மழை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் என்க்கு இந்த சீரியல் நாயகிகள் மாதிரி நை நை என்று அழுது புலம்பினால் பிடிக்காது.
பின் எப்படி.???... இரவில் பெய்யவேண்டும். ???...மின்சாரம் இருக்கக்கூடாது.???...அண்டம் கிடுகிடுக்க, ....ஆகாசம் நடுநடுங்க.....மேகம் குடைபிடிக்க......மின்னல் கொடிபிடிக்க....சடசடவென்று பெய்யும் பாருங்கள். ....அதுதான் மழை....இதெல்லாம் அபூர்வமாகத்தான் நமக்குக்கிடைக்கும்.
அம்மன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரம்யாகிருஸ்ணன் தாண்டவம் ஆடுவாரே. அதுபோல் கற்பனை செய்துகொண்டு பாருங்கள். அதுமாதிரி இயற்கையின் கோபநாட்டியத்தை ரசித்திருக்கிறீர்களா?......
அது என்ன்வோ தெரியவில்லை. என்க்கு முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் மழை பெய்த நாளாகவே இருக்கிறது......இரண்டை மட்டும் சொல்கிரேன்.இவ்வள்வு நேரம் கவிதையாகப்பேசிவிட்டு வேதாளம் முருங்கைமரம் ஏறுகிரதே என்று நினைக்காதீர்கள். எனக்கு நோ செண்டிமேண்ட்ஸ்...... நோ மூடநம்பிக்கை..... இருந்தாலும் சில விசித்திரங்கள் .... எனக்கு ஏற்படுகின்றன.
என் அன்பிற்குரிய அப்பா பக்கவாத்த்தால் பாதிக்கப்பட்டிருந்தார். கோபியில் இருக்கும் என் கணவரின் நண்பர்வீட்டுக்கு நாலைந்துநண்பர்கள் குடும்பத்தோடு செல்வதாக ஏற்பாடு. அப்பொதெல்லாம் செல்போன் இல்லை. ஏதோ உள்ளுணர்வில் என் தம்பி மனைவியிடம் அந்த நண்பரின் வீட்டு தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு சென்றோம்.
இரவு எட்டுமணிக்குத்தான் காரில் கிளம்பினோம். மழை வரும் அறிகுறி எதுவும் இல்லை. செங்கப்பள்ளி தாண்டிணோம். எங்கிருந்துதான் வ்ந்த்தோ? அப்ப்டி ஒரு பேய்மழை. கணவரால் வண்டி ஓட்டவே முடியவில்லை. ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டோம்.சிறிது ஓய்ந்த்தும் வண்டியை எடுத்து கொஞசதூரம்தான் போனோம். மறுபடியும் மழை. இப்போது வைப்ரேட்டரும் வேலை செய்யவில்லை.
நான், “வீட்டுக்கே திரும்பிவிடலாம்” என்றேன். அவரா பின்வாங்குவார்?....எங்கள் பன்னிரண்டு வயது மகனை உள்ளிருந்தே கைகளால் எட்டியவாறே துணியால் துடைத்துவிடச்சொன்னார். இவர் வலதுபுறம் துடைத்துக்கொண்டே வண்டி ஓட்டினார். பயத்துடனேயே பயணம் செய்தேன்.30மைல் போக 2மணிநேரம் ஆனது. காலையில் போன் வந்தது.” அப்பா இறந்துவிட்டார். ...... தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததது”....என்று.
அந்த நாளை என்னால் மறக்கவேமுடியாது. எது அன்று எங்களை போகவிடாமல் தடுத்தது. ???.
அடுத்தது...... என் உறவினர் திருமணம், சிவன்மலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.இரவெல்லாம் அடைமழை. விடிய விடிய பெய்கிறது. கரண்ட் இல்லை. ஹீட்டர் இல்லாமல் , லைட் இல்லாமல் இருபது பேர் குளித்து விடிகாலை மூன்றுமணிக்கு கிளம்புவதற்குள் போதும் போதுமேன்று ஆகிவிட்டது.வேனில்தான் சென்றோம். விடிகாலை ஐந்தரை மணி. கோயிலுக்குள் நுழைந்த்தும் அங்கேயும் கரண்ட் போய்விட்டது. அன்று முப்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.உள்ளே பிரகாரத்தைச் சுற்றிலும் ஹோமம் வளர்ப்பதற்காக செங்கற்கள் கூட்டி வைக்கப்பட்டிருந்தன.
எங்க போய் ஹோமம் வள்ர்க்கிறது. கும்பல் பூரா கோயிலுக்குள் பேய்முழி முழித்துக்கொண்டிருந்த்து. எங்கள் ஐயரைத்தேடினோம். நல்ல்வேளை. எங்களுக்கு பிள்ளையாருக்குமுன் சிறுஇடம் நனையாதவகையில் ஏற்பாடு செய்திருந்தார். லேட்டாக வந்த உறவினர்கள் எல்லாம் அவரவர் கல்யாண ஜோடியைத்தேடி அலைந்தார்கள். ஒரே அல்லோலகல்லோலம்தான். சரி. மழை நிற்பதாகத்தெரியவில்லை. சிறிது குறைந்ததும் அவரவ்ர் இடத்தில் போய் தாலி கட்டுங்கள் என்று சொல்லிவிட்டர்கள். முகூர்த்தநேரம் தாண்டிவிடுமே......... மரத்தடியில், வெளிப்பிரகாரத்தில் என்று மழையில் நனைந்து கொண்டே தாலி....... கட்டினார்கள்......?????தாலிகட்டிகோண்டவர்கள் அதை மற்க்கவே மறக்கமாட்டார்கள். ........இது எப்படி இருக்கு.......
ஸ்ஸ்ஸ்ஸ்.......அப்ப்பாடா..... கண்ணைக் கட்டுதா?..... படிக்கிற உங்களுக்கே இப்படியிருந்தால், ஸ்பாட்டில் இருந்த எங்களுக்கு எப்படி இருந்திருக்கும். எதுவும் நம் கையில் இல்லை..........திருமண நாள் 1.11.1998 ....... அந்த நாள் .....அந்த இடம்.... பங்குகொண்ட பாக்கியசாலிகள் யாராவது இருக்கிறீர்களா.
Thursday, November 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
//தாலிகட்டிகோண்டவர்கள் அதை மற்க்கவே மறக்கமாட்டார்கள்//
யாராச்சும் மாத்தி கட்டிப்புட்டாங்களோ?
இஃகிஃகி
//மின்சாரம் இருக்கக்கூடாது.???...//
கொசுதூக்கிட்டு போய் மழையில போட்டுமே
//அண்டம் கிடுகிடுக்க, ....ஆகாசம் நடுநடுங்க.....//
ஏ......ன்... இந்த வெறி
//இவ்வள்வு நேரம் கவிதையாகப்பேசிவிட்டு //
கவியரசி கண்ணகி வாழ்க...
//நான், “வீட்டுக்கே திரும்பிவிடலாம்” ன்றேன். அவரா பின்வாங்குவார்?....//
அண்ணோட துணிச்சல பாராட்டியே ஆகனும்..
உங்க வீட்ல ஜனநாயக ஆட்சி போல இருக்கு
உங்கள் தொடக்க வரிகளை படித்தவுடன் அடே அற்புதமாக கவிதையாய் உண்மையிலேயே மழையில் நனைய வைப்பது போல். அற்புதம் என்று சுமந்து குடை இல்லாமல் குதித்து மகிழ்ச்சி அடைந்தேன்.
அது வரை கதிர் பதில் பார்க்க வில்லை. அத்தனை திறமையும் உங்களிடம் இருக்கிறது. இதன் மூலம் உணர்த்தி விட்டீர்கள். ஆனால் என்னைப் போலவே சற்று அவசரத்தில் கரம் சிரம் புறம் கை நீட்டி சற்று கலவரத்தையும் உருவாக்கி விட்டீர்கள்.
ரசித்த மழை பாதியில் நிற்கிறது. உங்கள் கார் அனுபவம் என் வாழ்க்கையிலும் நடந்தது. சிவன் மலையில் பலமுறை நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தை நேரிடையாக பார்த்த அனுபவம் உண்டு.
எனக்கும் இந்த பிழைகள் உண்டான உடல்நலக் கோளாறினால் கவனிக்காமல் பதிவில் ஏற்றிய பிறகு கதிர் கொடுத்த சவுக்கடியில் தவறை உணர்ந்தேன்.
அவசரம் வேண்டாம். வரிகளுக்குள் கவிதை இருப்பதை கெட்டியாக பிடித்துக்கொண்டு இதே அடுத்த ஒரு அனுபவம் தேவை.
கதிர். இதிலெல்லாம் நம் ஆட்கள் உசாராக இருப்பர்கள்......ஹி.ஹி..
இப்போதெல்லாம் மழை வருவதே கவிதை மாதிரி அபூர்வமாகத்தான் வருகிறது. அன்பவித்துப்பாருங்கள் தெரியும்.
நன்றி.மனப்பூர்வமான நன்றி ஜோதிஜி.உங்கள் அறிவுரையை மனதில் வைத்துக்கொள்கிரேன். வேலைப்பளுவிலும் உங்கள் பதில் மகிழ்ச்சியைத் தருகிறது.
இனி கடும் மழை பெய்தால் உங்கள் நினைவு வரும். இன்றும் ஏதாவது நடந்திருக்குமோ என்றும் தோன்றும் என நினைக்கின்றேன்.
ஹி......ஹி......
நன்றி. ஆரூர். அனுபவித்த்வர்களுக்குத்தான் தெரியும்.அப்போது என்னை நினைத்துக்கோள்ளுங்கள்.
ஜோதிஜி. அண்டம் கிடுகிடுக்க ....அந்த வரிகள் தேவதை என்ற படத்திலிருந்து சுட்டது.யார் எழுதியதோ. நன்றி அவர்களுக்கே சேரட்டும்.
ஞானிகள், ரிசிகள் தவிர இன்று வரையிலும் அத்தனை பேர்கள் எழுத்தும் யார் யாரோ தந்தது தானே?
சுயம் என்பவர்கள் சுகமாக அமைதியாக வெட்ட வெளியை பார்த்து சிரித்துக்கொண்டுருப்பவர்கள்.
இந்த திருப்பூரில் கூட அதே போல் ஒருவர் இருக்கிறார்.
மக்கள் வைத்த பெயர் பைத்தியம்
உணர்ந்தவர்கள் வைத்த பெயர் சாமியார்.
அவர் சொல்லும் பெயர் கிறுக்கனை பார்க்க எத்தனை கிறுக்குகள் வருது.
எல்லோரையும் கிறுக்காக்கிவிட்டேன் என்று சொல்கிறீர்களா ஜொதிஜி.......
மழை எப்படிப் பெய்தாலும் அழகுதான். பூத்தூவல் ரொம்பப் பிடிக்கும். இப்பொழுது அடிச்சி வாங்குற மழைக்கேத்தா மாதிரி உங்கள் இடுகை.
மழை எப்படி இருக்கனும்ன்னு நீங்க சொன்ன விதம் நல்லா இருக்கு..வாத்துக்கோழி..:)
நாம் அத்தனை பேருமே ஒரு வகையில் கிறுக்கு தானே? அதுவும் திருப்பூரில் இருப்பவர்களின் வாழ்க்கை முழுமையும் ஓரளவிற்கு உங்களுக்கு தெரிந்தது தானே, கருத்துக்கள் மொத்தமும் மாறி மாறி முன்னோர்களிடம் இருந்து நம்மிடம் வந்தது என்பதை அவ்வாறு சொன்னேன்.
நன்றி. வானம்பாடி சார். பூத்தூவல் மழை அது மென்மையான கவிதை. நான் சொன்ன மழை. இயற்கையின் அதிரடி. அதிரடிக்குத்தானே மனிதன் பயப்ப்டுவ்வான்.
நன்றி. முத்துலட்சுமி தங்கள் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும்.
நாந்தான் உண்மையைச்சொல்லிவிட்டெனே?....இருந்தாலும் என் நேர்மையை நீங்கள் பாராட்டவெண்டும். அதற்காக குரங்கு என்று சொல்லணுமா.
ஹி....ஹி....
//இருந்தாலும் என் நேர்மையை நீங்கள் பாராட்டவெண்டும்.//
பாராட்டுகிறோம், பாராட்டுகிறோம்!
ஜெய்சங்கர் எங்கே ரொம்பநாளாக்கானோம்.
எந்த ஒரு நிகழ்வும் திரிலாக இருந்தா தான் நினைவில் நிற்கும்.ஈரமான பதிவு.
Post a Comment