ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Monday, October 5, 2009

ஜானி நெ.2
எங்கள் நாய் இறந்ததும் மீண்டும் ஒரு நாய்க்குட்டி வாங்கினோம். டேசன்ட் என்று வாங்கியது டாபர்மேன் கிராஸ் ஆகிவிட்டது. இரண்டே மாதத்தில் நாய் இரண்டடி உயரம் வளர்ந்த்துவிட்டது. அதற்கும் ஜானி என்றே பெயர் வைத்தோம். அது செய்த அட்டகாசம்? அப்பப்பா? ரோட்டில் குழ்ந்தைகள் யாரும் நடக்க முடியவில்லை. ஒரே கடிதான். எங்கள் வீதிக்கு வரும் பெண்கள் கையில் பாதுகாப்புக்கு குச்சியுடன்தான் நடப்பார்கள். எங்கள் அக்கம்பக்கம் வீட்டினர் யாரும் வெளியில் செருப்பை விட்டால் அதோகதிதான். அவர்களுக்கெல்லாம் பழைய செருப்புக்கு எங்கள் உபயத்தில் புது செருப்பு .தினம் ஒரு புகார். எங்கள் முகத்திற்காக பலரும் பொறுத்தார்கள். சரியென்று அதற்கு ஒரு வாய்மூடி ஒன்று வாங்கி போட்டுவிட்டோம். அந்த மூடிபோட்டும் பக்கத்துவீட்டு கோழிக்குஞ்சுகளை தினம் ஒன்றாக அமுக்கி கொன்று போட்டுவிடும். ஒருநாள் செத்து அழுகிப்போன காக்காய் ஒன்றை வீட்டுக்குள் தூக்கி வந்துவிட்டது. ஒரே நாற்றம் தாங்க முடியவில்லை. மூக்கைப் பொத்திக்கொண்டு பிடுங்கிக்கொண்டுபோய் தூரத்தில் எறிந்துவிட்டு வந்தால் அடுத்த அரைமணி நேரத்தில் தூஉக்கிக்கொந்டுவந்து பக்கத்து வீட்டில் வைத்து விட்டது. அவர்கள் எங்களுடன் சண்டைக்கே வந்துவிட்டார்கள்?எவ்வளவு கெட்டியான செயின்போட்டு கட்டிவைத்தாலும் அறுத்துக்கொண்டு வெளியில் வந்த்துவிடும். அப்படித்தான் அன்று ஒரு பையனை பின்புறம் வந்து கடித்துவிட்டது. அந்த பையனின் ஆனால்வெறிநாய் என்று பயந்து கத்தி கும்பல் சேர்ந்து ஒரே ரகளை. பின் வைத்தியரிடம் அழைத்துச் சென்று வைத்தியம் செய்து அனுப்பினோம்.விட்டதடி ஆசை? விளாம்பழத்து ஓட்டோடு என்று நாய் வளர்க்கும் ஆசை இனி வேண்டாம் என்று ஒரு நண்பருக்குக் கொடுத்துவிட்டோம்.???????.உங்கள் அனுபவங்கள் எப்படி?

3 comments:

பிரியமுடன்...வசந்த் said...

//அந்த மூடிபோட்டும் பக்கத்துவீட்டு கோழிக்குஞ்சுகளை தினம் ஒன்றாக அமுக்கி கொன்று போட்டுவிடும். //

ஹ ஹ ஹா...

vattukozhi said...

ஆமாம் வசந்த். அந்த நாய்குட்டியை வைத்துக்கொண்டு நான் முழித்த முழி எனக்கல்லவா தெரியும்

கதிர் - ஈரோடு said...

பாவம்ங்க நீங்க