ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Wednesday, October 7, 2009

நடு இரவில் சிங்கம்.


அது ஒரு சித்திரை மாதத்து கோடைகாலம். வெக்கை தாளாமல் எங்கள் வீதியில் நிறையப்பேர் வெளியில் படுத்து உறங்குவார்கள். நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டில் நாலைந்து குடித்தனங்கள். என் மாமியாரும் வெளியில் படுத்திருந்தார். நடுராத்திரியில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் தட்டி எழுப்பினார். என்னவோ ஏதோ என்று வெளியில் வந்தோம்.

வெளியில் பத்து பதினைந்து ஆண்கள் கையில் தடிகள், டார்ச்லைட் சகிதம் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிகொண்டிருந்தார்கள். எங்கள் வீதியில் எத்தனயோ சண்டைசச்சரவுகள் இருந்தாலும் ஒரு பிரச்சனை என்றால் எல்லோரும் ஒன்று சேர்ந்தது விடுவோம். யார் வீட்டிலோ திருடன் புகுந்துவிட்டான் போல என்று நினைத்தால் விஷயம் பயங்கரமானது. சிங்கம் ஒண்ணு நம்ம வீதிக்குள் புகுந்துவிட்டதாம். பொம்பளைக எல்லாம் பிள்ளைகுட்டிகளோடு ஊட்டுக்குள்ள போய் கதவைச் சாத்தி இருங்க. ஆம்பளைக வாங்கப்பா. பக்கத்து தொண்டுப்பட்டியில் கால்தாரை தெரியுதாம். கன்னுக்குட்டி ஒன்றைக் காணோமாம். சிங்கம் இழுத்துக்கொண்டு போயிருச்சு போல, என்று பதறினார். எங்க வீட்டுக்காரரை அரைமனதோடு அனுபினேன். வேற வழி.

விடிய விடியத் தேடினார்கள். கடை,கண்ணிகளில் வெளியில் படுத்திருந்தவர்கள் எல்லோரும் உள்ளே ஓடிவிட்டார்கள். நடுஊருக்குள் எப்படி வந்தது. பக்கத்தில் எங்கேயும் காடுகள் இல்லையே. சர்க்கசில் இருந்து தப்பி வந்ததாயி இருக்குமோ, பக்கத்தில் எங்கேயும் சர்க்கஸ் நடக்கவில்லையே என்று பெண்கள் எல்லாம் வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தோம். கிடைக்கவேஇல்லை அந்த சிங்கம். அசந்துபோய் ஆண்கள் எல்லோரும் வந்து தூங்கி விட்டார்களா.

காலையில் பலத்த கூச்சல் கேட்டு , ஒளிந்திருந்த சிங்கத்தைத்தான் பிடித்துவிட்டார்கள் என்று ஓடினால் பக்கத்துவீட்டு சிறுவன் தரையில் விளுக்விளுக்கென இழுத்துக்கொண்டு கிடந்தான். அவன் கையில் ஒரு மின்கம்பி இருந்தது. தன் கோழிக்குஞ்சு இரைக்காக எறும்புகளை பொறுக்க வந்தவன், கீழே அறுந்தது கிடந்த எர்த் கம்பியை கயிறு என்று நினைத்து தொட்டிருக்கிறான். பலகை கொண்டு அந்த கம்பியை எடுத்து வீசி காப்பாற்றினார்கள். ஒரே ரகளைதான் போங்கள் அன்று.

சரி, சரி சிங்கம் என்ன ஆச்சு? என்று கேட்கிறிர்களா. பல நாட்கள் கழித்துத்தான் விஷயம் வெளியே கசிந்தது. எங்கள்வீதிக் குடிமகன் ஒருவர் மப்பில் வீடு மாறி வெளியில் படுத்திருந்தவர்களில் தன் மனைவி என்று எண்ணி பக்கத்து வீட்டம்மாவை எழுப்பிவிட்டார். விக்கித்துப்போன அந்தப்பெண் அவரைக் காட்டிக்கொடுக்காமல் சிங்கம், சிங்கம் என்று கத்தி ஊரைக்கூட்டி தான் தப்பித்துக்கொண்டார்.

இது எப்படி இருக்கு???

14 comments:

வால்பையன் said...

அந்த பக்கத்து வீட்டம்மா ஏன் காட்டி கொடுக்கல!

இந்த விசராணையில பல உண்மைகள் வெளிவரும் போல! விடாதிங்க இன்ஸ்டிகேஷன் தொடரட்டும்!

vattukozhi said...

பழைய குப்பையைக் கிளறினால் என்ன வரும். வால்

பிரியமுடன்...வசந்த் said...

// விக்கித்துப்போன அந்தப்பெண் அவரைக் காட்டிக்கொடுக்காமல் சிங்கம், சிங்கம் என்று கத்தி ஊரைக்கூட்டி தான் தப்பித்துக்கொண்டார்.//

ஹ ஹ ஹா

நல்ல நகைச்சுவை அனுபவம்

jaisankar jaganathan said...

நான் தான் அந்த சிங்கம் . கண்டுபிடிங்க பார்க்கலாம்

jaisankar jaganathan said...

//எங்கே வம்பிழுக்க வரக்காணோம்? அரசியலில் நான் இல்லை. காமராஜர் போன்றவர்களும் அரசியல்வாதிகள்தானே?(மனச்சாட்சி உள்ள //

உங்க profile ல அரசியல் பத்தி பார்த்தேன். அப்புறம் எப்படி இருக்கீங்க

vattukozhi said...

தொழில்நுட்ப அறியாமையினால் வந்த தவறு. ஆர்வம். மட்டுமே. நான் சாதாரண இந்திய பிரஜை. மட்டுமே . samje.

jaisankar jaganathan said...

நீங்க ம்ட்டுக் அரசியல்ல இறங்கினீங்கன்னா எங்கியோ பொயிடுவீங்க

vattukozhi said...

அந்த சிங்கம் அசிங்கம்

vattukozhi said...

நன்றி

jaisankar jaganathan said...

//அந்த சிங்கம் அசிங்கம்//

அக்கா ஒரு வார்த்தையில போட்டுத்தள்ளிட்டீங்களே.

நான் அந்த சிங்கம் இல்லை. எனக்கும் அதுக்கும் சம்பத்தம் இல்லை. சாரி நான் தப்பா சொல்லிட்டேன்.

☀நான் ஆதவன்☀ said...

சும்மாவா விட்டாங்க அந்த ஆளை?

வாத்துக்கோழி said...

சேலை மீது முள் பட்டாலும், முள் மீது சேலை பட்டாலும் நஸ்டம் சேலைக்குத்தானே. அந்தம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க விஷயம் கிடப்பில் போடப்பட்டது.

கதிர் - ஈரோடு said...

அக்கா...

உங்கள் இடுகையை தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்திருக்கிறேன்.

சுவையான எழுத்து நடை... தொடர்ந்து எழுதுங்கள்

வாத்துக்கோழி said...

நன்றி. நன்றி என்று சொல்லியே கும்பிட்டோம் கதிர் தம்பியே.