ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Sunday, October 4, 2009

உயிர் காப்பான்.


எல்லோரும் வள்ர்ப்புப்ப்ராணிகள் வைத்திருப்பதில்லை. சிலர் அதன்மேல் உள்ள பிரியத்தினால் வளர்ப்பார்கள்.பாதுகாப்புக்காகவும் வளர்ப்பார்கள். வேறு சில காரணங்களுக்காகவும் வளர்ப்பார்கள். என்ன தெரியுமா? ந்ம்கண்களுக்குத்தெரியாத உருவங்கள் பிராணிகளின் கண்களுக்குத் தெரியுமாம்.? அதேமாதிரி நமக்கு வரும் உயிர் ஆபத்துக்களை அவைகள் தாங்கிக்கொண்டு நம்மைக் காப்பாற்றி விடுமாம். கிராமங்களில் இந்தமாதிரி நம்பிக்கைகள் ஏராளம். நாங்கள் பிரியத்துக்காக வளர்த்தோம். முதலில் ஒரு பொமேரியன் அல்சேசன் கிராஸ் . ஜானி என்று பெயர். பழுப்பு கலரில் சிங்கம் மாதிரி இருக்கும். எல்லா நாய்குட்டிகள் போல்தான் கண்ணில் கண்டதை எல்லாம் கடிக்கும். வீட்டுக்கு வருபவர்களின் ஒரு செருப்பை மட்டும் கொண்டுபோய் ஒளித்து வைத்துவிடும. துணிகளைக் கிழித்துவிடும். யாரையும் கடிக்காது. குழ்ந்தைகள் அதன்மீது ஏறிவிளையாடும். இரவு பத்துமணி ஆகிவிட்டால் புதியவர்கள் யாரும் எங்கள் வீதியில் நுழைய முடியாது. பாம்பு எதையாவது பார்த்துவிட்டால் ஒருவிதமாகக் குரைக்கும். ஒரு எதிர்பாராத துன்பத்தில் என் மனம்,உடல்நலன் பாதிக்கப்பட்டது. நம்பினால் நம்புங்கள். நன்றாக இருந்த எங்கள் நாய் நோய்வாய்ப்பட்டு ஒரேவாரத்தில் இறந்துவிட்டது. நான் சரியாகிவிட்டேன். காக்காய் உட்க்கார பனம்பழமா? ஆச்சரியம்தான்.

6 comments:

கதிர் - ஈரோடு said...

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

vattukozhi said...

நம் அறிவுக்கு எட்டாத விசயங்கள், விடை தெரியாப்புதிர்கள் நிகழ்ந்தது கொண்டுதான் இருக்கிறன கதிர்

பழமைபேசி said...

வணக்கமுங்க... ஈரோட்டு மாப்பு சொல்லித்தேன் வந்தேன்... சாயந்தரம் வந்து படிக்கறனுங்!!

வால்பையன் said...

//ந்ம்கண்களுக்குத்தெரியாத உருவங்கள் பிராணிகளின் கண்களுக்குத் தெரியுமாம்.? //

நாய்களுக்கு நிறகுருடு
அதற்கு கறுப்பு வெள்ளை தவிர வேறு வண்ணங்கள் தெரியாது! அபார மோப்ப சக்தியும், கேட்கும் திறனும் கொண்டு வெளி ஆட்களை கண்டு கொள்ளும்!

தெரியாத உருவங்கள் எல்லாம் டுபாக்கூர் நம்பாதிங்க!

vattukozhi said...

வால்பையா, அறிவுக்குத் தெரிவதெல்லாம் மனசுக்குத் தெரிவதில்லையே. ஒரு சமாதானம்தான்.

vattukozhi said...

பழைமைபேசி பேசிக்கிட்டே இருந்திராதீங்க்கோ. சீக்கிரம் வந்து பாருங்கோ