ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Wednesday, September 8, 2010

கால்நடை மருத்துவருன்னா சும்மாவா...

மருத்துவக்கனவில் இருக்கும் என் உறவினரின் மக்ளுக்கு.சீட்  கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது...அடுத்து என்ன படிப்பது என்ற ஆலோசித்தோம்...அப்போது என் சினேகிதி கால்நடை மருத்துவம் படிக்கலாம்...என்றாள்..

”மாட்டு டாக்டருக்கா” என்று விளையாடுக்குக் கேட்டுவிட்டேன்.....அதென்ன அப்படி ஒரு இளக்காரம்....அவ்ங்களோட மதிப்பு தெரியுமா???....கிராமங்கள்ல்ல போய்ப்பாரு....அவங்களுக்கு இருக்கற மரியாதையை..விவசாயிகள் மனிதர்களைப்ப் போலவே கால்நடைகளையும் மிகவும் நேசிப்பார்கள்....கால்நடைகள் இறந்துவிட்டால் மனிதர்கள் இறந்தால் துக்கம் விசாரிப்பதுபோலவே துக்கம் விசாரிக்கும் பழக்கம் கிராமங்களில் உண்டு...அந்த வாயில்லா ஜீவன்களுக்கு வைத்தியம் பார்ப்பவரை கடவுளைப்போல மதிப்பார்கள்....தெரியுமா...

இங்க பாருடி....காலநடை மருத்துவம் படிச்சவர்தான் K.P.ராமலிங்கம் எம்.பி.....சுனாமி வந்தப்போ கடலூர் கலெக்டரா இருந்தாரே...ராதாகிருஸ்ணன்,I.A.S அப்புறம் எஙகூரு பக்கத்து பெருந்துரைக்காரரு  ராமசாமி..I.A.S இன்னும் எத்தனை ஐ.பி.எஸ் இருக்காங்க தெரியுமா...

ஹியூமன் டாக்டருக்கும், வெட்னரி டாக்டருக்கும் ஒரே மாதிரியான சம்பளம்தான்,..ஒரே கேடர்தான். தெரிஞ்சுக்க..


.பொரிந்து தள்ளிவிட்டாள் என் சினேகிதி..சட்டியில போட்டு வறுத்தெடுக்காத குறையா வறுத்தெடுத்துவிட்டாள்...ஏன்னாஅவங்க ஊட்டுக்காரரு வெட்னரி டாக்டர்...

இவளேதான் “ஒரு சினிமா பார்க்க முடியுதா....மாடு கன்னு போடுல,” “ நஞசு போடுல்லன்னு... தியேட்டர்லயே வந்து பாதியிலேயே கூட்டிட்ட்டுப்போய்டறாங்க”. அத்னாலே சினிமா பார்க்கறதேயே விட்டாச்சுன்னு” ..ன்னு செல்லமா அலுத்துக்குவா...

உண்மையில் எல்லோருமே கால்நடை மருத்துவப்(B.V.Sc.) படிப்பைப்ப்ற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள்...அல்லது அதன் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்..

கால்நடை மருத்துவம் படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது...வேலைவாய்ப்பு இருக்கிறது...அரசு வேலை சீக்கிரம் கிடைக்கிறது...அப்படிக் கிடைக்கவில்லை என்றால் கூட தனியாக வைத்தியம் செய்யலாம்...அதிலேயே M.V.Sc...., Phd....போன்ற படிப்புகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது...ஒரு சாப்ட்வேர் எஞ்சீனியர் வாங்கும் சம்பளத்தை அவ்ர்கள் உள்ளுரீலேயே பெறலாம்...வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது.....

அதிலும் இந்த்த்துறை பெண்களுக்கு மிகவும் ஏற்புடையது....ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பெண் கால்நடை மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.. சென்னையில எங்கள் தோழி ஒருவர் வெளியூரெல்லாம் விமானத்துல பறந்துபோய் வளர்ப்புப் பிராணிகளுக்கு வைத்தியம் பார்க்கிறார்....

அதுனாலே கால்நடை மருத்துவத்த மிஸ் ப்ண்ணீராதீங்க....இந்த வருடம் கவனத்துல வைங்க...

63 comments:

க.பாலாசி said...

சரிதானுங்க... உயிர்களை காப்பாற்றும் ஆற்றல் படைத்த மருத்துவர்கள் அனைவருமே வணங்கப்படவேண்டியவர்கள்தான்...எந்தஉயிராயிருந்தாயென்ன?

துளசி கோபால் said...

எங்கூர்லே மனுச டக்குட்டர் படிக்க சீட் கிடைச்சாலும் கிடைக்குமே தவிர மிருக டாக்குட்டர் படிக்க இடம் கிடைப்பதே ரொம்பக் கஷ்டம்.

அதுவும் லஞ்சலாவண்யம்(??) இல்லாத நாடாச்சா..... மெரிட்லே தான் இடம்.

தோழியின் மகளும் மருமகனும் கால்நடை மருத்துவர்கள்தான்.

ஞாஞளஙலாழன் said...

நல்ல பதிவு. மருத்துவமும் பொறியியலும் தவிர வேறு ஆயிரம் துறைகள் இருக்கின்றன..ஏன், பொறியியலில் கூட நிறைய நல்ல பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் ஒருவர் இ.சி.இ எடுத்தவுடன் எல்லோரும் இ.சி.இ. எடுக்கத் தொடங்குவார்கள் (எல்லோரும் கடைசியில் போவதென்னவோ ஐ.டி. தான்)...இங்கே சுயமாக தனக்குப் பிடித்த துறை எடுத்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். திறமையான மாணவர்கள் எல்லோரும் ஒரே துறைக்குள் நுழைவதால் மற்ற துறைகள் பின் தங்க ஆரம்பித்து விடுகின்றன. பின்னர் எப்படி வேலை வாய்ப்பு வரும்?

Prathap Kumar S. said...

பாலாசி சார் சொன்னதை அப்படியே ரிப்பிட்டு அடிக்கிறேன்...

கண்ணகி said...

நன்றி...பாலாஜி...

கண்ணகி said...

ஆமாம்..டீச்சர்...லஞ்சலாவண்யம் இல்லாமல் எங்கே கிடைக்கிறது...

கண்ணகி said...

ஞாஞள்ங்லாழ்ன்...அப்பா இப்படி ஒருபேர் எப்படி கண்டுபிடிச்சீங்க...

நீங்கள் சொல்வது சரி..ஒருத்தர் ஒன்றை எடுத்தால் எல்லோரும் அதேதான் எடுப்பார்கள்..நன்றி....????

கண்ணகி said...

நன்றி. பிரதாப்..

கண்ணகி said...

நன்றி..தமிழுதயம் சார்...உங்கள் பின்னூட்டாம் தவறுதலாக டெலிட் ஆகிவிட்டது..நீங்கள் சொன்னதுபோல் விவேக் ஒரு படத்தில் கால்நடை மருத்துவர்கள் வைத்து காமெடி பண்ணியிருப்பார்...அது வருந்தத்தக்கது..

ஹேமா said...

இப்போதெல்லாம் நம்மவர்கள் மருத்துவம்,கணக்கியல்,சட்டம் தவிர்த்து இன்னும் பலவற்றைப் படித்து அந்தத் துறைகளில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.
மகிழ்ச்சியே !

Chitra said...

அதானே..... சூப்பர் சான்ஸ்!

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு கண்ணகி.

//கிராமங்கள்ல்ல போய்ப்பாரு....அவங்களுக்கு இருக்கற மரியாதையை..விவசாயிகள் மனிதர்களைப்ப் போலவே கால்நடைகளையும் மிகவும் நேசிப்பார்கள்...//

உண்மை. நல்லா சொல்லியிருக்கீங்க.

கண்ணகி said...

ஆமாம் சித்ரா...கிராமங்களில் பணியாற்றவேண்டுமெ என்ப்தால் கூட இதை நிறையபேர் தவிர்க்கின்றனர்..

Anonymous said...

Blogger க.பாலாசி said...

சரிதானுங்க... உயிர்களை காப்பாற்றும் ஆற்றல் படைத்த மருத்துவர்கள் அனைவருமே வணங்கப்படவேண்டியவர்கள்தான்...எந்தஉயிரா இருந்தால் என்ன?

என் தம்பி சொன்னதையே நானும்...

கண்ணகி said...

நன்றி..ராமலட்சுமி...கிராம்த்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் போலவே பாவிப்பார்கள்..

சுந்தரா said...

உண்மையிலேயே கவனத்தில் வச்சுக்கவேண்டிய விஷயம்தான் கண்ணகி.

வெளிநாடுகளிலும் கால்நடை மருத்துவர்களுக்கு இருக்கும் மதிப்பே தனிதான்.

கண்ணகி said...

நன்றி...தமிழ்..

கண்ணகி said...

நன்றி..சுந்தரா..வெளிநாட்டில் இவகளுக்கு நீங்கள் சொன்னதுபோல் வரவேற்பு உள்ளது...அந்த வ்ரவேற்பு இங்கேயும் உள்ளது..

ஹுஸைனம்மா said...

ஆமாங்க; ஒருகாலத்துல அப்படித்தான் இளக்காரமா இருந்துது; ஆனா, இப்ப இந்தத் துறைக்கு மிக டிமாண்ட்!!

'பரிவை' சே.குமார் said...

பாலாசி சொன்னதை அப்படியே ரிப்பிட்டு அடிக்கிறேன்...

கண்ணகி said...

நன்றி...ஹுசேனம்மா....இபோ ஏக டிமாண்ட்

கண்ணகி said...

நன்றி..குமார் சார்..

velji said...

சரியா சொல்லியிருக்கீங்க!

என் சகோதரனும் மாட்டு டாக்டர்தான். நாமக்கல் கல்லூரியில் பேராசிரியர்.

Umapathy said...

மனித மருத்துவம் படிக்க ஒரே ஒரு உடலியல்(Anatomy) படித்தால் போதும், ஆனால் விலங்கு மருத்துவம் படிக்க பல உடலியல் படிக்க வேண்டும்,

கண்ணகி said...

ஆமாம் உமாபதி சார்..அனாடமியில் நிறையப்பேர் அரியர் வைப்பார்கள் என்று கேள்வி..

கண்ணகி said...

நன்றி..வேல்ஜி...

தாராபுரத்தான் said...

மாட்டுக்கு சீக்குன்னாத்தான் அந்த மகராசனுக அருமை தெரியும்..

கண்ணகி said...

நன்றி...அப்பன் சார்..வெகு நாளா காணோம்..எழுதுவதும் இல்லை..சிக்கிறம் எழுதுங்க..

Mahi said...

எனக்குத் தெரிந்த கால்நடை மருத்துவர் ஒருவரும் இருக்கிறார்.சொல்லப்போனா MBBS டாக்டரை விட இவர்களுக்குதான் வருமானம் அதிகம்,வேலை குறைவு! ;)

நான் கோவைங்க,கோபி இல்லை.

கண்ணகி said...

கொவைப்பெண்ணுக்கு நன்றி...

Thenammai Lakshmanan said...

நல்ல கோர்ஸ்தான் கண்ணகி.. பகிர்வுக்கு நன்றி

Vijiskitchencreations said...

ஏனுங்க எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிக்குங்க. அதுதாங்க ஈரோடுங்க.
அதிலும் ஈஸ்வரன் கோவில் இருக்குங்களா அது ரொம்ப தெரியுங்க. மணிகூண்டு,

உண்மையிலேயே உயிர்களை காப்பாற்ரும் துறையை சேர்ந்தவர்கள் தெய்வம் தாங்க.
அதிலும் வாய்பேச தெரியாத உயிரை காப்பாற்றுவது எம்மாம் பெரிய விஷ்யமுங்க.
நல்ல பதிவு.அடிக்கடி நான் வார்ரேனுங்க.

அப்படியே இங்குட்டு நம்ம இடத்துக்கு வாங்க. சரி வர்ரேனுங்க.எனக்கு இந்த ஊர் தமிழ் ரொம்ப பிடிக்க்குங்க.
www.vijisvegkitchen.blogspot.com

கண்ணகி said...

நன்றி...தேனு...

கண்ணகி said...

நன்றி.விஜி....வருகைக்கு நன்றி..வருகிறேன்...வருகிறேன்..

Muruganandan M.K. said...

மனிதர்களோ மிருகங்களோ யாவும் உயிர்கள்தான். அதற்குள் வேறுபாடுகள் எதற்கு. நல்லதுறை.

கண்ணகி said...

நன்றி..டாக்டர் சார்...

பாற்கடல் சக்தி said...

உண்மைதான். கால்நடைகள் தெய்வம்தான்; அவைகளை காப்பவர்களும் அப்படியே

கண்ணகி said...

நன்றி...சக்தி..

ப.கந்தசாமி said...

ஆஜர் போட்டுக்கிறேன்.

கண்ணகி said...

நன்றி...ஸ்வேதா...

கண்ணகி said...

நன்றி...டாக்டர் சார்..

என்னது நானு யாரா? said...

நகைசுவையா நல்ல தகவலை சொல்லியிருக்கீங்க. அருமை தோழி! பகிர்விற்கு நன்றிங்க!

ஜோதிஜி said...

உணர்ந்து படிக்கக்கூடிய மக்கள் உங்கள் வட்டத்திற்குள் வந்துள்ளார்கள். வாழ்த்துத்துகள்.

கண்ணகி said...

என்னது நானு யாரா...பேரே வித்தியாசம்....நன்றி.வருகைக்கும் கருத்துக்கும்.

கண்ணகி said...

நன்றி.ஜோதிஜி..

கண்ணகி said...

நன்றி.தஙகதுரை...படித்துவிட்டேன்...

Unknown said...

நானும் சீக்கிரம் மாட்டு டாக்டரா ஆக போறேன் .

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அருமையாக இருக்கிறது. வியக்கத்தக்க ஆற்றல்.

கண்ணகி said...

நன்றி...ஸ்வேதா...

கண்ணகி said...

எத்தன்னாங் கிளாஸ் படிக்கிறீங்க ஜெகனாதன்...????

கண்ணகி said...

நன்றி...ஜெகதீஸ்வரன்...

கண்ணகி said...

நன்றி...ஜெகதீஸ்வரன்...

ஜோதிஜி said...

அட அடா இடம் பிடிக்குறதுக்குள் மூச்சு போயிடும் போலிருக்கே.

தீபாவளி கொண்டாடியாச்சா? குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.

கண்ணகி said...

நன்றி..ஜோதிஜி....மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் முப்பெரும் தேவியருக்கும்...

Unknown said...

எல்லாம் சரி. அடுத்த பதிவுதான் காணம்

கண்ணகி said...

கவனிப்புக்கு நன்றி ஜெய்சங்கர்....வேறு வேலைகள்...சீக்கிரமா எழுத முயற்ச்சிக்கிறேன்..

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

கண்ணகி said...

நன்றி...வைகறை சார்...வருகைக்கும் வாழ்த்துக்கும்..இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

EC said...

You need not publish this comment...have posted addtl pics for making valaikappu gift..do check out

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு..

அன்புடன் மலிக்கா said...

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_05.html

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வூட்டும் பதிவு.

பித்தனின் வாக்கு said...

nalla solliyirukinga