ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Tuesday, July 20, 2010

எளிமையான எம்.எல்.ஏ...

ஆச்ச்ர்யம் தந்த எம்.எல்.ஏ.....

இரண்டு மாதங்களுக்கு முன் பழனி சென்றிருந்தோம்...திவ்யமா சாமிகும்பிட்டுட்டு விஞ்ச் மூலமா கீழே வர வரிசையில் நின்றிருந்தோம்...விஞ்ச் வந்ததும் முந்திக்கொண்டு ஏறச்சென்றோம்....குழந்தைகளுடன் இருந்த எங்களைப் பார்த்ததும் ஏற வந்த ஒருபெண்மணி,... (மிகவும்எளிமையான தோற்றத்தில் இருந்தார்)....சிறு சிரிப்புடன் நீங்கள் ஏறுங்கள்...நான் அடுத்ததில் ஏறிக்கொள்கிறேன் என்று வழிவிட்டார்...

எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே.. என்று யோசித்துவிட்டு, அடுத்தகணமே அதை மறந்துவிட்டு,, மலைப்பயணத்தைரசிக்க ஆரம்பித்துவிட்டோம்...

கீழே இறங்கியதும் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்...டக்கென்று ஒரு மின்னல் அடித்தது...அவரா இவர்....கேட்டேவிடலாம் என்று வேகமாகச்சென்றேன்..

”ஒரு சாத்ரண வார்டு கவுன்சிலராக இருந்தாலே எத்தனை அலட்டல் அலட்டுவார்கள்..... பத்துபேராவது கூட இருப்பார்கள்...இவர் எவ்வளவு எளிமையாக இருக்கிறார்...”.

தற்போது மாநில அள்வில் கட்சிப்பொறுப்பு வகிக்கிறார் என்று மனதில் ஓடியது.

நீயா, நானாவில் பெண்களின் அடக்கத்தைபற்றி நெற்றியடியாக கருத்துச்சொன்னவர்.
அவ்ர் எழுதியதாக ஒரு கவிதை படித்த நியாபகம்..

“எங்கள் வீட்டிலும், இருக்கிறதே....

ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, விவா..பாட்டில்கள்....

ஊறுகாய்களோடு”..


“சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு சென்னைக்கு அருகில்”... வீட்டுமனை”;;;??வேண்டும் என்று சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது, நாம் மக்கள் நலனுக்காக இங்கு பேச வந்துள்ளோம்..லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள்
ஒதுங்க குடிசை இல்லாமல் உள்ளனர்..அவர்களுக்காக குடிமனை பட்டா வழங்கவேண்டுமே தவிர உறுப்பின்ர்களுக்க்காக அல்ல.”..என்று முழங்கியவர்.

ஆணித்தரமான கருத்துக்களோடு போராடுபவ்ர். இவர்களைப்போன்றோர் எண்ணிக்கை சட்டமன்றத்தில் அதிகரிக்கவேண்டும் நாடு நலம்பெற......

ஓடிப்போய் கேட்டேவிட்டேன்....நீங்கள்தானே...

“.பாலபாரதி எம்.எல்.ஏ.”..

மீண்டும் அதே சிரிப்புடன் ஆமோதித்தார்....

சில நிமிடங்கள்தான் பேசினேன்....மிகவும் எளிமை....

திண்டுக்கல் மார்க்ஸ்சிஸ்ட் எம்.எல்.ஏ..பாலபாரதிதான் அவர்......சோ சிம்பிள்...

நன்றி:தினமலர் படம்.

29 comments:

வடுவூர் குமார் said...

அட‌! ப‌ர‌வாயில்லையே.சிம்பிளாக‌ இருக்க‌வும் விடுகிறார்க‌ளா?

தமிழ் உதயம் said...

இந்த எளிமை தொடர வாழ்த்துவோம்.

சே.குமார் said...

மிகவும் எளிமை..

இந்த எளிமை தொடர வாழ்த்துவோம்.

நாடோடி said...

வித்தியாச‌மாக‌ தான் இருக்கிறார்... இது தொட‌ர‌ என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்..

ஜெய்லானி said...

@@@தமிழ் உதயம்--//இந்த எளிமை தொடர வாழ்த்துவோம்.//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

ஜோதிஜி said...

இவரைப் பற்றி நிறைய படித்துள்ளேன். அவர் உடை அலங்காரமே அவரின் தன்மையை எடுத்துக் காட்டும்.

கடைசி வரைக்கும் இப்படியே இருக்க வேண்டும்?

பக்கத்தில் இருக்கும் ஐயா எப்ப பாட்டு கேக்றத நிறுத்துவாரு?

கண்ணகி said...

நன்றி..வடுவூர் குமார்.

கண்ணகி said...

நன்றி.தமிழுதயம் சார்..

கண்ணகி said...

நன்றி.சே.குமார்.

கண்ணகி said...

நன்றி.நாடோடி...

கண்ணகி said...

நன்றி...ரிப்பீட்டு. ஜெய்லானி..

தமிழிசில் முத்ன்முத்லில் இணைத்தற்கு ம்றுபடியும் நன்றி..

கண்ணகி said...

நன்றி..ஜோதிஜி....

பக்கத்தில் இருக்கும் அய்யா பாட்டு கேட்பது எனக்கு ஒரு சின்ன ரிலாக்சேசன்..

ஈரோடு கதிர் said...

பாலபாரதி அவர்களுக்கு வணக்கம்

அம்பிகா said...

நல்ல பகிர்வு. இவரது கவிதைகள் பற்றி முன் அறிந்திருந்தாலும் , உங்கள் மூலம் மீண்டும் ஒரு நினைவுறுத்தல்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துக்க‌ள்...

பகிர்விற்கு நன்றி

ஹரிஹரன் said...

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னைக்கு அருகில் வீட்டுமனை வேண்டும் என்று சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது, நாம் மக்கள் நலனுக்காக இங்கு பேசவந்துள்ளோம். லட்சக்கணக்கான் ஏழை எளிய மக்கள் ஒதுங்க குடிசை இல்லாமல் உள்ளனர் அவர்களுக்காக குடிமனை பட்டா வழங்கவேண்டுமே தவிர உறுப்பினர்களுக்காக அல்ல என்று முழங்கியவர்.

இவர்களை போன்றோரின் எண்ணிக்கை சட்டமன்றத்தில் அதிகரிக்கவேண்டும்.

அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

ஹேமா said...

எளிமையானவர்களிடம்தான் உண்மையும் இருக்கும் கண்ணகி.

அமைதிச்சாரல் said...

இதே எளிமை தொடர்ந்தா நல்லாத்தான் இருக்கும்..

கண்ணகி said...

நன்றி....கதிர்..

கண்ணகி said...

நன்றி.அம்பிகா.

கண்ணகி said...

நன்றி..உலவு.காம்...

கண்ணகி said...

நன்றி...ஹரிஹரன் நினைவூட்டியதற்கு..இணைத்துவிட்டேன்...

கண்ணகி said...

ஆம்..ஹேமா.

கண்ணகி said...

நன்றி..சாரல்...

pinkyrose said...

@@@தமிழ் உதயம்--//இந்த எளிமை தொடர வாழ்த்துவோம்.//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்

அதே அதே அதே....

butterfly Surya said...

இதே போன்று ஆந்திராவில் நிலம் கொடுத்த போது வாங்க மறுத்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே.

அதுவும் ஹைதை Banjara Hills பகுதியில்..

வாழ்த்துகள்.

க.பாலாசி said...

தாமதாக படித்தாலும் நல்ல தகவலைப்படித்த திருப்தி.. முன்னமே மாதவராஜ் பக்கத்தில் இவரது கவிதையை படித்த ஞாபகம். எளிமையின் இலக்கணத்தை இக்கணம் தாங்கள் தரிசித்ததில் மகிழ்ச்சி...

BHARATH BHARATHI said...

திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.

அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..

அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

கண்ணகி said...

வாழ்த்துக்கள் பாரத் பாரதி...