ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Thursday, January 21, 2010

பெரியாரும், பங்காரு அடிகளாரும், பெண்ணியமும்......

பங்காரு அடிகளாரின் சக்தி பீடமும் அவருடைய அருள்வாக்கைப்பற்றியும் அங்குவரும் பெண் பெண்பகதர்களின் பக்தியைப் பற்றியும் நான் இங்கு சொல்லவில்லை.அவருக்கு துதிபாடவும் நான் வரவில்லை.....அவரின்மிகப்பெரும் வெற்றிக்குக் காரணம் பெண்களின் மீது விதிக்கப்பட்டிருந்த சில தடைகளை உடைத்ததும்,...பெண்கள் சக்தியும்தான் காரணம் என்பேன்......

 சுமார் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மிகவும் எளிமையாக இருந்த இயக்கம் , ஆதிபராசக்தி கோயில் இன்று கல்லூரிகளாக விரிவானது முதல், காங்கிரஸ் மேடையில். ராஜீவ் காந்தியோடு அமரவைக்கப்பட்டதுவரை அவரின் மிகபெரும் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் பெண்கள்தான் என்பதை அவரே மறுக்கமாட்டார்.

 இன்றுகாலை அருகில் உள்ள  காய்கறிக்கடைக்குச்சென்றேன்.ரோட்டோரப்பெட்டிக்கடை அது. வண்ணம் அடிக்கப்பட்டு முன்புறம் சாணம் கொண்டு மெழுகி பளிச்சென்று இருந்த்து.கடைக்காரபெண் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்... அந்தப்பெண் மருவத்தூர் செல்ல சக்தி மாலை அணிந்திருந்தார். பார்க்கவே சந்தோசமாக இருந்த்து. ஒரு காலத்தில் அந்தப்பெண்ணிடம் பலர் காய்கறி வாங்கவே தயங்கிய காலம் ஒன்று இருந்த்து. இன்று அந்தப்பெண் எந்தப்பாகுபாடும் இல்லாமல்கருவறைவரை சென்று கடவுளைத் தொட்டு வணஙகுகிறாள் என்றால்அதற்குக் காரணம் பங்காரு அடிகளார்தான்.

 பெரியார் போன்று பல சான்றோர் ஏற்றிவைத்த ஜோதி இன்று மென்மேலும் பிரகாசிக்கிறது என்றால், இன்று பங்காரு அடிகளார் மூலம் கடவுளின் பேர் கொண்டு இன்னும் கொஞசம் பெண்ணியக்கதவுகளைத் திறந்து விட்டது என்பதில் எனக்குக் கொஞசம் மகிழ்ச்சி. கடவுள் இல்லை என்ற பெரியார் பிறந்த ஈரோட்டிலேயே,வருடாவருடம் செவ்வாடைப்பெண்கள் பேரணி ஈரோட்டை கலக்குவதைப் பார்த்திருப்பீர்கள். இது எப்படி சாத்தியமாச்சு..பெண்களின் கடவுள் பக்தி என்ற அம்சத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் அடிகளார்.இதுதான் அவர் வெற்றிக்குக் காரணம்.

 வீட்டிலேயே மாதவிலக்கன்று காலகாலமாக தள்ளிவைக்கப்பட்டு எதையும் தொடக்கூடாது என்று ஒதுக்கிவைகப்பட்ட பெண்..... இன்று எந்த நாளாக இருந்தாலும்மருவத்தூர் வரலாம்,..... கடவுளை தொட்டு பூஜை செய்யலாம் .....என்று சொன்னதும் எங்கூருப்பெண்கள் மத்தியில் பெரும் சந்தோசம் ஏற்பட்டது என்று சொல்லலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்தந்த ஊர் மாரியம்மன் கோவில்களில் ஒரு சிறிய இடத்தில் பராசக்தி படத்தைவைத்து பூஜை செய்வார்கள். இன்று அதன் பிரம்மாணடமான வள்ர்ச்சி பிரம்மிக்கவைக்கிறது.

 ஏங்க தெரியாமத்தான் கேட்கிறேன். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர். மலம் போன்று .....பெண்களுக்கு,.... மாதவிலக்கும் இயற்கையாகவோ அல்லது கடவுளாலோ படைக்கப்பட்டதுதானே, பெண்கள் என்ன எங்களுக்கு வேண்டும் வேண்டும் என்று கொடி பிடித்து வேண்டி விரும்பிப் பெற்றுக் கொண்டார்களா, என்ன..... அந்த சமயங்களில் படும் உடல்வேதனை, வெளியில் செல்லும்போது ஏற்படும் அசவுகரியங்கள், நாடாளும் ராணியாக இருந்தாலும் சரி(ஹிலாரி கிளிண்டனாக இருந்தாலு ம், எங்கூரு கருப்பாயாளாக இருந்தாலும்),,,...அவங்கவளுக்குத்தான் தெரியும்.....வேதனை.....


. போன வருடம் உறவினர்மகள் பெரியவள் ஆனாள். அப்போது அண்டை வீட்டுப்பெண்களும், உறவினர்களும் வந்து மஞ்சள் நீர் ஊற்றினார்கள். அவர்கள் வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் ஒரே பணியாள். அந்த வீட்டுப் பெண்மணியும் வந்து நீர் ஊற்றினார்கள். அதன்பிறகு அவர் வீட்டிற்குச் சென்ற  அந்த அம்மணி செய்த முதல் வேலை. 1. குளித்துவிட்டு வீட்டிற்குள் சென்றது. 2. பணியாளைக் கூப்பிட்டு ஒருவாரத்திற்கு என் வீட்டிற்கு வேலைக்கு வராதே. என்று சொன்னது....அந்தவீடு தீட்டு வீடாம். பணிபெண் அந்த தீட்டை அவர்கள்வீட்டில் இருந்து மூட்டை கட்டிகொண்டு போய் இவங்க வீட்டில் ஒட்ட வைத்துவிடுவாளாம்.....பின்பு அதை அழிக்க்முடியாதாம்.......வீடெல்லாம் தினமும் கழுவணுமாம்.... இது எப்படி இருக்குது...........அந்தப்பணிபெண் ஒரு வாரத்திற்கு அவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்த்து என்று சந்தோசப்பட்டது வேறு விசயம்.
 மறுபடியும் நான் சொல்லிகொள்கிறேன். நான் அந்தக்கோயிலுக்கு ஒருமுறைதான் போயிருக்கிறேன்.  (எதையும் ஒருமுறை அது எப்படி என்று தெரிந்து கொள்வது என் பழக்கம்)

 எனக்கு அடிகளாரிடம் மரியாதை வரக் காரணம், இருபது வருடங்களுக்கு முன்னால்எங்கள் உறவினர் ஒரு பெரியவர், ....அவரின் மருமகன் இறந்துவிட்டார்.  மகள் மீது அதீதப்பாசம் கொண்ட அந்தப்பெரியவரால் சம்பிரதாயப்படி மகளுக்கு வெள்ளை ஆடை தந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவினர்களைத் தடுத்துவிட்டார்.

 அடுத்து அவர் செய்ததுதான் இன்றும் பெருமைக்குரிய விசயம்.மூன்றாவது நாள் பங்காரு அடிகளாரை வரவழைத்து தன் மகளுக்கு செவ்வாடை அணிவித்து என்மகள் சக்தியின் அம்சம் என்று அறிவிக்கச் செய்தார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் எங்கூர்ப்பெண் விதவைகள் வெள்ளை ஆடையிலிருந்து மெல்ல மெல்ல காவி போன்ர வெளிர் ஆடைகள், இன்று எப்போதும் போல் வண்ண ஆடைகள் உடுத்த்தத் தொடங்கினார்கள்.


 தந்தை பெரியாரால் பல வகைகளில் போராட்டங்கள் மூலமும் மேடைபேச்சுக்கள் மூலமும் பேசப்பட்ட பெண்ணியம், அவரின் கடவுள் மறுப்பால் தயங்கியிருந்த பெண்கள், அவர் சொல்வது எல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான் போல என்று, ஒதுங்கியிருந்த பெண்கள்இன்று அடிகளாரின் கடவுள் பெயரால் கொஞசமாவது உடைத்துக்கொண்டு வெளியேவந்திருக்கிறார்கள் என்றால் இத்ற்கு ஒரு அடிகளாரும், கடவுள் பக்தியும் தேவைப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்.

.   நமக்கு நாமே பூட்டிகொண்ட  பல விலங்குகளை உடைக்க இன்னும் யாரெல்லாம் வரவேண்டியிருக்குமோ..


டிஸ்கி: இதனால் தெரிவது என்னவெறால்
 தாய்க்குலங்களின் ஆதரவு இருந்தால் எங்கேயும் ஜெயிக்கலாம்......

அது திரைப்படமாக இருந்தாலும் சரி,,,,தேர்தலாக இருந்தாலும் சரி......இது எக்ஸ்ட்ரா பாயிண்ட்.....நோட் த பாயிண்ட்.யுவர் ஆனர்....





50 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிச்சயமாக பெண்களை எல்லா நாளிலும் சாமிகும்பிடலாம் நீங்களே சாமியைத்தொட்டு அபிசேசம் செய்யலாம் என்று பல தடைகளிலிருந்து மீள செய்ததற்கு பாராட்டப்படவேண்டியவர்..

பின் குறிப்பெல்லாம் நல்லா குடுத்திருக்கீங்க..

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் உணர்வுகளை அழகாக சொல்லி இருக்கறீர்கள்...

Anonymous said...

இதுபோன்ற மாட்றங்கள் வரவேண்டும் என்றுதான்
பெரியார் விருபினார் ,இதை யார் செய்தலும் வரவேற்போம்
வாழ்த்துக்கள் நண்பரே .சி.நா.மணியன்

அகல்விளக்கு said...

சுவாசரசியாமான நல்ல விவாதங்களை எதிர்பார்த்து இந்த பின்னூட்டம்....

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல கருத்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

priyamudanprabu said...

பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

priyamudanprabu said...

மாதவிலக்கு பற்று முதலில் பெண்களுக்கு தெளிவு வேண்டும்

சாந்தி மாரியப்பன் said...

கூட்டுப்புழுக்களாக இருந்த பெண்கள், தடைகளை உடைத்துக்கொண்டு வருவதற்கு வழி செய்ததற்காக, நிச்சயமா அடிகளாரை பாராட்டணும்.

ஹேமா said...

எங்கே..இன்றைய தலைமுறையினர் ஓரளவு புரிந்துகொண்டாலும் பழைய தலைமுறையினர் விடுவதாயில்லையே !விழிக்க வைக்கும் பதிவு.நன்றி கண்ணகி.

Anonymous said...

விதவைகள் வரண்ட பூமி என்று வெளியே சொல்லி உள்ளே சல்லாபம் செய்பவருக்குப் பேர் ஸ்வாமிகாள் !

பெண்ணுரிமை கொடுத்துள்ளவருக்குப் பேர் அடிகளார், அம்மா !
ஆத்திகத்திலும் பெரியார்தான் வென்றுள்ளார்.

ராமலக்ஷ்மி said...

கருவறைவரை செல்ல அனுமதித்த ஆன்மீகவழியில் மட்டுமின்றி

//எங்கூர்ப்பெண் விதவைகள் வெள்ளை ஆடையிலிருந்து மெல்ல மெல்ல காவி போன்ர வெளிர் ஆடைகள், இன்று எப்போதும் போல் வண்ண ஆடைகள் உடுத்த்தத் தொடங்கினார்கள்.அந்தவகையில் அடிகளார் பாராட்டுக்குரியவர் ஆனார்.//

இப்படியான பெரிய சமூக மாற்றத்தையும் கொண்டு வந்த வகையில் அடியார் போற்றப்பட வேண்டியவரே.

//தாய்க்குலங்களின் ஆதரவு இருந்தால் எங்கேயும் ஜெயிக்கலாம்......//

:))! உங்களுக்கும் உண்டு:)!

கண்ணகி said...

நன்றிங்க முத்துலட்சுமி. ஆட்டோ வராம இருக்கத்தான் பின்குறிப்பு. ஹி....ஹி...

கண்ணகி said...

நன்றி சஙகவி

கண்ணகி said...

பெயரில்லா கூறியது.

புரிந்துகொண்டத்ற்கு நன்றிங்க. மாற்றங்கள் யார் செய்தாளும் வரவேற்போம்..இதுதாங்க பெரியாருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.மிகமிக நன்றிங்க.

கண்ணகி said...

நன்றி அகல்விளக்கு. வாங்க..வாங்க.

கண்ணகி said...

நன்றி ஆரூர்...

கண்ணகி said...

நன்றி. பிரியமுடன் பிரபு தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். பெண்கள் இப்போதுதான் ஓரளவு தெளிவு பெற்று வருகிறார்கள்.

கண்ணகி said...

நன்றிங்க அமைதிச்சாரல்.

கண்ணகி said...

வாங்க ஹேமா. முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..நாமெல்லாம் எதுக்கு இருக்கோம்..கொஞசம் கொஞசமா மாத்திடுவோம்...உங்கள மாதிரி நாலுபேர் துணையிருந்தால் போதும்..மாற்றங்கள் நிச்சயம் வரும்...

கண்ணகி said...

பெயரில்லா கூறியது....

இத்ற்குமுன் மற்றொரு பெயரில்லாதவர் கூறிய கருத்தைப் படியுங்கள். மாற்றங்கள் யார் கொண்டுவந்தாலும் வரவேற்றவர்தான் பெரியார்.

போலிச்சாமியார்களை நையப்புடைத்து களிதின்ன வைத்த பெண்கள் கூட்டத்தயும் பார்த்திருப்பீர்கள்.

கோயில் என்றால் ஓடிவரும் பெண்கள் கூட்டம், அரசியல் கூட்டங்கள், என்றால் விலகி ஓடுவார்கள்.

பெரியார் என்றும் பெரியார்தான். அதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. மாற்றுக்கருத்துள்ளவர்களையும் மதிப்பவர்தான் பெரியார்.

தங்கள் கருத்துக்கு நன்றி.

கண்ணகி said...

மிகமிக நன்றி ராமலசுமி தங்கள் மேலான ஆதரவுக்கு..

ஜோதிஜி said...

என்னைச் சொல்லிவிட்டு இங்கு வந்து பார்த்தால் மொத்தமும் திகைப்பும் பயமாய் இருக்கிறது. எங்கேயோ போய்க்கிட்டுருக்கிங்க. நீங்கள் சொன்ன ஆலயம் மாமனார் கட்டாயத்தின் பேரில் நான் போன போது பிடிக்கவில்லை. ஆனால் சராசரி கோவிலில் இங்க பார்க்கும் மொத்தத்திற்கும் பிறகு அவரின் கொள்கைகள், நோக்கங்கள் 100 சதவிகிதம் ஏற்றுக்கொள்வதாய் இருக்கிறது.

ஏதோ ஒரு நோக்கம். ஏதோ ஒரு வழி. அத்தனை பேர்களையும் குறிப்பாக பெண்களை ஒன்று இணைக்க வைத்துருப்பது மகத்தான சாதனை.

சமீபத்தில் ராமதாஸ் அவரை வம்புக்கு இழுத்த போது அவர் சொன்ன பதில் இன்னமும் அவர் மேலே உள்ள மரியாதையை அதிகமாக்கியது.

வணிகமயமாக்கல் தான். ஆனால் வரலாற்றில் சொல்லும் அளவிற்கு உள்ளே உள்ள அமைப்பு மொத்த குறைகளையும் தாண்டி இருப்பதும் உண்மை. மறுப்பதற்கில்லை.

தெளிவான நோக்கம், பார்வை. இடுகை. வாழ்த்துகள்

கண்ணகி said...
This comment has been removed by the author.
கண்ணகி said...

நன்றிங்க ஜோதிஜி...உங்கள் உழைப்புக்கும், உயரிய நோக்கத்திற்கும் முன்னால் நான் ஒரு கொசு...

Paleo God said...

//. நமக்கு நாமே பூட்டிகொண்ட பல விலங்குகளை உடைக்க இன்னும் யாரெல்லாம் வரவேண்டியிருக்குமோ..//


//(டிஸ்கி: அல்லது பின்குறிப்பு. ஏதோ மனசில பட்டத கொட்டிட்டேன். தலைப்பும் விசயங்களும் கொஞசமாவது பொருந்துதங்களா.....

இரண்டாவது விசயம். நான் கொஞம் பயந்த புள்ளைங்க. யாராவது திட்டறதாஇருந்தா நாகரீகமாத் திட்டுங்க. விவாதம் பண்ற அளவுக்கு எனக்கு விசய ஞான்மும் இல்லீங்க. ஏதோ எனக்கு தெரிஞ்ச பதிலைச் சொல்றனுங்க..சரியா....ரெடி.....ஸ்டார்ட்....ம்யுசிக்....

முதல் திட்டு ஈரோட்டிலிருந்து வரலாம். அது வால்பையனாக இருக்கலாம்.நான் ஹெல்மெட் போட்டுக்கிட்டேன் வால்..

தாய்க்குலங்களின் ஆதரவு இருந்தால் எங்கேயும் ஜெயிக்கலாம்......

அது திரைப்படமாக இருந்தாலும் சரி,,,,தேர்தலாக இருந்தாலும் சரி......இது எக்ஸ்ட்ரா பாயிண்ட்.....நோட் த பாயிண்ட்.யுவர் ஆனர்....//

மொதல்ல இந்த விலங்குகள் எல்லாம் உடைச்சிடுங்க..:)

பொதுவான பெண்களின் சங்கடங்கள் குறித்து எழுதுங்க. பலருக்கு (பெண்களும் சேர்த்து) அது பற்றிய புரிதல்கள் இல்லை. ஒரு பெண்ணால் மட்டுமே அது குறித்து தெளிவாய் எழுதமுடியும்.

வாழ்த்துக்கள்.:)

கண்ணகி said...

குட்டுக்கு நன்றிங்க பலாபட்டறை. கவனத்தில வச்சுக்கிறேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்குறீங்க கண்ணகி..

ஆதி மனிதன் said...

//இது எப்படி சாத்தியமாச்சு..பெண்களின் கடவுள் பக்தி என்ற அம்சத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் அடிகளார்.இதுதான் அவர் வெற்றிக்குக் காரணம்.//

அடிகளாரை பற்றி எனக்கு சில மாறுபாடான கருத்துக்கள் இருந்தாலும் நீங்கள் மேலே சொன்ன அத்தனையும் உண்மை.

ஆனால் அதே நேரத்தில் அம்மாவிடம் (அடிகளார்) கேட்டுதான் எல்லாம் செய்வோம் என பெரும்பாலான "அம்மா" பக்தர்கள் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் நண்பன் அவனுக்கு சிறுநீரகத்தில் கல் இருந்து அதை டாக்டர் ஆப்பரேசன் செய்ய வேண்டும் என கூறியும் "அம்மா" வேண்டாம் தேவையில்லை என கூறியதால் செய்துகொள்ளவில்லை.

டிஸ்கி: நான் ஆத்திகனோ, அடிகளாரை பிடிக்காதவனோ இல்லை. மனதில் தோன்றியதை கூறுகிறேன். பதிவு மிகவும் எளிமையாகவும் கருத்துள்ளதாகவும் இருக்கு.

கண்ணகி said...

நன்றி பட்டாபட்டி. முதல் வருகைக்கும். கருத்துக்கும்.

ஆதி மனிதன் said...

உங்க மனத புன்படித்திட்டேனோ (அடிகளார் பக்தர்கள் பற்றி கூறி)? அப்புறம்தான் நினைத்தேன் இதை ஏன் குறிப்பிட்டோம்னு. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மீண்டும் என் டிக்சிய படிக்கவும்.

"பட்டாபட்டிய" கண்டுக்கிட்ட நீங்க என் பின்னூட்டத்தை கண்டுக்கலை:(

கண்ணகி said...

மாறுபாடான கருத்துக்கள் யாரிடம் வேண்டுமானாலும் யாருக்கும் இருக்கும். அதை ஏற்றுக்கொளவ்தும், ஏற்றுக்கொள்ளாத்தும் அவரவர் விருப்பத்தையும் அறிவையும், சூழ்நிலையையிம் பொறுத்து இருக்கும்

உங்கள் நண்பர் பற்றி சொன்னீர்களெ...அதைத்தான் பெரியார் எதிர்த்தார், மூடநம்பிக்கை என்று சொன்னார்.

மரம் வைத்தவன் தண்ணி ஊற்றுவான் என்று வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வார்களா யாரும்.

கடவுளே நோய்களைத்தீர்த்துவைப்பார் என்றால், நோயை எத்ற்குக் கொடுத்தார்.

எத்ற்கு இத்தனை மருத்துவமனைகள், டாக்டர்கள், நோயாளிகள்...

.எதையும் முடிந்தவரை அற்வின்துணை கொண்டு செய்யவேண்டும். இல்லாவிடில் நஸ்டம் நமக்குத்தான்.

கண்ணகி said...

நன்றிங்க.ஆதிமனிதன் உங்களுக்கு பதில் சொல்வதற்குள் சில இடையூறுகள். அதனால்தான் தாமதம். உங்களது போன்ற மன்ம்திறந்த கருத்துக்கள்தான் எனக்குத்தேவை. அப்போதுதானே என்னிடம் தவறு இருந்தாலும் திருத்திக்கொள்ளமுடியும். நன்றிங்க.உங்கள் முதல் வருகைக்கும், வெளிப்படையான கருத்துக்கும்.தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

Paleo God said...

அட கொடிவேரி பத்தி இப்பதாங்க படிச்சேன், போன வருசம் அங்கதான் கோவை நண்பர்களோட வந்திருந்தேன். திடீர்னு நல்ல மழை வேற. செம வழுக்கல் தண்ணி விழுற இடத்துக்கு போறதுக்கு போட்டிருக்கிற கம்பிங்கள பிடிச்சிகிட்டே நடந்துபோய்.. ஸூப்பர், ஆனா அந்த தண்ணி நுரைச்சிட்டு வந்ததுதான் பார்க்க பயமா இருந்தது (கெமிக்கல் எதாவது கலந்து உட்டங்களான்னு - எங்கூரு வற்றா நதி கூவம்க தப்பா எடுத்துக்காதீங்க:) எல்லாம் சொன்னீங்களே அங்க வேகவெச்ச மக்காச்சோளம் வாங்காதீங்கன்னு சொல்லலீங்களே..:(

Muruganandan M.K. said...

நல்ல பதிவு.
முக்கியமாக மாதவிடாய் நேரங்களிலும் தள்ளி வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியது மிகவும் முக்கியம் எனப்படுகிறது.

தமிழ் உதயம் said...

ஆத்திகத்தையும், நாத்திகத்தையும், பெண்ணியத்தையும் வித்தியாசமான கோணத்தில் பார்த்தீர்கள், அதனால் கிடைத்த RESULT நல்லதுக்கு தானே.

அம்பிகா said...

\\எங்கூர்ப்பெண் விதவைகள் வெள்ளை ஆடையிலிருந்து மெல்ல மெல்ல காவி போன்ர வெளிர் ஆடைகள், இன்று எப்போதும் போல் வண்ண ஆடைகள் உடுத்த்தத் தொடங்கினார்கள்.அந்தவகையில் அடிகளார் பாராட்டுக்குரியவர் ஆனார்.\\
சிலிர்க்க வைக்கிறீங்க கண்ணகி.

கண்ணகி said...

நன்றி அம்பிகா....

கண்ணகி said...

நன்றிங்க....தமிழுதயம் சார்.

கண்ணகி said...

நன்றிங்க மருத்துவர் சார். மறுபடியும் நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

கண்ணகி said...

நன்றிங்க. பலாபட்டறை. இதுவரை தண்ணிர் தூய்மையாகத்தான் இருக்கிறது. சோளக்கருது என்னாச்சு.

தாராபுரத்தான் said...

உங்கள் உணர்வுகளின் வலியை உணர முடிகிறது.

தாராபுரத்தான் said...

பாராட்ட தக்க பதிவம்மா.இப்பத்தான் நம்ம பெண்கள் தைரியமாக கலர் புடவை கட்டுகிறார்கள்..

கண்ணகி said...

நன்றிங்க..தாராபுரத்தான் சார்.பெண்களின் வலியை புரிந்துகொண்டத்ற்கு நன்றி.

வேலன். said...

நல்ல கருத்துக்களை சொல்லியு்ள்ளீர்கள் நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

கண்ணகி said...

நன்றிங்க வேலன். வருகைக்கும் கருத்துக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

//ஏங்க தெரியாமத்தான் கேட்கிறேன். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர். மலம் போன்று பெண்களுக்கு,.... மாதவிலக்கும் இயற்கையாகவோ அல்லது கடவுளாலோ படைக்கப்பட்டதுதானே, பெ//

”நச்”!

சிங்கக்குட்டி said...

இறைவன் படைப்பில் அனைத்தும் சமம்.

அவன் யாரயும் எப்போதும் ஒதுக்குவதில்லை, அது மனிதனுக்கு மட்டுமே உள்ள சுயநல புத்தி :-)

கண்ணகி said...

ஆமாங்க சிங்கக்குட்டி.
நன்றி முதல் வருகைக்கு..

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்..

http://niroodai.blogspot.com/

கண்ணகி said...

நன்றி மலிக்கா. முதல் வருகைக்கும், கருத்துக்கும்.