ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Sunday, September 5, 2010

ஈரோட்டுப் பெண்களின் அட்டகாசம்...

...

போனவாரம் ஞாயிற்றுக்கிழமை ”அவள்விகடன்” ” ஜாலிடே” ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடந்தது... இந்த மாதிரி விழாவில் நான் இப்போதுதான் முதன்முறையாகக் கலந்து கொண்டேன்...

 காலேஜ் புள்ளைகள்ல்ல இருந்து 70வயசு பாட்டி வரைக்கும் என்ன பாட்டு என்ன டான்சு...ஒரே அமர்க்களம்தான்..நமக்கெல்லாம் மனதளவில் ஒரு கட்டுப்பாட்டுடன் இருந்தே பழகிட்டோமா....அங்க அதெயெல்லம் தூக்கிப்போட்டுட்டு குழந்தைகள் மாதிரி ஆடலும் பாடலும் போட்டிகளும், பரிசுகளுமாக ஒரே சந்தோசம்தான்... ஜட்ஜுகளும் சேர்ந்து ஆடி கலக்கிட்டாஙக...அந்த சூழ்நிலையைப்பர்த்ததும் உண்மையில் எனக்கு  சந்தோசத்துல அழுகையே வந்திருச்சுங்க..

.தொகுப்பாளினி.”அபேக்சா”ன்னு பேர் சொன்னாங்க...பேர் ரொம்பவும் வித்தியாசமா இருக்கில்ல...செம கலக்கல்..தொய்வே இல்லாமல் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி கலகலப்பா வச்சுருந்தாங்க...

அவங்க சொன்னமாதிரியே “வீட்டுக்கவலையெல்லாம் தூக்கிபோட்டு, சமைக்காமல் உட்காரவச்சு லன்ஞ், ஐஸ்கீம், ஸ்நாகஸ்,, காபி,டீ...அட அட.. என்ன உபசரிப்புங்கறீங்க...காலேஞ் பொண்ணுக எல்லாம் தூள் கிளப்பிட்டாங்க...

நானும் ஒரு போட்டியில் இறுதிச்சுற்றுக்கு வந்து கடைசியில சொதப்பிட்டேன்...

எங்கூட்டூக்காரர் ”வாயெல்லாம் ”எங்கிட்டதான்...வெளியில் போனாத்தான தெரியும்” அப்படீன்னுவார்... நம்ம வீரமெல்லாம் மேடையப் பார்த்தா அப்படியே கரைஞ்சிடுது..மேடைபயம் இன்னும் இருக்கிறது...அடுத்த தடவை தோழிகளோடு போய் கலக்கிறலாம்...அப்படின்னு வேற வேலையா முடியறதுக்குள்ளேயே வந்துட்டேன்... 

அடுத்த விழா ஈரோட்டில எப்ப நடக்குமோ....நன்றி....அவள்விகடன்....சி.டி.கிடைச்சா நல்லாருக்கும்...

டிஸ்கி: நான் கலந்துகொண்டது” சவாலே சமாளி”.நிகழ்ச்சி...

கேள்வி: உங்கள் நாத்தனாருக்குத் தெரியக்கூடாத பயங்கர உண்மையை அவ்ர்களிடமே உளறிவிடுகிறீர்கள்....எப்படி சமாளிப்பீங்க.


நண்பர்களே...நீங்கள் சொல்லுங்க.. எப்படி சமாளிப்பீங்க...32 comments:

ஜோதிஜி said...

ரொம்ப ஜாலி தானோ?

சே.குமார் said...

விழாவில் கலந்து கொண்டு அனுபவித்த சந்தோஷத்துடன் போட்டியில் இறுதிவரை சென்றதும் சந்தோஷம்தானே அக்கா.

வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

ahaa....

antha programme-ku ennoda thozhigal poittu vanthu romba pugzhantha...

hmmmmm....

enakkuthan permision illaiye....

:-(

நாஞ்சில் பிரதாப் said...

அப்பபரிசு வாங்கலையா...?
வாங்கமலே இவ்ளோ பில்டப்பா... அவ்ப வாங்குனா..:)

இன்றுஒரு தகவல்...சான்சே இல்லை எப்படிங்க இது...தெரியப்படுத்தியதற்கு நன்றி...:)

கண்ணகி said...

செம ஜாலி....அன்று மாலை திருப்பூர் சேர்தளம் நிகழ்ச்சிக்காகத்தான் பாதியிலேயே வந்துவிட்டேன்...ஜோதிஜி...

கண்ணகி said...

ஆமாம் குமார்...விழா ரொம்ப ஜாலியா இருந்தது...நன்றி..குமார்.

கண்ணகி said...

தம்பி அக்ல்விளக்கு...விகடன்கிட்ட சொல்லி அடுத்தது ஆண்கள் விழா நடத்தச் சொல்லி கேளுங்க...

கண்ணகி said...

பரிசு வாங்கியிருந்தா போனவாரமே பதிவு போட்டிருப்பேனே பிரதாப்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
கண்ணகி சைட்...
பரிசு வாங்கியிருந்தா போனவாரமே பதிவு போட்டிருப்பேனே....
//
பரவாயில்ல விடுங்க.... பரிசல் இதவிட பெரிய பரிசா உங்கள வரலாற்றுல இடம்பெற வச்சிருக்கார்...
[[[
சொல்லத்தான் நினைக்கிறேன் கண்ணகி வந்திருந்து சேர்தளம் கூட்டத்துக்கு வந்த முதல் பெண்மணி-ன்னு வரலாற்றுல அவங்க பேரை வரவெச்சுகிட்டாங்க.
]]]

கண்ணகி said...

ஆமாம் வழிப்போக்கன்...பரிசல்காரன் சொன்னதை பார்த்தேன்...அவங்களெயல்லாம் பார்த்ததே ஒரு பரிசுதானே..

வினவு said...

கண்ணகி என்ன போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்தீர்கள் என்று சொல்லவில்லையே?

கண்ணகி said...

”சவாலே சமாளி”....வினவு...

Anonymous said...

//நானும் ஒரு போட்டியில் இறுதிச்சுற்றுக்கு வந்து கடைசியில சொதப்பிட்டேன்...

எங்கூட்டூக்காரர் ”வாயெல்லாம் ”எங்கிட்டதான்...வெளியில் போனாத்தான தெரியும்” அப்படீன்னுவார்... நம்ம வீரமெல்லாம் மேடையப் பார்த்தா அப்படியே கரைஞ்சிடுது..மேடைபயம் இன்னும் இருக்கிறது..//

அட நீங்களும் என்ன மாதிரி சொதப்பல் திலகமா?

ஹ்ம்ம்ம் உங்க ஊட்டுகாரரும் அப்படித்தான் திட்டுவாங்களா? அதெப்படி இப்படி ஒற்றுமைகள் இருபாலருக்கும்....

ஹ்ம்ம்ம் படிக்கும் போதே தெரிகிறது சந்தோஷம்..உங்க கூட இருந்த மாதிரி இருந்தது எனக்கும்..வாழ்த்துக்கள் டா...

கண்ணகி said...

தமிழ்...என்னுடைய பலவீனமே அதுதான்...அடுத்த தடவை நீங்களும் வாங்க.. கலக்கிறலாம்..

வெண் புரவி said...

ஊட்டுகாரரை ரொம்ப மிரட்டாதீங்க பாவம்.
அவள் விகடன் மாதிரி ஆண்களுக்கென்று ஒரு பத்திரிக்கையும் இல்லையே-ஒரு விழாவும் இல்லையே என்று ஏங்க வைக்கிறது உங்க பதிவு..

ஹுஸைனம்மா said...

//எங்கூட்டூக்காரர் ”வாயெல்லாம் ”எங்கிட்டதான்...வெளியில் போனாத்தான தெரியும்” அப்படீன்னுவார்..//

ஹி.. ஹி.. வீட்டுக்கு வீடு வாசப்படி..

அப்றம் போட்டி முடிவு என்னானு சொல்லுங்க... தேவைப்பட்டா பயன்படுத்திக்கலாம்ல...

கண்ணகி said...

எங்கூட்டுக்காரரை மிரட்டறதா....சான்சே இல்ல...பொறாமைப்படாதீங்க வெண்புரவி...எங்களுக்கெல்லாம் இப்படி சான்சு கிடைச்சாத்தான் உண்டு...

கண்ணகி said...

போட்டி முடிவுதான் தெரியலியே..ஹுசேனம்மா...

நாம்தான் அந்தக்கேள்வியில் க்ளீன் போல்ட் ஆயிட்டமே...

என் பதில்..உண்மைய ஒத்துக்கிட்டு விளைவுகளை ஏற்றுக்கொள்வேன் என்பதுதான்..

ஜெய்லானி said...

//கேள்வி: உங்கள் நாத்தனாருக்குத் தெரியக்கூடாத பயங்கர உண்மையை அவ்ர்களிடமே உளறிவிடுகிறீர்கள்....எப்படி சமாளிப்பீங்க. //

பே..பே...பே..

Chitra said...

Super!!! வாழ்த்துக்கள்!
என்று ஒளிபரப்பாகுதுங்க? லிங்க் அனுப்புங்க.

கண்ணகி said...

பே...பே...அதேதான் ஜெய்லானி...பதில் சொல்லத்தெரியாமல் நடுங்க ஆரம்பிச்சு அவங்களே பாவம் பார்த்து விட்டுட்டாங்க...

கண்ணகி said...

தெரியலை சித்ரா...தெரிஞ்சுக்கிட்டு சொல்ரேன்..

LK said...

congrats

கண்ணகி said...

நன்றி..எல்.கே...

சி.பி.செந்தில்குமார் said...

good function.but y they not allow gents?if v ask they will tell it is only for ladies.but we never say like that, this is a gents funtion.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.


இறுக்கமான இடத்திலிருந்து ,
இந்த மாதிரி பெண்கள் மட்டுமென்றால், சில பெண்கள் மகிழ்ச்சியாக முற்றிலும் வேறு மாதிரி கொண்டாட்டமா
இருகிறது பாக்கவே

நல்லா இருக்கும் இல்லப்பா..?

கண்ணகி said...

பொறாம...பொறமை...செந்திலுக்குப் பொறாமை..அது மகளிர் பத்திரிக்கை...அதனால் விழா எங்களுக்கு..நீங்க போய் விகடன்கிட்ட சொல்லி ஆண்கள் விழா நடத்துங்க..

கண்ணகி said...

ஆமாம் முத்து...ரொமபவுமே ரிலாக்ஸ் ஆக இருந்தது...கல்லூரிப்பெண்கள் விழா என்னும்போது அவர்கள் மட்டும்தான் பங்கேற்க முடியும்..இது எல்லா வயதினரும் பங்கேற்பதால் ரொம்ப நல்லா இருந்தது..இது முதல் முறை..சொதப்பிட்டேன்.. அடுத்தமுறை இன்னும் நல்லா செய்வேன்...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதுகிறீர்கள்...வாழ்க உங்கள் பணி....

கலாசாரத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன்.

முடிந்தால் கருத்துக்கள் கூறவும்..

http://tamilkadu.blogspot.com

கண்ணகி said...

நன்றி...அம்பி...

க.பாலாசி said...

செம்ம ஜாலின்னு சொல்லுங்க... நானும் போஸ்டர் பார்த்தேன்...அதோட சரி...

Vijiskitchen said...

என்ன கண்ணகி உங்களுக்கு பரிசு?