ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Friday, September 25, 2009

இம்சை அரசனின் (எங்க வீட்டுக்காரர்] பிரதாபங்கள் டும். டும்?

ஐயா, எங்க வீட்டுக்காரர் ரொம்பவும் நல்லவர். யாரும் தப்பா நெனைச்சுராதீங்கோ? ( ஒரு பாதுகாப்புக்குத்தான்) ஒரு நாள் என் பையன் ராத்தரியில் பாத்ரூம் போவதற்கு எழுந்திருக்கிறான். எப்போதும் என்னைத்தான்எழுப்புவான் ? அம்மாவின் வீரம் அவனுக்குத் தெரியுமே? அன்று ஏனோ என்னால் எழ்முடியவில்லை. அவன் அப்பாவிடம் ஏதோ பேசிய சத்தம் கேட்டது. சரி அவர் கூட்டிக் கொண்டு போய்இருப்பார் என்று எண்ணி கண் அயர்ந்து விட்டேன்.
காலையில்தான் தெரிந்தது, என் மகனுக்கு அடி விழுந்த விஷயம்?
ஏன் என்று கேளுங்கள்?
ஏன் கணவர் ஒரு கனவு கண்டுகொண்டு இருந்திருக்கிறார்? எங்கள்விட்டுக்குள் ஒரு திருடன் நுழைவது போல் ? திடுக்கிட்டு க்ண் விழித்திருக்கிறார். சரியாக எங்கள் பையன் எழுப்பியதும் திருடன் என்று நினைத்து பளார் என்று ஓங்கி விட்டிருக்கிறார் ஒரு அறை?
பத்து வயது மகன் தாங்குவானா? கத்தி விட்டிருக்கிறான். அழுது கொண்டே அப்பா நான்தான், என்றதும்தான் கனவு கலைந்து முழிப்பு வந்திருக்கிறது சர்ருக்கு? என் கணவருக்கு எப்போதுமே திடிரென்று தூக்கம் கலைந்தால் கனவு கலைந்து நிகழ்காலம் புரிய சிறிது நேரமாகும். இது மாதிரி அனுபவங்கள் என் கணவரால் எனக்கு நிறைய கிடைத்திருக்கிறது? சமயம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
இது எப்படி இருக்கிறது?????

No comments: