ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Thursday, April 22, 2010

சிரிக்க மட்டும்...

சிரிங்க...சிரிங்க.....

(பொருத்துக.)

  1...“ஒல்லுக்கு ஒரு பக்கம் இடி.....மத்தளத்திற்கு இருபக்கம் இடி”...(மன்மோகன்சிங்)

  2. “முன்னாடி போனா கடிக்குது...பின்னாடி போனா உதைக்குது”....(கலைஞர்)

  3. “ஆப்பசைத்த குரங்கு”.....(நித்தியானந்தா)

  4. “ஆடிய ஆட்டம் என்ன?....பேசிய வார்த்தை என்ன?”.....(சசிதரூர், லலித்மோடி)

 
  5. “எதைதின்றால் பித்தம் தெளியும்”....(வை.கோ)...

  6.”தூங்குன மணியகாரரை எழுப்பினா
  
      பழைய கந்தாயம் எல்லாம் கேட்பார்”......(பா.ம.க.ராம்தஸ்).

  7”திண்ணை எப்போ காலியாகும்”............(ஐ.பி.எல்...பிரச்சினகள்).

  8.”என் வழி....தனி வழி.”....(விஜயகாந்த்)..

9”நடக்குமென்பார்....நடக்காது...நடக்காதென்பார்..

     ந்டந்துவிடும்”....(ரஜினிகாந்த்)


  சரியான விடை எழுதுவோருக்கு எங்கூர் டூரிங் டாக்கீசில் “வேட்டைக்காரன் படத்துக்கு கடைசிக்காட்சி...கடைசி டிக்கெட் பரிசாக வழங்கப்படும்”

  டிஸ்கி: வெயில் ரொம்ப அதிகம்...அதான் இப்படி..





21 comments:

நசரேயன் said...

// டிஸ்கி: வெயில் ரொம்ப அதிகம்...அதான் இப்படி..
//

ஏப்ரல், மே யிலே எப்படியோ?

sathishsangkavi.blogspot.com said...

பொருத்துக....

பிரபாகர் said...

சகோதரி,

மாற்றி மாற்றி பொருத்தினாலும் ஓரளவுக்கு எல்லாம் ஒத்துவருது, எல்லாருமே சமூகசேவையை பலமா செய்யறதால!

பிரபாகர்...

Madumitha said...

பொருத்திடலாம்.
ஆனா பரிசை நினைத்தால்
தான் பயமா இருக்கு.

Chitra said...

சிரிச்சுடுறேங்க..... .... அதுக்காக, இப்படி எல்லாம் பரிசு கொடுத்து மிரட்டாதீங்க.....

ha,ha,ha,ha,.....

நாடோடி said...

ஆஹா புதுசா இருக்கு விளையாட்டு....

ஜெய்லானி said...

அய்யா சாமி ஆளை விடுங்க. பரிசுதாங்க பயமா இருக்கு!!!!

Anonymous said...

பரிசு வெய்யிலை விட பெரிய தண்டனை.... நான் வரலை இந்த வீர விளையாட்டுக்கு..

அகல்விளக்கு said...

எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்...

அதுக்காக வேட்டைக்காரன் டிக்கெட் எல்லாம் வாங்கித் தந்து கொல்றது ரொம்ப ஓவர்...

பித்தனின் வாக்கு said...

ஹலோ வேட்டைகாரன் படம்ன்னு சொல்லிட்டிங்க. தப்பு தப்பா எழுதி தப்பிச்சிரலாம்முன்னு பார்த்தா, தப்பு சரியா போச்சுன்னு சொல்லி டிக்கெட்டைக் கொடுத்தால் என்ன செய்வது? அதுனால பதிலே எழுதாம ஓடியிரன். இதுல இரசினி,கமல் இல்லை அதுனால நான் பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிடுகின்றேன்.

உஷ் அப்பாடா வேட்டைகாரனில் தப்பிச்சிட்டேம். அது என்னங்க கண்ணகி சரியான ஒரு கோ இன்சிடன்ஸ். நான் எழுத்தோசையில் உங்க பெயரைப் பார்த்தவுடன் அடடா உங்க பிலாக் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு இங்க வந்தா, அதே சமயம் நீங்க என் பிலாக்கில் பின்னூட்டம் போடுகின்றீர்கள். ஒரு முறை துளசி டீச்சருக்கும் இப்படிதான் ஆனது.

ஹேமா said...

கண்ணகி...இந்த வெயிலுக்கே இப்பிடின்ன யூன் யூலை வெயிலுக்கு என்னாவிங்களோ !

ஹுஸைனம்மா said...

அந்தப் பரிசை என் நினைவின் அன்புப் பரிசாக நீங்களே வச்சுக்கோங்க சரியா!!

கண்ணகி said...

வேகாத வெய்யில்ல வந்து பார்த்திட்டுப்போன அத்தனி பேருக்கும் நன்றி...

மங்குனி அமைச்சர் said...

அது வந்து பாருங்க , நாங்கல்லாம் சின்ன வயசுலே ரவுடிக , அதுனால ......................

(டே... மங்கு என்னதாண்ட சொல்ல வர்ற )

Unknown said...

// நாங்கல்லாம் சின்ன வயசுலே ரவுடிக , அதுனால ......................//

சின்ன வயசுல தானே ரவுடிங்க. இப்ப என்னா அதுக்கு

அண்ணாமலை..!! said...

நீங்களே சரியாய்த் தான் பொருத்தியிருக்கீங்க போல இருக்கே!

தாராபுரத்தான் said...

இன்னும் உங்களுரில் டூரிங் இருக்குதா?

Thenammai Lakshmanan said...

பொருத்திடலாம் ஆனா பரிசை நினைச்சா பயமா இருக்கு கண்ணகி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... மே மாசம் உங்க ப்ளாக்ஐ block பண்ணனும் போல இருக்கே... இன்னும் வெயில் கூடும்ல... (இருந்தாலும் சிரிக்க வெச்சதுக்கு நன்றி). அந்த பரிசு மேட்டர் போடாம இருந்துருந்தா அநேகமா இன்னும் நெறைய கமெண்ட்ஸ் வந்து இருக்கும்னு நெனைக்கிறேன் (ஹா ஹா ஹா)

ஜோதிஜி said...

நல்ல முன்னேற்றம்.

அன்புடன் நான் said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு.....

அந்த படத்த பார்க்க விருப்பமில்லைங்க.