ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Monday, January 4, 2010

பெண்ணுக்கு பெண்ணே எதிரி...

பெண்ணுக்கு பெண்ணெஎதிரி.......பல சமயங்களில்........அதிலும் பழய சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதில் சில பெண்கள் இன்னும் மாறாமல் இருக்கிறார்கள்.

       10நாட்களுக்கு முன் பக்கத்து ஊரில் எங்கள் உறவின்ர் திடீர் மாரடைப்பில் இறந்துவிட்டார்.அவர் மனைவி 40வயதுக்குமேல் இருக்கும். ஆனால் இன்னும் இளமை மாறாத தோற்றம் உடையவர்.  அவரைப்பார்க்க மீண்டும் நானும் உறவுப்பெண்கள் சிலரும் போனோம்.பத்து நாட்களுக்குமுன் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பத்ற்கும் பத்துவயது கூடிதெரிந்தார்.துணையை இழந்த சோகம்.......மனதள்வில் மிகவும் பாதிக்கப்ப்ட்டிருந்தார்...... சிறிய வெள்ளைப்பூக்கள் போட்ட சேலையில் ,  வெற்று நெற்றியுடன்அவரை என்னால் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.......கொஞச நேர அழுகை, பேச்சுக்களுக்குப்பின் நான் சொன்னேன்.
நான்.................... ”நீங்கள் எப்போதும்போல் இருங்கள்.  இந்த வெள்ளை ஆடை வேண்டாம்.”
கூடவந்தவர்.......” கலர் புடவை வேண்டுமானால் கட்டிகொள். பொட்டு வேண்டாம்.”

கூடவந்த இன்னொருவர், அவரின் உறவினரும் சமீபத்தில்தான் இறந்தார். அவர் மனைவிக்கு இன்னும் சின்னவயது.

அவர்.........”ஆமாம்..பொட்டு வேண்டாம்..... அந்தப்பொண்ணும் பொட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்....... அவர் போனதற்குப்பிறகு எதுவும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டாள்,..... நானும் இப்போது அவளுடன் போகும்போது பொட்டு வைப்பதில்லை”.....என்று சொல்லி மீண்டும் அழுதார்..

நான்.......”அக்கா..இதை அப்படி நினைக்காதீர்கள்.அவர்கள் நாலு இடம் வெளியில் போகவரவேண்டும். இந்தக்கோலத்துடன் போய் விதவை என்று ஏன் வெளிக்காட்ட்வேண்டும்”......அந்தப்பெண்ணையும் வைத்துக்கொள்ளச்சொல்லுங்கள்.....நீங்கள் ஊக்கம் கொடுங்கள்.யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.:” என்றேன்...”..மவுனம்தான் பதில்..

நாங்கள் இப்படிப்பேசும்போதே நாங்கள் பார்க்கச்சென்ற பெண் முகத்தை மூடிகொண்டு பொங்கிபொங்கி அழுதார். என்னால் தாங்கவே முடியவில்லை

ஓரிரு பெண்கள் பொட்டு வைத்துக்கொண்டாலும் அறிந்தவர்கள்அவளை வித்தியாசமாகப்பார்க்கிறார்கள். யாரிடமாவது சிரித்துப்பேசிவிட்டால் அவளை ஒரு ஒழுக்கம் குறைந்த பெண் போன்ற விமர்சனங்களை மறைமுகமாக வைக்கிறார்கள்...அவள் செயலகளை கண்கொத்திப்பாம்புபோல் கண்காணிக்கிறார்கள். மவுனமாக சோகப்போர்வை போர்த்திக்கொண்டிருந்தால்தான் இவர்களுக்கு பிடிக்கும்போல....


 இன்னொரு பெண் ஒருநாள் வெளியில் நின்றுகொண்டிருந்தார்.நான் விசுவின் மக்கள் அரங்கம் இறுதிச்சுற்று தேர்வுக்காக கிளம்பி வெளியில் வந்தேன். எதிரில் என்வீட்டில் துவைக்கும் பெண் வந்தார். அவர் ஒரு விதவை.....நான் நின்றுசாவியைக்கொடுத்துவிட்டுப்போய்விட்டேன்......மாலையில் தேர்வாகாமல் திரும்பிவந்தேன்.........அதற்கு அந்த அம்மாவின் கமெண்ட்.....”.பத்துநாட்களாக ஜெயித்துவந்த நீங்கள், அவளைப்பார்த்துவிட்டுப்போனதால்தான் தோற்றுவிட்டீர்கள்........திரும்பிவந்து தண்ணீர்குடித்துவிட்டு போயிருந்தால் ஜெயித்திருபீர்கள்”.....எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை........”

 ”இல்லை அக்கா.....அது எந்தவறுதான்.........நான் நடுவில் கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திணறிவிட்டேன்.அதனால்தான் ரிஜ்க்ட் ஆகிவிட்டேன்” என்றதும் பேசாமல் இருந்துவிட்டார்.இதுதான் “பழி ஒருபக்கம் ....பாவம் ஒரு பக்கம் என்பது”.

கணவர் இறந்தபிறகு பெரும்பாலும் எந்தப்பெண்களும் மனதளவில் எதிலும் விருப்பமில்லாமல் துறவிகளாகத்தான் வாழ்கிறார்கள்.கூடவே உடன்கட்டை ஏறிவிடமுடியுமா என்ன.....குழந்தைகளை ஆளாக்கிதானே ஆகவேண்டும்.அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துதானே ஆக வேண்டும்.அதிலும் சின்னவயதுப்பேண்கள் என்றால் வாழ்க்கை பூரா இப்படியே வாழ்ந்து தீர்த்தாகவேண்டுமா. அவளுக்கு என்று ஒரு மன்ம் உணர்வுகள் எதுவும் இருக்காதா....அவளுக்குமகிழ்ச்சியான வாழ்க்கையை கட்டாயம் அளிக்க வேண்டும்... அவளுக்கு மறுதிருமணம் செய்வது நல்லது.

முன்பெல்லாம் 10நாள் கல்யணம் என்று சொல்வார்கள். இப்போது இரண்டுநாள் திருமணம் ஆகி, அதுவும் இப்போது ஒரெநாளில்திருமணம் ரிசப்சன் என்று மாறிவிட்டது.சீர் எதுவும் செய்வதில்லை.....எல்லாம் மாறிவிட்டது....

ஆனால் இறப்பிற்குமட்டும் செய்யும் அந்த பழய சம்பிராதாங்களை மட்டும் ஏன் பிடித்து தொங்க்கிகொண்டு இருக்கவேண்டும். .....” வெள்ளைப்புடவை...நடுராத்திரியில் சில விதவைப்பெண்கள் அந்தப்பெண்ணின் மாங்கல்யத்தைக் கழட்டுவது.” என்று........  கடும் சோகத்தில் இருக்கும் பெண்ணை மீண்டும் தூள்தூளாக நொறுங்கிபோகவைக்காதா?.......இது தேவையா...

வீட்டிற்கு வந்து என்கணவரிடம் சொன்னதும் அவர்....”இதை ஆண்கள் யாராவது சொன்னமா.......நீங்கள்தானே சொன்னீர்கள்.....அந்தக்காவும், அவர் தம்பி மனைவியும் அவர் இறந்தபிறகு சாப்பிடவில்லையா....தூங்கவில்லையா...என்ன நின்றுவிட்டது....பொட்டு என்ன பாவம் செய்தது” பெண்ணுக்கு பெண்தான்எதிரி” என்றார்......

அவர் சொன்னது எனக்கு சரியாக இருந்தாலும் ....”உங்கள் மாதிரி ஆண்வர்க்கங்கள் முதலில் ஏற்படுத்திக்கொடுத்ததைத்தான்  இப்போது இன்னும் இவர்கள் செய்கிறார்கள்” என்று ஒரு பிடிபிடித்தேன்.

எந்தச்சம்பிராதயங்களாக இருந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்........அதில் ஒருதரப்பை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை....அதை மாற்றுவதில் இருபாலாரும் சேர்ந்துதான் செயல்படவேண்டும்....இல்லாவிட்டால் ”இன்று  நான்...நாளை நீ....” என்பது பெண்களுக்கு மட்டும் தொடர்கதை ஆகிவிடும்.

டிஸ்கி: புலிகேசி....நான் எழுத இருந்ததை நீங்கள் முந்திக்கிட்டாலும்....அந்தப்பெண்ணின்  யுகங்கள் தாண்டிய கண்ணீர்.............நீங்கள்தான் தூண்டுகோள். நன்றி புலவரே....


17 comments:

Sangkavi said...

நல்ல கருத்துள்ள பதிவு....

2010லும் இப்படிபட்ட பெண்களா.....?

ஜோதிஜி said...

அவசரமில்லாமல் ஆழமாய் யோசித்து படைத்த உங்கள் கருத்துக்கு நன்றி. மிக நல்ல முன்னேற்றம் எழுத்தில், வடிவமைப்பில், பிழையின்று மிக மிக நன்றாய், பாராட்டும் அளவிற்கு.

நன்றி.

tamiluthayam said...

உலகில் எல்லாமே மாறக்கூடியவை தான். சாஸ்திர சம்பிரதாயம் மட்டும் விதி விலக்காகுமா. இந்த பத்து வருஷம் பெண்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொடுத்துள்ளது. இன்னும் பத்தாவது வருஷத்தில் நிறைய மாற்றம் வரும். அப்போது யாரும், யாராலும் பாதிக்கப்பட மாட்டார்கள். உங்கள் தளத்திற்கு இன்று தான் முதல் முறையாக வந்துள்ளேன். வாருங்கள் நம் வலைப்பூவுக்கு

kannaki said...

இன்னும் மாறாத மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள் சங்கவி. நன்றி முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

kannaki said...

நன்றி.....நன்றி......ஜோதிஜி.....

kannaki said...

நீங்கள் சொல்லுவது உண்மை. தமிழ் உதய்ம்.ஆனாலும் மாறாத மனிதர்களால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதை கண்முன் பார்க்கும்போது மனது வலிக்கிறது. நன்றி முதல் வருகைகும், முதல் பின்னூட்டத்திற்கும்.

jaisankar jaganathan said...

//மாறாத மனிதர்களால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதை கண்முன் பார்க்கும்போது மனது வலிக்கிறது//

unmai akka. kalam marum.

kannaki said...

மாறும் என்ற நம்பிக்கைதான் என்றும் மாறாதது ஜெய்.

அண்ணாமலையான் said...

காலத்துக்கேற்ற தேவையான பதிவு.. வாழ்த்துக்கள்...

அம்பிகா said...

நல்ல கருத்துள்ள இடுகை.
உண்மையில் பெண்ணுக்கு பெண்ணே தான் எதிரி.
இதைப் போன்ற விமர்சனங்கள் பெரும்பாலும் பெண்களிடமிருந்தே எழுகின்றன.
தமிழுதயம் கூறுவதைப் போல காலம் மாறும்.

kannaki said...

நன்றி. அன்ணாமலையான்.

நன்றி அம்பிகா.

T.V.Radhakrishnan said...

கருத்துள்ள பதிவு

amaithicchaaral said...

//மாறாத மனிதர்களால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதை கண்முன் பார்க்கும்போது மனது வலிக்கிறது.//

நிதர்சனமான உண்மை மேடம். நன்றாக எழுதுகிறீர்கள், தொடருங்கள்.

http://amaithicchaaral.blogspot.com

தாராபுரத்தான் said...

பாராட்டியே தீர வேண்டிய பதிவுயம்மா.வாழ்க வளமுடன்.

kannaki said...

நன்றிங்க...ராதாகிருஸ்ணன்...தங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.....பார்வையிட நண்பருக்கு பரிந்துரை செய்த்தற்கும்....நன்றிங்க. நன்றிங்க....

kannaki said...

நன்றி...அமைதிச்சாரல்..

kannaki said...

நன்றி....தாராபுரத்தான் சார்...