்து விடும் என்று எண்ணி பாட்டியை எடுத்துப் போகச்சொல்லி விட்டார். அந்த கோபத்தில்தான் நாங்கள் உடனடியாக வீடு கட்டினோம. வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். மனிதாபிமானம் கொஞ்சமாவது மானிடர்களுக்கு வேண்டும். .......மறக்க முடியாத வயதான குழந்தைபாட்டி அது.