ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Tuesday, June 8, 2010

ஆபத்து.....ஆபத்து...ஓடியாங்க...ஓடியாங்க....கொடிவேரிக்கு ஆபத்து..

ஆபத்து......ஆபத்து......அடுத்த நொய்யலா....கொடிவேரி.????


                                 அழகு கொஞசும் கொடிவேரி அணை..

                                           நொய்யல் சாயக்கழிவு

நேற்றைய தினமலர் செய்தியைப் பார்த்ததும் பகீரென்றது....கொடிவேரி அணையில் சாயக்கழிவு நீர் தேங்கி நின்றதைக்கண்டு சுற்றுலாப்பயணிகள் உடலில் அரிப்பு ஏற்படும் என்று அஞ்சி குளிக்காமல் சென்றனர் என்கிறது செய்தி...இந்த சாயநீர் கலப்பு  பிரச்சினை இன்று நேற்றல்ல.. வெகு காலமாக இருக்கிறது...இப்போது அணையில் நீர் வரத்து இல்லாத்தால் வெளியில் தெரிகிறது.

இதற்காக பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன...கொஞச காலம் நிறுத்தப்படும்...பிறகு மீண்டும் தொடரும்...இது ஒரு தொடரும் நிகழ்வு....இப்படியே போனால் நொய்யலின் கதிதான் ...கொடிவேரிக்கும்....??

.அரசு ஏன் இந்த மாதிரி தொழிலகங்களை நீர்வழிப்பதைகளின் அருகில் அனுமதிக்கிறது.???..தொழில்கள் வளரவேண்டும்தான்....அதேசமயம் நம் வாழ்வாதாரங்களே பாதிக்கப்படுவதை எப்படி அனுமதிப்பது...கோபி வட்டாரமே விவசாயத்துக்குப் பெயர் போனது...இப்போது நிலமை தலைகீழ்.....அதிகாலை நான்கு மணிக்கே திருப்பூர் கம்பெனி பஸ்கள் எல்லா ஊர்களிலும் ஆட்களை 

அழைத்துச்செல்ல அணிவகுத்து நிற்கின்றன...பெரும்பாலான குடும்பங்களின் இளம்தலைமுறையினர் விவசாயத்தைக் கைவிட்டு திருப்பூருக்கு செல்கின்றனர்..வீட்டுப்பெரியவர்கள்தான் ஏதோ 

கிடைக்கும் ஆட்களை வைத்து விவசாயம் செய்கின்றனர்...கிடைக்கும் ஓரிரண்டு வேலை ஆட்களும் "100ரூபாய்” திட்ட வேலைக்குச் சென்று நோகாமல் இருப்பதையே விரும்புகிறார்கள்.. 

அந்த வேலையில்தானே இரண்டு பேர் செய்யும் வேலையை இருபது பேர் செய்யலாம்.???...அப்புறம் எப்படி விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கும்....வேலை தருகிறேன் என்று இப்படி திருப்பிவிடுவதால்.இந்தத் தலைமுறையோடு விவசாயமே அற்றுப்போய்விடும்போல் இருக்கிறது..அப்புறம் பருவமழை பாதிப்பு....

இந்த லட்சணத்தில் தட்டுத்தடுமாறிகிடைக்கும் நீரில்  விவசாயம் செய்தால் இந்தக்கழிவுநீர் பிரச்சினை...நம் ஈரோடு மாவட்டத்தின் ஒரே நீர்வீழ்ச்சி... எத்தனைபேரை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது.அங்கு 

சென்றுவருபவர்களுக்குத் தெரியும்...அதன் அழகும்...பசுமையும்...அந்த அழகுக்குப் பாதிப்பா??.....எத்தனைஊர்களுக்கு குடிநீராகச் செல்கிறது...குடிப்பவர்கள் உடல்நிலை.???..எல்லா ஆறும் இன்று 

விசமாகிகொண்டிருக்கிறது...இப்போதாவது விழித்துக்கொள்ளாவிட்டால் நல்ல குடிநீர்இல்லாமல் சாகவேண்டியதுதான்..

நொய்யலை இப்படி கண்டுகொள்ளாமல் விட்டுத்தான்.அந்த ஆறே பாழாகிவிட்டது....பலகோடி செலவில் கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை கழிவுநீர் அணையாகப் பேர் வாங்கி இருக்கிறது...அரசு ...

விழித்துக்கொண்டு கொடிவேரி அணையைக் காப்பாற்ற ஆவண செய்யவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்..இல்லாவிட்ட்டால்.... ”புலி வருது...புலி வருது”....புலி வந்தே விடும்..இதில் 

மக்களுக்கும், அரசுக்கும் சரிப்பாதி பங்கு உள்ளது...இதில் கடைசியில் பாதிக்கப்படுவது மக்களாகத்தான் இருக்கும்..

ஒருபுறம் அணையை அலங்காரம் பண்ணிவிட்டு மறுபுறம் சாயக்கழிவுகளை விட்டால் என்ன ஆகும்....

.அணையை அலங்கரித்தால் போதாது....அது சுற்றுலாவை வேண்டுமானால் வளர்க்கும்..பிறகு நொய்யல் மாதிரி ஆகிவிட்டால் யார்வருவார்கள்.....முதலுக்கே மோசம் வந்துவிடும்.


.
கோடி கோடியாக மானியங்களும் தள்ளுபடிகளுமா நம் தாகத்தைத் தீர்க்கப்போகிறது,,???? ....கண் கெட்டபிறகு சூர்ய நமஸ்காரமா????....முழிச்சுக்குகங்க....முழிச்சுக்குங்க.... 

நன்றி..கூகிள் படத்திற்கு..

40 comments:

Chitra said...

மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுமுன், விழிப்புணர்வுடன் ஆவன செய்ய வேண்டும்தான்..... சீக்கிரம் நல்லது நடக்கட்டும்....

கண்ணகி said...

நன்றி சித்ரா...விரைவான கருத்துக்கு மறுபடியும் நன்றி..

சி. கருணாகரசு said...

சமுதாய அக்கறையுள்ள படைப்பு... தங்களின் கோரிக்கை விழவேண்டிய காதுகளில் விழ வேண்டுமே!

வண்ணத்தொலைகாட்சி, 1 ரூபாய் அரிசி, 100 ரூபாய் வேலை.... அப்புறம் எப்படி விவசாயத்திற்கு ஆள் வருவார்கள்...

தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி said...

ஓடி.. வந்தேன். விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு கண்ணகி.

ஜெய்லானி said...

மிகவும் அவசியமான பதிவு.. கவனிக்குமா அரசு ?......

ஜோதிஜி said...

திருப்பூரில் பணிபுரிந்து சென்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தன்னுடைய சொந்த ஊரில் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு 4 கோடி.

புரிந்தவர்கள் தான் விழித்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் உதயம் said...

அக்கறையான பதிவு.

அமைதிச்சாரல் said...

//ஒருபுறம் அணையை அலங்காரம் பண்ணிவிட்டு மறுபுறம் சாயக்கழிவுகளை விட்டால் என்ன ஆகும்..//

சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழுந்தா சரிதான்.

ஹேமா said...

நீங்கள் கூப்பிட்டது கேட்கிறவர்கள் காதில் விழணும் கண்ணகி.

நாடோடி said...

தூங்குற‌வ‌ங்க‌ளை எழுப்ப‌லாம்... ஆனால் தூங்குவ‌து போல் ந‌டிப்ப‌வ‌ர்க‌ளை?..

ஆரூரன் விசுவநாதன் said...

பவானி அருகே சாக்கடையாய் மாறப்போகும் நதி, இன்னும் கொஞ்சம் முன்னால் சாக்கடையாகிவிடப் போகிறது.....இதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்..........

அம்பிகா said...

சமூக அக்கறையுள்ள பதிவு.
ஆனா இந்த கூக்குரல் விழ வேண்டிய காதுகளில் விழுமா?

கண்ணகி said...

நன்றி..க்ருணாகரசு...

கண்ணகி said...

நன்றி.ராமலட்சுமி மேடம்...

கண்ணகி said...

நன்றி.ஜெய்லானி...அரசு கடுமையாக சட்டம் இயற்றினால்தான் இதை தடுத்து நிறுத்தமுடியும்.

கண்ணகி said...

நன்றி.ஜோதிஜி...

கண்ணகி said...

நன்றி. தமிழ் உதயம் சார்.

கண்ணகி said...

நன்றி.. அமைதிச்சாரல்.. என் ஆதங்கமும் அதுதான்..

கண்ணகி said...

விழறதுக்காகத்தான் இந்தக் கூப்பாடு..நன்றி..ஹேமா.

கண்ணகி said...

நன்றி..நாடோடி...நம் காரியம் ஆகணும்னா தூங்குறவங்களைக் கொஞசம் எழுப்பித்தான் ஆகணும்.

கண்ணகி said...

ஆமாங்க ஆரூர்...பவானி வட்டாரம் இப்போதே சாயப்பட்டறை கழிவுகளை தாங்கி வந்துகொண்டிருக்கிறது..பார்க்க வருத்தமாக இருக்கிறது....

கண்ணகி said...

நன்றி. அம்பிகா...

பிரேமா மகள் said...

நீங்க யோசிக்கிற மாதிரி மத்தவங்களும் யோசிச்சா நல்லாயிருக்கும்..

முக்கியமா அதிகார வர்க்கத்தில் இருக்கறவங்க..

கண்ணகி said...

நன்றி..பிரேமா மகள்...அதிகார வர்க்கத்திற்கான வேண்டுதல்தான் இது..

jaisankar jaganathan said...

விழிப்புணர்வுக்கான பதிவு. நல்லது நடந்தா சரி

அப்பாவி தங்கமணி said...

ஏன் தான் இப்படி பண்றாங்களோ போங்க.... மிச்சம் சொச்சம் இருக்கற எல்லா நல்லதையும் மாசு பண்ணிடத்தான் போறாங்க... எதையும் விட்டு வெக்க போறதில்ல...அடுத்த தலைமுறைக்கு தண்ணிய கூட museum ல தான் காட்டணும் போல...நல்ல பதிவு

தாராபுரத்தான் said...

அன்புக்குரிய மகளே.. உன் ஆதங்கம் புரிகிறது...ஆனால் நான் அரசு துறையில் 33 வருடம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனுபவத்தில் சொல்லுகிறேன்.ஓரு தொழிற்சாலை ஆரம்பிக்க.. முதலில் ஊராட்சி அனுமதி பெற வேண்டும்.. நடத்த போகும் தொழிலில் எற்படும் காற்று, நீர்.. மாசுவின் அளவையும்.. அதனை போக்கும் வழியையும் அந்த நிறுவனம் செய்ய நிபந்தனையுடன் மாசு கட்டுப்பாடு வாரியம் தடையின்மை சான்று வழங்க வேண்டும்...முதலில் அதனைப் பெற்று ஊராட்சியில் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.. அதனைப் பெற்ற ஊராட்சி பொது சுகாதாரத் துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத் துறை போன்ற துறைகளின் தொழில் நுட்ப ஆலோசனைகளைப் பெற்று.. அதன் பின்பு மட்டுமே.. தொழிற்சாலை கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்..ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த நடைமுறை பின்பற்ற படுவதில்லை.. இதை யாரும்..கேட்பதும்மில்லை..தன்னிச்சையாக 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கட்டிட அனுமதி சரியாக புரியப் படாமல் காசே தான் கடவுள் என்கிற எண்ணத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.. அதன் விளைவுதான்.. கொடிவேரி ..

கண்ணகி said...

நன்றி.ஜெய்சங்கர்.

கண்ணகி said...

மியூசியசியத்தில வச்சாலும் பார்க்கறதுக்கு மனிதர்கள் இருக்கணுமே. தங்கமணி...நன்றி.

கண்ணகி said...

நன்றி..அப்பா..நாணய்த்துக்கு இரு பக்கங்கள் உண்டு..இன்றைய நவீன தொழில்மயமாக்கலின் பக்க விளைவுகள்தான் இவை..அரசிடம் அனுமதி பெற்றுத்தான் தொழில் செய்கிறார்கள்..ஆனால் அரசு தந்து விதிமுறைகளை கண்டிப்புட்ன் செயல்படுத்தி, கண்காணித்தால் ஏன் இந்த நிலை வருகிறது..மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் சரிவர செயல்பட்டிருந்தால் நொய்யல் பாழ்பட்டிருக்காதே..இதில் அரசுக்குத்தான் அதிகம் பொறுப்பு இருக்கிறது.. கொடிவேரிக்கும் இந்த நிலை வர்க்கூடாதே என்பதால்தான் இந்த ஆதங்கம்..நன்றிங்கப்பா.

மங்குனி அமைச்சர் said...

உண்மையிலேயே மிகவும் ஆபத்தான விஷயம்

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

Karthick Chidambaram said...

தங்களின் பதிவு அருமை. தமிழுக்காக நாம் யாவரும் உழைப்போம்.
மாநாட்டு நிகழ்வுகளை பார்த்தபோது மகிழ்ந்தேன். தமிழ் தேன் அல்லவா ?

thenammailakshmanan said...

ஆமாம் கண்ணகி. சரியான நேரத்தில் சரியான பதிவு.. அருமை..

கண்ணகி said...

நன்றி அமைச்சரே.

கண்ணகி said...

நன்றி...நன்றி..ஜெய்லானி..

கண்ணகி said...

நன்றி..தேனு..

கண்ணகி said...

மொத மொதலா வந்து கருத்து சொன்ன கார்த்திக் சிதம்பரத்துக்கு நன்றி...நன்றி..மாநாடு நேரில் பார்க்கவில்லை..தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்...வாழ்க தமிழ்....

சி.பி.செந்தில்குமார் said...

கொடிவேரி எங்க ஏரியா.நாங்களே கவனிக்காததை நீங்க எப்படி கவனிச்சீங்க?

கண்ணகி said...

” மாமியா ஊரு கொடிவேரிங்கோவ்” பதிவைப் படித்திருந்தால் இந்த கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள்...நன்றி..செந்தில்..