ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Thursday, August 26, 2010

தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுங்கப்பா...

.
இப்பெல்லாம் எங்கு புறப்பட்டாலும் தண்ணீர் பாட்டில்கள் இல்லாமல் யாரும் கிளம்பறதில்லை....அந்தத்தண்ணீரை யாராவது தாகத்திற்கு கேட்டால்கூட கொஞசம் யோசனையோடு “15ரூபா போட்டு வாங்கிய “அக்வாபீனா”வாச்சே...காசு போட்டு வாங்கலாமில்ல...அல்பம்...அல்பம்...கேட்குதுபாருன்னு தயக்கத்துடன்தான் கொடுப்பாங்க.....நிலமை அப்படி ஆய்ப்போச்சு..

”தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே”...அப்படிம்பாங்க...

மணப்பெண் தேடுவதாக இருந்தாலும் “எதுவும் வேண்டாங்க.....யார் வந்தாலும் முகஞ்சுளிக்காம ஒரு சொம்பு தண்ணீ கொடுக்கிற புள்ளையாப் பாருங்க” என்பார்கள்..

அதெல்லாம் தமிழர் பண்பாடு...அதெல்லாம் மாறிபோச்சு....அந்தப்பண்பாடு, வெங்காயம் எல்லாம் இப்ப .நாம தண்ணி கொண்டுவந்து கொடுத்தாக்கூட “வேண்டாங்க்” என்கிறார்கள்....”சுடுதண்ணீர்தான்” என்று சொன்னபிறகு தயக்கத்துடன் குடிக்கிறார்கள்...

முக்காவாசிப்பேர் வீட்டுல கேன் தண்ணீர்தான்..

இனிமேல் வீட்டுபட்ஜெட்டில் தண்ணீருக்கும் காசு ஒதுக்கணும்போல..

காவிரியிலும் பிரச்சினை....மழையும் பெய்யமாட்டேங்குது....

இது எங்க போய் நிக்கப்போவுதோ...அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும்...என்கிறார்களே...அது நிஜமாகிவிடுமோ...

டிஸ்கி.:பத்து நாளாச்சு..பைப்புல தண்ணி வந்து.... அதனால் வந்த  புலம்பல்..இது.. .


42 comments:

துளசி கோபால் said...

அடப்பாவமே:(

பத்து நாளாவா????

கண்ணகி said...

ஆம்மாமுங்க துளசி...சாதாரணமாவே வாரம் ஒருமுறை 2மணிநேரம் விடுவார்கள்..அவ்வளவுதான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பத்து நாளாவா? :(
ரொம்ப உண்மைங்க.. பாட்டிலை இதுக்காகவே வெளியிடங்களில் மறைச்சு வைப்பனாக்கும்.. பிள்ளைக்குன்னு வச்சிருகிற்த வாங்கி மடக் மடக்குன்னு குடிச்சிட்டு ஒரு மடக்கு மீதி வைப்பாங்க அய்யோ பாவம் பிள்ளைக்குன்னு .. க்கும் அதையும் ஏன் மீதி வைக்கிறீங்கன்னு இருக்கும்..

கண்ணகி said...

இதெல்லாம் எங்களுக்கு சகஜமான ஒன்று...முத்து...

Chitra said...

எப்படி சமாளிக்கிறீங்க? பாவம்ங்க....

சாந்தி மாரியப்பன் said...

//இனிமேல் வீட்டுபட்ஜெட்டில் தண்ணீருக்கும் காசு ஒதுக்கணும்போல.//

எங்க வீட்டுல ஒன் டைம் இன்வெஸ்ட்மெண்ட்தான். ஹிந்துஸ்தான் லீவர் தயாரிப்பான 'Pure It' வாங்கிவெச்சிட்டோம்.வருஷத்துக்கு ஒருதடவை சர்வீஸ் செஞ்சாப்போதும். பைசா வசூல் ஆகிடும் :-)))))

ராமலக்ஷ்மி said...

காய்ச்சலோ ஜலதோஷமோ, உடல் சுகமின்றிப் போனால் மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி ‘எங்கே போய் என்ன தண்ணியக் குடிச்சீங்க?’ என்பதுதான்! பாட்டிலோடு வாழ்ந்தால் பிழைத்தோம் எனும் நிலைமைதான்.

பத்து நாளா..? அதிகம்தான்:(!

கண்ணகி said...

ஆமாம் சித்ரா...பாவம்தான் நாங்க..

கண்ணகி said...

நன்றி...சாரல்....எங்கவீட்டுக்காரருக்கு சுடவைத்த தண்ணீர்தான் பிடிக்கும்..இலவச இணைப்பா கேஸ் சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது..

கண்ணகி said...

நன்றி...ராமலட்சுமி...மகளிர் சக்தியில் இணைப்பு கொடுத்தற்கு மறுபடியும் நன்றி..பெரிய ஊர்களில் மட்டும்தான் தினமும் அல்லது, இரண்டு நாள் ஒருமுறை தண்ணீர் விடுகிறார்கள்..ஈரோடெல்லாம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான்.சின்ன ஊர்களுக்கு வாரம் ஒருமுறைதான்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

காவிரியிலும் பிரச்சினை....மழையும் பெய்யமாட்டேங்குது....

------
சில இடத்தில் மழை கொட்டுது தேவைக்கதிகமாய்..

:(

10 நாள் அதிக கொடுமையே.

கண்ணகி said...

நன்றிங்க...புன்னகைதேசம்..

Anonymous said...

தண்ணீர் வரலைன்னா என்னங்க அதை காரணம் காட்டி ஒரு பதிவு வந்தாச்சே...

Prathap Kumar S. said...

பத்து நாளா தண்ணி வரலையா.... எப்படிங்க.... மழை நல்லாத்தானே பெய்யுது....அப்புறமுமா???

கண்ணகி said...

எவ்வளவு மழை பேஞ்சாலும் எங்களுக்கு அதே நிலைதான்..அடிக்கடி விட்டா கரண்ட்பில் ஆகுதாம்..பஞசாயத்து லிமிட்னு என்ன்மோ சொல்றாங்க..பிரதாப்.

கண்ணகி said...

நீங்கதான் கரெக்டாச் சொல்லிட்டீங்க..தமிழ்..

ஹேமா said...

10 நாளா தண்ணி இல்லான்னா எவ்ளோ கஸ்டம்.புலம்பல்ன்னு சொல்லமுடியாது கண்ணகி.

கண்ணகி said...

நன்றி...ஹேமா...எங்களுக்கு இதெல்லாம் பழக்கமான ஒன்று...தண்ணீர் வருகிற அன்று குடிப்பதற்க்காக் ஒரு 30குடங்களாவது பிடித்து வைத்துக்கொள்வோம்..சில வீடுகளில் ஒரு அறை முழுவதும் தண்ணீர்க்குடங்களாகவே இருக்கும்..

கண்ணகி said...
This comment has been removed by the author.
கண்ணகி said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

பத்து நாளாவா?

எப்படி சமாளிக்கிறீங்க?

ப.கந்தசாமி said...

//.நாம தண்ணி கொண்டுவந்து கொடுத்தாக்கூட “வேண்டாங்க்” என்கிறார்கள்....”சுடுதண்ணீர்தான்” என்று சொன்னபிறகு தயக்கத்துடன் குடிக்கிறார்கள்...//

உண்மை. என்னுடைய கதையைக்கேளுங்கள்.
என் நண்பரின் மகள், அமெரிக்காவில் செட்டில் ஆனவள், தன்னுடைய மகளுடனும், அப்பா, அம்மாவுடனும் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் வருகிறார்களென்று தெரித்தவுடனேயே கை கால்களையெல்லாம் டெட்டால் போட்டுக்கழுவி விட்டு வெந்நீர் கொதிக்கவைத்து ஆறவைத்து அதைத்தனியாகவும், அதில் ஜூஸ் தனியாகவும் கலக்கி வைத்திருந்தோம்.

வீட்டிற்கு வந்தவர்கள் என்ன சொல்லியும் அந்த தண்ணீரையோ, ஜூஸையோ குடிக்கவில்லை.

இரண்டு மாதம் கழித்து நாங்கள் ஒரு பெரிய ஓட்டலில் "கெட்டுகெதர்" வைத்திருக்கிறோம், நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். நாங்கள் ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லிப் போகவில்லை.

R.பூபாலன் said...

பைப்புல தண்ணி வந்துருச்சுங்களா...?
பெரிய ட்ரம் வாங்கி
தண்ணி வரும்போதே சேமிச்சு வெச்சுக்கலாமே

கண்ணகி said...

மொத்த்மா பிடித்து வைத்துக்கொள்வோம்.. குமார்..

கண்ணகி said...

ஆமாங்க ....சாமி சார்...சுத்தம் பார்க்கிறேன்னு இப்படித்தன் நிறையப்பேர் நடந்துக்கிறாங்க...நோய் எதிர்ப்பு சக்தி அடுத்த தலிமுறைக்கு இல்லாம்லே போய்விடும்..

கண்ணகி said...

வந்திருச்சு...பூபாலன்...மொத்தமாத்தான் பிடிச்சு வச்சு பயன் படுத்துகிறோம்...

பரிசல்காரன் said...

இப்பவாச்சும் தண்ணி வந்துடுச்சுங்களா? :)

ப.கந்தசாமி said...

கண்ணகியம்மா, உங்க இந்தப் பதிவத் தொடர்ந்து நானு ஒரு பதிவு இந்திய அமெரிக்கர்களைப்பத்தி போட்டேன்.
சுட்டி: http://swamysmusings.blogspot.com/2010/08/blog-post_28.html

எல்லோரும் வந்து கும்முகிறார்கள். நீங்களும் வந்தா நல்லா பொழுது போகும். வந்து பாருங்க.

கண்ணகி said...

வந்திருச்சு.பரிசல்....தண்ணிக்காக எங்கியும் போகாம காத்துக்கிடப்போம்...கடைசியில் புறப்படும்போது வரும்...

கண்ணகி said...

வந்துட்டேன் புரபசர் சார்...

priyamudanprabu said...

மனச்சாட்சிதான் என் முதல் கடவுள்
///

ITHUKKAAKA ORU PINNUDDAM

priyamudanprabu said...

டிஸ்கி.:பத்து நாளாச்சு..பைப்புல தண்ணி வந்து.... அதனால் வந்த புலம்பல்..இது.. .
//

அடப்பாவமே:(

பத்து நாளாவா????

y???

கண்ணகி said...

ஆமாம் பிரபு..வீட்டில் போர்வெல் இருக்கிறது...அது கொஞசம் சுவை இருக்காது...குடிதண்ணீர் பைப்பில் வருவதுதான்..

கண்ணகி said...

ஸ்பெசல் பின்னூட்டத்துக்கு ஒரு நன்றி...

Unknown said...

கொடிவேரி வந்துடுங்க. தண்ணி பிரச்சினை இருக்காது.. :-))

ஈரோடு சுரேஷ் said...

கண்ணகி நீங்க எந்த ஊரு? எந்த ஏரியா?

ஈரோடு சுரேஷ் said...

கண்ணகி நீங்க எந்த ஊரு? எந்த ஏரியா?

கண்ணகி said...

வயசான காலத்துல வூடு கட்டிட்டு வரலாமுன்னுதான் இருக்கோம்..பார்ப்போம்..

கண்ணகி said...

ஈரோடு மாவட்டம்...சுரேஸ்..

Karthik Raja said...

pavammm.

கண்ணகி said...

நாங்க பாவம்தான்...கார்த்திக்ராஜா..

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com