ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Monday, September 28, 2009

ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு????????


என் கணவ ரும்கால்நடை வைத்தியர் ஒருவரும் நண்பர்கள். வெளியில் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். அன்று ம அப்படித்தான் ஒரு எருமைக்கு வைத்தியத்துக்காக இருவரும் சென்றார்கள். சென்றது ஒரு தோட்டம். பின் ஒரு அடி அகலம் மட்டுமே உள்ள குறுகிய வரப்பில் , பைக்கில் இருவரும்.சென்றிருக்கிறார்கள். பக்கவாட்டில் ஒரு நூஉறடி தூரத்தில் வேறொருவர் எருமை ஒன்றை மேய்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்.

இந்த விலங்குகள் எல்லாம் டாக்டரை நன்றாக ஞாபகம் வைத்த்ருக்கும்????. அந்த எருமை நல்ல பாய்ச்சலான எருமை, வேறு. . .அந்த எருமைக்கு டாக்டர் மேல் என்ன கோபமோ ? இவர்களைக் கண்டதும் கயத்தை அறுத்துக்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்ததிருக்கிறது. எருமை ஓடி வருவதைப் பார்த்ததும் இவர்களும் வண்டியை வேகமாக ஒட்டி இருக்கிறார்கள். ஆனாலும் அந்த எருமை இவர்களை விடவீல்லை.

பின்புறம் வந்து கொம்பை பம்பரில் குத்தி வண்டியை தூக்கிவிசிவிட்டது. வரப்பின் மறுபுறம் நுஉரடி ஆழக்கிணறு. நல்லவேளை இவர்கள் மறுபுறம் விழுந்துவிட்டார்கள். அத்தோடு விட்டதா அந்த எருமை?? இவர்களை துரத்த ஆரம்பித்துவிட்டது. ஒருபுறம் கிணறு. மறுபுறம் துரத்தும் எருமை?? ஆஹா ? என்ன சிச்சுவேசன்? ஒரே களேபரம்தான். டாக்டர் ஓடிப்போய் அருகில் இருந்த தென்னை மரத்தில் ஏறிக்கொள்ள, என் கணவர் இன்னொருபுறம் விழுந்தடித்து ஓட, அந்த காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
நல்லவேளை. அதற்குள் எருமைக்காரர் வந்து எருமையைப் பிடித்து கட்டிவிட்டார். அதற்கு அப்புறம்தான் டாக்டர் மரத்தை விட்டு இறங்கினார். வெகு நாட்கள் இந்த நிகழ்ச்சியைச் சொல்லிச் சொல்லி என் கணவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

11 comments:

Unknown said...

அந்த எருமை நீங்க இல்லையே

Unknown said...

அந்த எருமை நீங்க தானே

Unknown said...

ஏங்க உங்க கணவர் மாதவி இப்பவும் பாக்க போறாரா. என்னா மதுரை எரிஞ்சு நான் பார்த்ததில்லை

ஈரோடு கதிர் said...

எருமை இப்படியெல்லாம் பழிவாங்குகிறதா

ஆச்சரியம்தான்

ஆனாலும் நகைப்பு

vattukozhi said...

த்ங்கள் வருகைக்கு நன்றி ஜெய்சங்கர். நான் கண்ண்கியாக இல்லாவிட்டாலும் என் கணவர் ராமன் தான்.

தேவன் மாயம் said...

ஒரே களேபரம்தான். டாக்டர் ஓடிப்போய் அருகில் இருந்த தென்னை மரத்தில் ஏறிக்கொள்ள, என் கணவர் இன்னொருபுறம் விழுந்தடித்து ஓட, அந்த காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
நல்லவேளை. ///

ரொம்பக் காமெடியாத்தான் இருக்கு!!

Unknown said...

அக்கா நான் சும்மா ஜோக்குக்கு பண்ணினேன். உங்க கணவர் ராமரா. எனக்கு எப்படி தெரியும்.

கண்ணகி said...

கவலைப்படாதீர்கள். ஜெய்சங்கர். நான் தொட்டால்சிணுங்கி இல்லை. நானும் ஜோக்குக்குத்தான் சொன்னேன்.

Unknown said...

//மனச்சாட்சிதான் என் முதல் கடவுள்//

அரசியலில் இதெல்லாம் டூப்பு. காசுதான் டாப்பு

கண்ணகி said...

ஆமாம் டாக்டர் சார். நடந்ததை நினைத்தால் இன்றும் சிரிப்புதான்

கண்ணகி said...

எங்கே வம்பிழுக்க வரக்காணோம்? அரசியலில் நான் இல்லை. காமராஜர் போன்றவர்களும் அரசியல்வாதிகள்தானே?(மனச்சாட்சி உள்ள).