கொடிவேரி அணை
என்னக் கட்டிகுடுத்த ஊருங்க....பெரிய டவுனில் இருந்து..??????....பட்டிகாட்டுக்குக்குடுக்கறாங்களேன்னு அழுதுகிட்டுப்ப்போன நானு மலச்சுப்போய் நின்ன இடமுங்க.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளயத்தில பஸ்ஸு ஏற்னீங்கன்னா ஒரு பத்துமைல்தாங்க....கொடிவேரி பிரிவுன்னு கண்டக்டர் இறக்கி விட்டிருவாரு.அப்படியே பொடிநடையா ஒரு மைல் நடந்தீங்கன்னா (வேறு வாகன வசதி இல்லீங்கோ....நாயித்துக்கிழமையின்னா மட்டும் ஆட்டோ கிடைக்கும்) அணை வந்துரும்...
இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டனுங்க..கோபியில பஸ்ஸு ஏறயிலியே அரசூர் வழின்னு போட்டிருக்குதான்னு பார்த்துங்க...மாத்தி ஏறிட்டிங்கன்னா ஆத்துக்கு அந்தப்பக்கம் பெரிய கொடிவேரின்னு ஊரு இருக்கு. அங்க கொண்டு விட்டிருவாங்க...அங்கிருந்தும் பார்க்கலாம். இருந்தாலும் எங்கூரில்தான் வசதியா இருக்கும்.பார்க்கெல்லாம் இங்கதான் இருக்கு.
லீவு நாளானா போதும்...... குஞ்சு குளுவானோடவும், கட்டுச்சோத்து மூட்டையோடும் வந்து இறங்கிருவாங்க......பக்கத்தூரு கம்பெனியில இருந்தெல்லாம் பசகளும் புள்ளைகளும் பஸ் பஸ்ஸா வந்து இறங்கி சோடி சோடியாச் சுத்திட்டு இருப்பாங்க
.( இங்க ஓட்டலோ, தங்குமிட வசதியோ கிடையாது.......ஏன்.....உங்கூட்டுல சோறு போட மாட்டிங்களான்னு கேட்காதிங்க.......எங்க பண்ணாடி......அப்பவே விவசாயம் பார்த்தா பொழக்க முடியாதுன்னு..... வேய்க்கானமா .... நாலு எழுத்து படிச்சுப்போட்டு ???????.......உத்தியோகம் பார்க்கிறேன்னு வரக்காட்டுப்பக்கம் வந்துட்டாரு....அப்பப்ப..... ”எங்களுதெல்லாம் கர வழி பூமிடியோவ்”....... அப்ப்டின்னு பெரும பேசறதோட சரி....)..
(அப்பல்லாம் அடிக்கடி ஊருக்குள்ள தண்ணி வந்துருமாம்.ஒருநாள் அப்படி தண்ணி வந்தப்போ கையில கிடைச்சத எல்லாம் வண்டியில் எடுத்துக்கிட்டு எங்க மாமியார் ஓட எங்க பண்ணாடி அவரு புத்தகப்பையைத் தூக்கிட்டு ஓடினாராம்.....??எட்டாவதுவரைதான் அங்க ஸ்கூலு. அப்புறம் ஆறு தாண்டி அக்கறைப்பள்ளிக்கூடத்துக்கு தண்ணீரில் நடந்துதான் போகணும். தண்ணி அதிகமானா பரிசல்.....அப்படிப் படிச்சவர்தாங்க பண்ணாடி......) இன்னும் அப்படித்தான் நிலமை.....பள்ளிகூடமெல்லாம்..முதல் படத்துல பார்க்கிறீர்களே... அந்த சட்டரைப் பிடித்துக்கொண்டுதான் தண்ணீர் குறைவாக இருக்கும் காலங்களில் ஆற்றுக்கு அந்தப்பக்க ஊருக்குப் போக வேண்டும்....
பாலம் ஒண்ணு கட்டிகுடுக்கச்சொல்லி மக்கள் கேட்டுக்கிட்டுதான் இருக்கிறாங்க.......ஆனா போக்குவரத்து அதிகமானா இந்த இயற்கை அழகு அழிஞ்சு போயிரும்மோன்னு பயம்மாவும் இருக்குதுங்க...........இளங்கோவன் எம்.பி. ரோடெல்லாம் நல்லாப்போட்டுக் குடுத்துட்டாருங்க. அதுக்கொரு நன்றி சொல்லிகிறனுங்க..
.
அப்புறம் புதுசாப்புடிச்ச மீனு பொறிச்சுக்குடுப்பாங்க....மீனுன்னுன்னா...அடுத்தது சரக்க யோசிக்காதீங்க.....போலீசு முட்டிக்கு முட்டி பேத்துப்புடுவாங்க....சரக்கடிச்சுட்டு நிறைய பசங்க ஆத்தோட போயிட்டாங்க...அதனால் அனுமதி கிடையாது.
அணை முனியப்பன் கோவில்
பத்து வருசத்துக்கு முன்னாடி எல்லாம் இவ்வள்வு கூட்டம் இல்ல. அவ்வளவா யாருக்கும் தெரியாது.......நம்ம பாக்கியராசு இருக்காரே......அதாரு... இந்த முந்தானைமுடிச்சு படம் எல்லாம் எடுத்தாரே அவரா....ஆமாங்க அவுருதான் இங்க அடிக்கடி சூட்டிங் எடுப்பாரு. எல்லாப்படத்துலயும் ஒரு சீனாவது எடுப்பாரு. நம்ம ச்த்தியராசு இங்கிலீசுக்காரன்........படம்......தேவயானி,அப்பாஸ் காதலில் விழுந்தேன்....சின்னத்தம்பிக்காக பிரபு,குஸ்பூ.... எல்லாரும் இங்க வந்து டூயட் பாடி இருக்காங்க....அப்புறம்தான் சனங்க நிறைய வர ஆரம்பிச்சுட்டாங்க.
“அதெல்லாம் இப்ப.....அதுக்குமுன்னாடியே , இது சத்தியம்னு ஒரு படத்துல சரவணப்பொய்கையில் நீராடி-ன்னு ஒரு பாட்டு வருமே அந்தப்படம்......அன்னக்கிளியெல்லாம் இங்க எடுத்திருக்கிறாங்க”..எல்லா சினிமா இஸ்ஸுட்டாரையும் நேரிலயே பார்த்திருக்கமாக்கு:......இது எங்க பண்ணாடி.......”..சரிங்க.... சொல்லிட்டேன்”.....
குழந்தைகள் விளையாட பார்க்
அப்புறமா ஆத்துல பரிசல் பயணம் போகலாம். நான் இன்னும் போனதில்லிங்கோ....எங்கூட்டுக்காரர் விட மாட்டேங்கிறார். ஏன்னு இன்னொரு நாளைக்கு சொல்ரேன்.
குடும்பத்தோடு வந்திங்கன்னா ஒருநாள் பூராவும் அணையில் குளிச்சுட்டு மீன் சாபிட்ட்டிட்டு, குழந்தையோடு குழந்தையா விளையாடிட்டு சாலியா இருந்துட்டுப்போகலாம்....அப்புறம் நேரம் இருந்தா பண்ணாரியம்மன் கோவில், பவானிசாகர் அணை, தெங்குமராட்டா இதெல்லாம் போகலாம். எல்லாம் போற வழிதான். வாகனம் இருந்திட்டா ரொம்ப சவுகரியம்..
வந்து பார்த்திட்டு சொல்லுங்க...எப்படின்னு....
அணையோரம் ஆழ்துயிலில் இருக்கும் என் மாமனார்,மாமியார் சமாதி(கார் பார்க்கிங் அருகில்}.
தண்ணீர் இல்லாத்போது மாணவர்களும்,மக்களும் உபயோகப்படுத்தும் வழி.
தூரத்தில் சின்னதா தெரியும் வீடு, சின்னத்தம்பியில் பிரபுவின் வீடாக நடித்த வீடு??..
தண்ணிர் இருக்கும் இடம்தான் பரிசல் பயண்ம்...
சில அழகான் புகைப்படங்கள் கொடுத்ததற்கு கூகுளுக்கு நன்றி.
72 comments:
கண்ணகி ரொம்ப அழகா எழுதறீங்க. வளமான ஊர் உங்க ஊர்.
கொடுத்துவச்சவங்க தான்.
அருமையான எழுத்து நடை
எனக்கும் கொடிவேரி மிகவும் பிடித்த இடம்....
இன்னும் புகைப்படங்கள் வெளியிடுங்கள்
அக்கா
கொடிவேடி பத்தி சூப்பரா சொல்லியிருக்கீங்க...
அதுவும் பண்ணாடி பண்ணாடின்னு மாம்ஸ்ச செமய கலாய்ச்சுருக்கீங்க.
இதுமாதிரி நிறைய அறிமுகப்படுத்துங்க...
:-))
அழகான சுற்றுலா தலத்தை, கொங்கு மண்வாசனை வீச, விவரித்தது ரசிக்கும்படி இருந்தது.
எனக்கும்,குழந்தைகளுக்கும் இது பிடித்த இடம்....
//என்னக் கட்டிகுடுத்த ஊருங்க....பெரிய டவுனில் இருந்து..??????....பட்டிகாட்டுக்குக்குடுக்கறாங்களேன்னு அழுதுகிட்டுப்ப்போன நானு மலச்சுப்போய் நின்ன இடமுங்க//.
//இங்க ஓட்டலோ, தங்குமிட வசதியோ கிடையாது.......
ஏன்.....உங்கூட்டுல சோறு போட மாட்டிங்களான்னு கேட்காதிங்க.....//
//எங்க பண்ணாடி......அப்பவே விவசாயம் பார்த்தா பொழக்க முடியாதுன்னு விவரமா நாலு எழுத்து படிச்சுப்போட்டு ???????.......உத்தியோகம் பார்க்கிறேன்னு வரக்காட்டுப்பக்கம் வந்துட்டாரு....அப்பப்ப..... ”எங்களுதெல்லாம் கர வழி பூமிடி”....... அப்ப்டின்னு பெரும பேசறதோட சரி....)..
பண்ணையக்காரி பவுசே இம்புட்டுன்னா, பண்ணாடிய பத்தி சொல்லோனுமாக்கும்....
இஃகி.....இஃகி
நன்றி.. வல்லிசிம்ஹன் முதல் வருகைக்கும், கருத்துக்கும்...
நன்றிங்க கதிர்....தம்பி.....இன்னும் புகைபடங்கள் இணைக்க முயற்சி செய்கிறேன்.
அகல்விளக்கு இப்பத்தான் வழி தெரிஞ்சுதா...நன்றி முதல் வருகைக்கும், கருத்துக்கும்.
அகல்விளக்கு. கோபி பக்கமெல்லாம் பண்ணாடி. ஈரோட்டு பக்கமெல்லாம் பண்ணயக்காரரு.
நன்றிங்க. ஆரூர். எங்க வெகு நாளாக் கானோம் கருத்துச் சொல்ல.
அழகான ஊரா இருக்கு..அழகாவும் சொல்லி இருக்கீங்க.. ஆனா படங்கள் தான் ரொம்ப ஷேக்காகி இருக்கு ..
அழகான நடையில் எழுதியிருக்கறீங்க வாழ்த்துக்கள்....
பரிசலில் போவது, பார்க்கில் ஊஞ்சல் ஆடுவது, பேய் அணையில் குளிப்பது முக்கியமாக மீன் வருவல் கடை இந்த படங்கள் எல்லாம் போடுங்க..
கொடிவேரி அழகு எல்லாரும் பார்க்கவேண்டாமா...?
அம்மிணி நெம்ப நல்லாருந்துங்க...அப்பிடியே கொஞ்சம் ஆடாம போட்டோ போட்டுட்டீங்கனா நெம்பவும் நல்லாருக்கும் :)))
இத படிக்கும் போது கல்லூரிக்காலத்தில் மாதம் தோறும் சென்றது கொசுவத்தி சுத்துது...:))
நன்றி மயில்.முதல் வருகைக்கும். கருத்துக்கும். ஆமா நீங்க எங்கூரா.படம் என் பையன் எடுத்தது. அடுத்த தடவ ஆடாமல் எடுக்கச்சொல்ரேன்.
சங்கவி அடுத்த தடவ் எடுத்துரலாம். பேயணை நானே இன்னும் பார்க்கவில்லை. நிங்க போனா படம் எடுத்துட்டு வாஙக். இணைச்சுரலாம்.
உங்க மாமியா ஊரு அட்டகாசமா இருக்குங்க.
http://amaithicchaaral.blogspot.com/2010/01/blog-post_08.html
//சங்கவி அடுத்த தடவ் எடுத்துரலாம். பேயணை நானே இன்னும் பார்க்கவில்லை. நிங்க போனா படம் எடுத்துட்டு வாஙக். இணைச்சுரலாம்.//
நிச்சயம் படம் எடுத்துக்கொண்டு வருகிறேன்... கொடிவேரி அணைக்கு அந்தகாலத்தில் பேய் அணை என்று பெயர்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
ஆமாங்க், ஆமாம். எங்கூரு ரொம்ப அழகான ஊருதான். அதில் எனக்கு கொள்ளப்பெருமை....நன்றிங்க அமைதிச்சாரல்...முதல் வருகைக்கும் கருத்துக்கும்...
சங்கவிஅப்பூ...பேயணை என்பது கொடிவேரி அணை அல்ல...ஆத்தோரத்துலயே இன்னும் கீழே மூன்று மைல் போனால் இருப்பதுன்னு எங்க பண்ணாடி சொல்றாரு. அந்த கல்பாறையெல்லாம் பேய்கள் கொண்டுவந்து போட்டு கட்டியதாக எங்கூரில் சொல்வார்கள் அப்பூ.....
பொங்கல் வாழ்த்து மட்டும் சொல்லிக்கிறேன். அரசு சொன்னாலும் அதென்ன்மோ சித்திரை ஒண்ணுதான் தமிழ்வருடப்பிறப்புன்னு மனசுல் பதிஞசுபோச்சு...சங்கப்பூ.....
ஆஹா எவ்வளவு அழகு.
நன்றி...தமிழ் உதயம் சார்.
ஓ அப்படியா... எனக்கு எங்க தாத்தா இது தான் பேய் அணைன்னு சொன்னாாரு..
இந்த தடவ போய் பார்த்துட்டாப்போகுது.....
கோயமுத்தூருங்க :))
வட போச்சே..
எத்தனையோ தடவ கொடிவேரி போயிருக்கேன்னாலும், இப்படி ஒரு இடுகை போடணும்னு தோணலையே..
போட்டோ நீங்க எடுத்ததா?
கடைசி போட்டோ பட்டைய கிளப்புது!
இல்லீங்க வால். முதல் மூன்றும் என் மகன் எடுத்தது. கடைசி மூன்றும் கூகுள் ஆண்டவர் கொடுத்தது. கண்டிப்பாக அது யாராவது சினிமா காமெராமேந்தான் எடுத்திருக்க வேண்டும்.
அஸ்கு... புஸ்கு...எங்கூர் வடய நான் விடுவேனா. நன்றிங்க பட்டிகாட்டான், முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
அட கொயமுத்தூர் மயிலா நீங்க....
உங்க ஊரும் அழகு; உங்க பதிவும் அழகு.
நன்றி அம்பிகா...
எழுத்தும் படமும் அருமை... பொங்கல் வாழ்த்துக்கள்
நல்ல முன்னேற்றம் எழுத்து நடை, கோர்வை எல்லாமே சிறப்பு.
அடுத்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது படம் பொருத்தும் இடங்கள், மொத்த கட்டமைப்பு.
இந்த கொடிவேரிக்கு 15 வருடங்கள் முன்னால் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டுருந்த போது போனது. எந்த இடத்தில் இருக்கிறது என்பதே மறந்து போன எனக்கு இன்று தான் நிணைவுக்கு வரும் அளவிற்கு நிகழ்கால அழுத்தங்கள்.
குடும்பத்துடன் செல்லவேண்டும். எப்போது வாய்ப்பு அமையும் என்று தெரியவில்லை?
தமிழர் திரு நாள் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.
நேரில் பார்த்தை விடபதிவில் அழகுங்க.
அன்பின் கண்ணகி
அருமை அருமை - கிராமத்து நடையில் அழகாக சொந்த ஊரை ( பண்ணாடி ஊர் தானே பண்ணயக்காரிக்கும் ) விவரித்த விதம் நன்று - மிக மிக ரசித்தேன் - தெங்குமராட்டாவில் மீன் சாப்பிட ஒருவரழைத்துக் கொண்டே இருக்கிறார். செல்ல வேண்டும்.
நன்று நல்வாழ்த்துகள் கண்ணகி
அம்மினி அச்சு அசலா நம்ம ஊரு பாஷையில் பின்னிப்புட்டீங்க. நல்லா எழுதியிருக்கீங்க. டீ வீ ஆர் அய்யா சொல்லித்தான் உங்க பிளாக் பக்கம் வந்தேன். உங்க ஊருல ஒரு இராம கிருஷ்னா பள்ளீயில் எங்க சொந்தக்காரர் வேலை செய்யறார். கிருஷ்னமூர்த்தி பேருன்னு நினைக்கின்றேன். நானும் வரனும் ஆசைதான். சமயம் கிடைக்கவில்லை. நன்றி
நன்றிங்க. நன்றிங்க. கணினி பாதிப்பு...
ஒருவாரம் ஆச்சு....தனிதனித்தனியா நன்றி சொல்ல வருகிறென்.
நன்றிங்க. கருணாகரசு....தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்..பொங்கல் வாழ்த்துக்கள்.
சங்கவி..உங்கள் தாத்தா சொன்னது சரி.முதலில் இதைதான் பேயணை என்று சொன்னார்களாம். இப்போதுதான் கிழிருக்கும் பகுதியை பேயணை என்று சொல்கிறார்களாம்.பண்ணாடி சொன்னதை அவசரத்தில் நாந்தான் தப்பகச் சொல்லிவிட்டேன்.
நன்றீ ஜோதிஜி......கட்டமைப்பு இன்னும் புரிபடவில்லை. திருத்திகொள்கிரேன்.வெளிப்படையான விமர்சனங்கள் என்னைத்திருத்திகொள்ள உதவும்....நன்றி..
நன்றிங்க தாராபுரத்தான் சார்.
நன்றிங்க.... சீனா அய்யா....மிகவும் மகிழ்ச்சி.... தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.....ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி..புரிந்ததுங்க அய்யா.நான் முதலில் தேர்ந்த்தெடுத்த தலைப்பு எங்கூரு கொடிவேரி என்பதுதான்..மாமியான்னா கொஞசம் கவனிப்பு அதிகமா இருக்கும் என்பதால்தான் தலைபை மாற்றினேன்..
எங்க பண்ணாடிக்கு ஒரே சந்தோசமுங்க.நன்றிங்க அய்யா.
பித்தனின் வாக்குக்கு நன்றிங்க...நீங்கள் சொல்லும் பள்ளி ஆற்றுக்கு மறுபுறம் இருக்கும் ஊரில் இருக்கும் என்று நினைக்கிறேன்,அந்த ஊர் பெரிய கொடிவேரி என்று அழைக்கப்படும்.எங்கள் ஊரில் ஒரு கிறித்தவபள்ளி ஒன்றுதான் இருக்கிறது..நன்றிங்க... தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
பித்தனின் வாக்கு.....அய்யா என் பதிவைப் பார்க்கச் சொன்ன டி.வி.ஆருக்கு என் நன்றியச் சொல்லிக்கிரேன்.
wow.. ஈரோடு பதிவர் சந்திப்பின் போது தெரிந்திருந்தால் ஒரு டிரிப் அடித்திருக்கலாமே..??
கதிர் / வால்.. அடுத்த சந்திப்பு எப்போ..??
அருமையான பதிவு.எழுத்து நடை கலக்கல்.
மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துகள்.
நன்றிங்க சூர்யா....முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..
ஏங்க, நீங்க தேனிலவு போற இடத்துலதான் குடி இருக்கீங்களா? கொடுத்து வச்சவங்க. அருமையான இடம்ங்க.
வாங்க சித்ரா...தேனிலவுக்கு இங்கதான் வந்தீங்களா....நன்றி முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்....
இன்றுதான் உங்கள் தளத்தை பார்த்தேன். மிக அருமையான புகைப்படங்கள். அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றிங்க வேலன்.சில படங்கள் மட்டும்தான் என்மகன் எடுத்தது. மீதியெல்லாம் கூகுள் கொடுத்தது.நன்றி கூகுள்.
//கொடிவேரி பிரிவுன்னு கண்டக்டர் இறக்கி விட்டிருவாரு.//
ஏன் நாமளா இறங்கமுடியாதா?:-)
ஊர்வாசனையோடு எழுதறிங்க.. அருமை...
சில படங்களில் குலுக்கல் இருப்பதால் தெளிவு இல்லை. கடைசி இரண்டுப்படங்கள் கவிதை...
உங்க ஊர்கூட நல்லாத்தான்
இருக்கு...எங்க ஊர்மாதிரியே...
நன்றிங்க நாஞ்சில் பிரதாப். முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
நாமளா இறங்க முடியாதா....ஹ.ஹ்..சிரிச்சுட்டேன்....
உங்க ஊர் எதுங்க..
நான் நாஞசில் நாட்டுக்காரன்,(நாகர்கோவில்).
வந்திருக்கிங்களா-?
அப்ப நல்லப்படங்கள் எல்லாம் கூகுளாண்டவர் உபயமா-? அதானே பார்த்தேன்.
மொக்கைப்படங்களை நீங்க எடுத்துட்டு உங்க பையன்மேல பழியைப்போடுறீங்க?
அப்படி நீங்க HAMAM அம்மா இல்லயா?
என் நேர்மையைப் பாராட்டுங்க...பிரதாப்....(இல்லாட்டி யாராவது கண்டுபிடிச்சுருவாங்க)என் பையன்கிட்டே சொல்லீராதீங்க.
நாகர்கோயில் இன்னும் வந்த்ததில்லை.
breathtaking!
வருசம் முழுக்க இப்படி இருக்குமா? இல்லை வந்து பாக்க உகந்த நேரம் இருக்கா?
மே, ஜூன் மாதன்களில்த்ண்ணீரை நிறுத்திவிடுவார்கள். அப்போது மராமத்து வேலைகள் நடக்கும்.அப்போதும் சிறிதளவு வரும்.ம்ற்றநாட்களில் பெரும்பாலும் தண்ணீர் இருக்கும். சரியான தகவல் விரைவில் சொல்கிறேன். நன்றி சார் வந்த்தற்கும் கருத்துச்சொன்னத்ற்கும்..
ஆஹா அருமையான படங்கள். தமிழ்நாட்டை ரொம்ப மிஸ் பண்றேனுங்க :(
நன்றி. ஆதவன் சீக்கிரமா வாங்க...
பாட்டி ரொம்ப நல்லா நம்ம ஊரை பற்றி சொல்லி இருக்கீங்கோ......
யுவன்
அய்யய்யோ.....நாங்கல்லாம் யூத்துன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறோம்...இப்படி பாட்டின்னு சொல்லிட்டிங்களே.ஸ்டெயிலா அம்ச்சின்னு சொல்லியிருந்தா கொஞசம் ஆறுதலா இருந்திருக்கும்.
நன்றிங்க பெயரா..முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
எப்ப ஊருக்கு வர்ரீங்க....
Are you Kannada speaking person?
you said "Pannadi"
அட கொடுவேரிங்களா.... ரைட்டு.... நானும் திருப்பூர்ல இருந்தப்ப ஒருமுறை போயிருக்கேன். ஈரோட்டுக்கு வந்தபெறவு போகமுடியல... அந்தளவுக்கு பிஸி.....
ஊர்வாசனையோடு எழுதறிங்க.. அருமை...
நன்றிங்க பாலாஜி..
நன்றிங்க செல்வநாயகி..கருத்துக்கும் வருகைக்கும்..
அட !!!
நம்மூருக்கு இதுதாங்க குட்டி நயாகரா.
அழகான நீரோட்டம்....
உங்கள் எழுத்தோட்டத்தை நின்ரு நிதானமாக வாசித்தபின் வாழ்த்த வருகிறேன்
நன்றி..கோமா. கருத்துக்கும், முதல் வருகைக்கும்..
அம்மணி.. நீங்க பக்கத்துருங்களா..? நான் படிச்சது எல்லாம் கோபி - வைரவிழாப்பள்ளி. கொடிவேரி எல்லாம் சைக்கிள் மேல ஏறி ஒரு அலுத்து அலுத்தினா போயிருலாம்ங்க.. நாம்ப நண்பர்களோடு ஒருநா கொடிவேரி போனோம்னு தெரிஞ்சு குஸ்பு + பிரபு எல்லாம் வந்து எங்களை பார்த்துட்டுப் போனாங்க.. அவ்வ்வ்வ்...
நன்றி..தமிழ்பாய்....பக்கத்தூறுதான்..பிரபுவையும் குஸ்புவையும் கொடிவேரியில் நானும் பார்த்திருக்கிறேன்.நீங்க எந்த ஊரு....
முதல்முறையா உங்க வலைப்பூ வருகிறேன்.நம்ம ஊர் ஆட்களைப் பார்க்கையில்,கொங்கு தமிழைக் கேட்கையில் சந்தோஷமா இருக்குங்க! :)
கல்லூரி படிக்கையில் கோபிஆர்ட்ஸ்-ல இளங்கலை படித்த என் தோழி கொடிவேரி பற்றி சொல்லிட்டே இருப்பாங்க,நான் மிஸ் பண்ணிட்டேன்.ஹும்!
நல்லாருக்குங்க்கா! ;)
பி.கு.பலநாள் முன்னாடியே பாலோயர்ஸ் லிஸ்ட்ல உங்க பேரைப்பாத்தேன்,ஆனா அங்கே லிங்க் இல்லை.இப்பதான் ப்ளாக்ல கொஞ்சம் நோண்டிட்டு இருக்கப்ப,அகஸ்மாத்தா ட்ராபிக் ஸோர்ஸஸ்-ல பாத்து இங்கே வந்தேன்.இவ்வளவு நாள் உங்க ப்ளாக்-ஐ மிஸ் பண்ணிட்டேனே! சீக்கிரமா உங்க போஸ்ட்டெல்லாம் ஒண்ணொண்ணா படிக்கிறேன்.
நன்றி...மகி...சிக்கீரம் வாங்க..நீங்க கோபியா...
Post a Comment