மருத்துவக்கனவில் இருக்கும் என் உறவினரின் மக்ளுக்கு.சீட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது...அடுத்து என்ன படிப்பது என்ற ஆலோசித்தோம்...அப்போது என் சினேகிதி கால்நடை மருத்துவம் படிக்கலாம்...என்றாள்..
”மாட்டு டாக்டருக்கா” என்று விளையாடுக்குக் கேட்டுவிட்டேன்.....அதென்ன அப்படி ஒரு இளக்காரம்....அவ்ங்களோட மதிப்பு தெரியுமா???....கிராமங்கள்ல்ல போய்ப்பாரு....அவங்களுக்கு இருக்கற மரியாதையை..விவசாயிகள் மனிதர்களைப்ப் போலவே கால்நடைகளையும் மிகவும் நேசிப்பார்கள்....கால்நடைகள் இறந்துவிட்டால் மனிதர்கள் இறந்தால் துக்கம் விசாரிப்பதுபோலவே துக்கம் விசாரிக்கும் பழக்கம் கிராமங்களில் உண்டு...அந்த வாயில்லா ஜீவன்களுக்கு வைத்தியம் பார்ப்பவரை கடவுளைப்போல மதிப்பார்கள்....தெரியுமா...
இங்க பாருடி....காலநடை மருத்துவம் படிச்சவர்தான் K.P.ராமலிங்கம் எம்.பி.....சுனாமி வந்தப்போ கடலூர் கலெக்டரா இருந்தாரே...ராதாகிருஸ்ணன்,I.A.S அப்புறம் எஙகூரு பக்கத்து பெருந்துரைக்காரரு ராமசாமி..I.A.S இன்னும் எத்தனை ஐ.பி.எஸ் இருக்காங்க தெரியுமா...
ஹியூமன் டாக்டருக்கும், வெட்னரி டாக்டருக்கும் ஒரே மாதிரியான சம்பளம்தான்,..ஒரே கேடர்தான். தெரிஞ்சுக்க..
.பொரிந்து தள்ளிவிட்டாள் என் சினேகிதி..சட்டியில போட்டு வறுத்தெடுக்காத குறையா வறுத்தெடுத்துவிட்டாள்...ஏன்னாஅவங்க ஊட்டுக்காரரு வெட்னரி டாக்டர்...
இவளேதான் “ஒரு சினிமா பார்க்க முடியுதா....மாடு கன்னு போடுல,” “ நஞசு போடுல்லன்னு... தியேட்டர்லயே வந்து பாதியிலேயே கூட்டிட்ட்டுப்போய்டறாங்க”. அத்னாலே சினிமா பார்க்கறதேயே விட்டாச்சுன்னு” ..ன்னு செல்லமா அலுத்துக்குவா...
உண்மையில் எல்லோருமே கால்நடை மருத்துவப்(B.V.Sc.) படிப்பைப்ப்ற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள்...அல்லது அதன் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்..
கால்நடை மருத்துவம் படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது...வேலைவாய்ப்பு இருக்கிறது...அரசு வேலை சீக்கிரம் கிடைக்கிறது...அப்படிக் கிடைக்கவில்லை என்றால் கூட தனியாக வைத்தியம் செய்யலாம்...அதிலேயே M.V.Sc...., Phd....போன்ற படிப்புகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது...ஒரு சாப்ட்வேர் எஞ்சீனியர் வாங்கும் சம்பளத்தை அவ்ர்கள் உள்ளுரீலேயே பெறலாம்...வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது.....
அதிலும் இந்த்த்துறை பெண்களுக்கு மிகவும் ஏற்புடையது....ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பெண் கால்நடை மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.. சென்னையில எங்கள் தோழி ஒருவர் வெளியூரெல்லாம் விமானத்துல பறந்துபோய் வளர்ப்புப் பிராணிகளுக்கு வைத்தியம் பார்க்கிறார்....
அதுனாலே கால்நடை மருத்துவத்த மிஸ் ப்ண்ணீராதீங்க....இந்த வருடம் கவனத்துல வைங்க...