ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Wednesday, August 18, 2010

திருடிகள் ஜாக்கிரதை....

அய்...விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு வந்திருச்சே...போன வாரம் ஈரோட்ல ஒரு வேலை...

எங்களுக்கு ஈரோடுதான் செல்லம்....சாப்பிங் ஆகட்டும்......ஆஸ்பிட்டல் ஆகட்டும்..எல்லாம் அங்கேதான்...போகும்போது ஒரு லிஸ்டே இருக்கும்..

அன்னிக்கும் அப்ப்டித்தான்...மிக்ஸி ரிப்பேருக்கு கொடுக்க கையில் கனத்துடன்...ஒரு பிக் சாப்பரில் உட்கார்ந்திருந்தது.....அதாங்க...கட்டப்பையின்னுவாங்களே அதுதான்..

அப்பத்தான் வூட்டுக்கடன் பணத்த வங்கியில கட்டிவிட்டு காலியான்..??? பெரிய கேஸ்பேக்கும் அதில் செலவுக்கு கொஞசம் பணம்...ஒரு செல்போன்..அவ்வள்வுதான் இருப்பு...

இரண்டு பெண்கள் பயர்சர்வீசில் ஏறினார்கள்...என்னருகே ஒருத்தி நின்று கொண்டாள்...என் பை இருவருக்கும் நடுவிலிருந்தது...ஏனோ சரியாக நிற்காமல் நெளிந்து கொண்டே இருந்தாள்...

பார்க் வருவத்ற்குள் ஏதோ சந்தேகத்தில் பையை திறந்துபார்த்தேன்..கேஸ்பேக் கானோம்...சந்தேகமே இல்லை....இவள்தான் காலாலேயே எத்தி எடுத்திருக்கிறாள் என்று பட்டது...

“ என் பேக காணொம்...நீதான் எடுத்திருக்கிறாய்....மரியாதையாக் குடுத்திரு” ...ன்னு சத்தம் போட்டேன்....

கண்டக்டர் எங்கள் இருவரையும் ஒருமுறை நிமிர்ந்துபார்த்துவிட்டு கடமையே கண்ணாக....???? டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்...

அவள் ”என்ன இந்தம்மா லூஸ் மாதிரி பேசுது”என்று யாரையோ பார்த்து சொன்னாள்....எனக்கு கோபம் வந்துவிட்டது.......நான் விடவில்லை...”நானாடி லூசு....வா போலீஸ் ஸ்டேசன் போகலாம்”எத்தனி பேருடி இருக்கிறீங்க பஸ்ஸுக்குள்ள” என்றேன்...

அவளையும், உடன் வந்தவளையும் புடைவையை உதறிக்காட்டச்சொன்னேன்.....ஒன்றும் இல்லை....இனி என்ன செய்வது....

“டிரைவர் வண்டியை ஸ்டேசன்ல நிறுத்துங்க...கண்டிப்பா என் பேக பஸ்ஸுக்குள்ளதான் இருக்குது யார்கிட்டயோ...”. 

அதில இப்பகட்டுன பேங்க ரசீது மட்டும்தான் இருக்குது.....பணமெல்லாம் இல்லை...செக் பண்ணிடலாம்” என்று சப்தம் போட்டேன்..

அமைதியோ அமைதி....இரண்டு நிமிடத்தில் நாலுசீட் பின்னால் இருந்த ஒரு பெண் சத்தம் போட்டார்...”ஒரு பேக் இங்க கிடக்குது....உங்களுதா பர்ருங்க”

என் பேக்கேதான்....எப்படி கை மாத்திருக்காங்காங்க..பாருங்க...பணம் ஒன்றும் இல்லை...என்றதும் கீழே வீசிட்டாங்க.....யோசித்துப்பார்த்தேன்...கிடைச்சுருச்சு...இனி என்னானு புகார் தருவது...

சாட்சி யாருன்னு கேட்பாங்களோ...ஒருத்தரும் வரமாட்டாங்க...பேக கிடைத்த நிம்மதியுடன் அமைதியாகிவிட்டேன்...அலட்டிக்காம அவங்களும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப்போய்ட்டாங்க...

டிஸ்கி:...இதனால் தெரிந்துகொள்ளவேண்டிய நீதி என்னவென்றால் பிக் சாப்பரில் பர்ஸ் போன்ற பொருள்களை வைக்காதீங்க...பெண் திருடிகளும் நிறைய இருக்காங்க...அவங்க தனியா வரமாட்டாங்க.. எடுத்ததும் அடுத்த ஆளுக்கு கை மாத்திடறாங்க.. அது பஸ் ஆக இருந்ததாலும் நான் உடனே பார்த்துவிட்டதாலும் பரவாயில்லை...

இதுவே பொது இடங்கள் நெருக்கமான விழாக்கூட்டங்கள் போன்றவற்றில் நாம்தான் ஜாகிரதையாக இருக்கவேண்டும்..அடிக்கடி நம் நகைகள் கழுத்தில் இருக்கிறதா என்று செக் செய்யவேண்டும்...சிறு குழந்தைகளுக்கு நகைகள் அணிந்து எடுத்துச் செல்வதை தவிர்க்கவேண்டும்..

 பஸ்களில் இதுபோல் நடந்தால், .சந்தேகப்பட்டால் சும்மாவாச்சும் போலீஸ்....போலீஸ் என்று கூவுங்கள்...நிஜமாவே அவங்க திருடவில்லை என்றால் என்ன உண்டு இல்லை என்று பண்ணியிருப்பாங்கதானே...மொசப்புடிக்கிற நாய மூஞ்சியப்பார்த்தா தெரியாதா என்று கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவார்....அத வொர்கவுட் பண்ணிப் பார்த்தேன்..நிஜமாப்போச்சு.......

அதேமாதிரி பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது நம்மை இடித்துக்கொண்டு பதினைந்துவயது பசங்கள் பெண்கள் வழியில் ஏறுவார்கள்....அவ்ர்களின்குறியும் இதே பிக்சாப்பர்தான்...படக்கென்று கைவிடுவார்கள்...நாம் உசாராக என்னவென்று கேட்டால் தெரியாமல் பட்டுருச்சு என்று சொல்லி சட் என்று அந்த இடத்த விட்டு நகர்ந்து விடுவார்கள்.....சும்மாவா சொன்னாங்க...தூங்கும்போதுகூட கால ஆட்டிக்கிட்டு தூங்கணும்....இல்லாவிட்டால் அதோகதிதான்...

55 comments:

வால்பையன் said...

உங்க தைரியத்தை பாராட்டுறேன்

sathishsangkavi.blogspot.com said...

//மொசப்புடிக்கிற நாய மூஞ்சியப்பார்த்தா தெரியாதா//

Correct.....

ஜோதிஜி said...

கை மாத்தினாலும் உங்க தைரியம் பாராட்டக்கூடியது.

Prathap Kumar S. said...

hahaha....உங்களை மாதிரி தைரியம் எல்லாப்பெண்களுக்கும் வரனும்...

அதே சமயம் இதையே ஒரு ஆணிடம் அந்தப்பெண் திருடிருந்தால்...ஆண் என்னச்சொன்னாலும் நம்பமாட்டார்கள்...

இந்த சமுதாயத்தோட லாஜிக்கே புரியல...

settaikkaran said...

நல்ல வேளை! பை கிடச்சதுனாலே கண்ணகி ஈரோட்டை எரிக்காம விட்டுட்டீங்க!

Chitra said...

நிஜமாகவே கண்ணகிதான் நீங்க..... வாவ்!

ஜெய்லானி said...

பேருக்கேத்த வீரம்தான் ..!!!

அதே நேரம் பாஸ் நாஞ்சிலின் பதிலும் கவனிக்க வேண்டிய ஒன்று...

கண்ணகி said...

நன்றி...வால்...

கண்ணகி said...

கரப்பான்பூச்சிக்குக்கூட பயப்படமாட்டேன்னா பார்த்துக்கங்களேன் வால்..

கண்ணகி said...

ஆமா...சங்கவி..இரண்டு முறை இதே அனுபவ்ம்...

கண்ணகி said...

என்னமோ ஜொதிஜி...நீங்கதான் சொல்றிங்க...என்னப்பார்த்தா அப்பாவி மாதிரி தெரிஞசதாலதான அவங்க வேலையக் காட்டுனாங்க..

கண்ணகி said...

லாஜிக் புரியலியா பிரதாப்....பெண்கள் எல்லாம் நல்லவங்கங்கற் லாஜிக்தான்....???

கண்ணகி said...

நான் பிறந்த ஊராச்சே...ஈரோட்டெயெல்லாம் எரிக்கமாட்டேன்...சேட்டை..

என்ன எங்க ஊட்டுக்காரர்கிட்ட போய் பாட்டு வாங்கணுமே...ஒருதடவையா..இரண்டு தடவையா....பறிகொடுத்தது...அந்த அனுபவத்தால் அந்த தைரியம்..

கண்ணகி said...

நன்றி...சித்ரா..

நாரதர் கலகம் said...

நானும் ஈரோடு தானுங்கோ உங்களை நெனைச்சு பெருமைப்படறேன்

துளசி கோபால் said...

அட ராமா!!!!!!

க.பாலாசி said...

அப்டியே பஸ்டாண்ட் பக்கம் வர்ரச்ச செல்போன பத்திரமா பாத்துக்குங்க.. பஸ்டாண்ட் உள்ளயே பஸ்ஸுக்குள்ள செல்போன் திருடர்கள் அதிகமாம்...

ராமலக்ஷ்மி said...

விழிப்புணர்வைக் கோரும் நல்ல பகிர்வு.

கண்ணகி said...

ஜெய்லானி....என் வீரத்தப்பத்தி எனக்குத்தானே தெரியும்...

கண்ணகி said...

வாங்க...ஈரோட்டு ஜூனியர் சாம்ராய்...வந்த்தற்கு நன்றி..

கண்ணகி said...

நன்றி..துளசி...

கண்ணகி said...

பாலாஜி....பஸ்ஸ்டாண்ட் கண்ணனில் ஒருமுறை பையனின் காஸ்ட்லி செல்போனை முதல்முறையாக ஆசையாக எடுத்துவந்து அன்றே பறிகொடுத்திருக்கிறேன்...ம்..

கண்ணகி said...

நன்றி...ராமலட்சுமி...

ஹேமா said...

கண்ணகி...கண்ணகிதான் !

கண்ணகி said...

நன்றி...ஹேமா...

a said...

//மொசப்புடிக்கிற நாய மூஞ்சியப்பார்த்தா தெரியாதா//
கரெக்டா கண்டுபுடிச்சிருக்கீங்க.......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாக்க அப்பாவியா இருந்ததால் எடுத்தாங்க.. ஆனா கேக்கும்போது வீரமா கேட்டதால் குடுத்துட்டாங்க போல வாழ்க.. :)

கண்ணகி said...

நன்றி...வழிப்போக்கன்...எனக்கு அவமேல் உறுதியான சந்தேகம்...வேறு யாரும் எடுக்க வழியில்லை...அதனால்தான் துணிந்து கேட்டேன்..

கண்ணகி said...

நன்றி...முத்துலட்சுமி...அவங்க எங்க குடுத்தாங்க..கீழே அல்லவா எறிந்துவிட்டார்கள்....

பெசொவி said...

சூப்பர் டெக்னிக் செஞ்சு பொருளை மீட்டுட்டீங்க, வாழ்த்துகள்! விழிப்புணர்வு தரும் நல்ல பதிவு!

Anonymous said...

sabaash kannagi unga thairiyam paarattuku uriyadhu....kannaginnu peru vacha summava.....

கண்ணகி said...

நன்றி...தமிழ்...

கண்ணகி said...

நன்றி....பெயர் சொல்ல விருப்பமில்லை..விசித்திரமான கொள்கைய்யா இருக்கே....

'பரிவை' சே.குமார் said...

உங்கள் தைரியம் பாராட்டுக்குறியது.
உங்கள் அனுபவப் பதிவு எல்லாருக்கும் தேவையான, அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு,

கண்ணகி said...

நன்றி...குமார் சார்..

தாராபுரத்தான் said...

இப்படி ஒரு பதிவு எழுதவே அப்படி ஒரு நிகழ்வு..இதுக்குத்தான்...

ரிஷபன் said...

பஸ்ஸில் இப்படி நிறைய அனுபவங்கள்.. ‘இரு கவனிச்சுக்கிறேன்’ என்று மிரட்டி விட்டு போவார்கள்..
உங்க துணிச்சல்தான் பொருளை மீட்டது..

கண்ணகி said...

ஆமாங்க..ரிசபன்...வருபவர்கள் ஒரு குழுவாகத்தான் வருகிறார்கள்..

Thenammai Lakshmanan said...

உண்மைதான் கண்ணகி.. நல்ல எச்சரிக்கை..

கண்ணகி said...

எதுக்குத்தான் அப்பன் சார்..

சாந்தி மாரியப்பன் said...

பாராட்டுக்கள் கண்ணகி.

கண்ணகி said...

நன்றி...சாரல்..

கண்ணகி said...

நன்றி..தேனு....

கவி அழகன் said...

தைரியம் எல்லாப்பெண்களுக்கும் வரனும்

கண்ணகி said...

நன்றி...யாதவன்...

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள் கண்ணகி. என்னதான் பேசினாலும், அச்சமயத்தில் தயக்கமில்லாமல் தைரியமாக முடிவெடுக்க துணிச்சல் வேண்டும்.

இப்படியும் திருடக்கூடும் என்று தெரிந்துகொண்டேன்.

வேலன். said...

உங்கள் துணிவை பாராட்டுகின்றேன் சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

கண்ணகி said...

நன்றி...ஹூஸைனம்மா.....

கண்ணகி said...

நன்றி..வேலன்....

அபி அப்பா said...

நான் 50வதா வந்து ஸ்மைலிக்கிறேன்:-)

கண்ணகி said...

அட ஆமாமுமில்ல..50வது நபர் நீங்கதான் அபி அப்பா..

Geetha6 said...

வாழ்த்துகக்ள்.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள்

கண்ணகி said...

நன்றி..கீதா..

கண்ணகி said...

நன்றி...ஜலீலா ..