ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Tuesday, February 9, 2010

நெஞ்சத்தைக் கிள்ளியது..கொஞசம்.........

நெஞ்சத்தக்கிள்ளிவிட்டு விட்டார்...அம்பிகா..வேறென்ன..கொசுவத்திதான்..

நாமெல்லாம் அந்தப்பீரியட் ஆளுகளாச்சே..

பயமறியா வயது....தமிழ்வாத்தியார் வீட்டு சுவற்றில்தான் அணுகுண்டுப்பட்டாசை தம்பி வீசுவான். கோபத்தோடு வெளிவருவார். மறுபடியும் ஒரு குண்டு.... வாத்தியார் மறுபடி வருவாரா என்ன..

அது ஏங்க இந்த தமிழ்வாத்தியார்கள் மட்டும் சாதுவா இருக்காங்க..

பக்கத்துல ஒரு கட்டிடம் வேலை நடந்த்தது. காவலுக்கு இரு பசங்க..கொட்டிக்கிடக்கும் மணலில் குழந்தைகளை விளையாடவிடமாட்டார்கள். விடுவாங்களா நம்ம தெருப்பசங்க.

ஒருநாள் இரவில் அவர்கள் உறங்கியதும் தலைமாட்டில்ஒரு மண்டையோட்டுக்குள் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிவைத்துவிட்டு பதுங்க்கிகொண்டார்கள்.

கல்லை எடுத்துவீசி அவர்களை எழுப்பிவிட்டார்கள். விழித்துப்பார்த்துவிட்டு ஓடியவர்கள்தான்.....அடுத்தநாள் வேலைக்கு வரவில்லை....

எங்க டீனேஜ் நாயக, நாயகிகள் யாரு தெரியுமா..நம்ம ரஜினி, கமல், ஸ்ரீதேவிதான்...

எஙகூருக்கெல்லாம் படம் வெளிவந்து மூன்றுவருடம் கழித்துத்தான் வரும்.

அப்ப்டிவெளிவந்து பட்டையைக்கிளப்பிய “16வயதினிலே” படத்த பள்ளித்தேர்வு காரணமாக மிஸ் பண்ணி வருத்தப்பட்டது இன்னும் ஒரு கொசுவத்தி..

அப்போதுதான் இந்த ஒற்றைகல் மூக்குத்தி ஃபேசன் நானும் என் தோழிகளும் வரிசையாகக் குத்திகொண்டோம்.

அப்பல்லாம்  சினிமாவை விட்டால் வேறு பொழுதுபோக்கு இல்லை,

உறவினர் ஒருவர், அவர் மனைவி, அவரின் சகோதரி என் வகுப்புத்தோழி...,தம்பிகள் என்று ஒரு கேங்காகப்போவோம்.

உறவின்ரின் மனைவியும் சகோதரியும் இருக்கிறார்களே. ரொம்ப படத்தில் முழுகிவிடுவார்கள்

கமல்,ஸ்ரீதேவி, நடித்த வாழ்வேமாயம் படத்துக்குப்போனோம்.

ஒருபுறம் சகோதரி.நடுவில்நான்.மறுபுறம் சகோதரி. கடைசி சீனில் வாழ்வே மாயம் என்று பாடிக்கொண்டு கமல் செத்துப்போவாரே.அந்தசீன்...

ஆரம்பிச்சுட்டாங்கப்பா இருவரும் அழுகையை....என் கண்ணைக்குத்தினால்கூட அழமாட்டேன் அப்படிபட்ட என்னிடம்....

ஒருவர்” அய்யோ....நெஞ்செ வெடிக்குதே.....தாங்க முடியலையே”

இன்னொருவர் என் கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு கமல் செத்துருவானா” என்று தேம்ப நடுவில் நான் சிக்கிக்கொண்டு அடித்த சீக்கி இருக்கிறதே...யம்மா....அந்த அண்ணாவுக்கு கோபம்.. வந்து தியேட்டரைவிட்டு வெளியில் போய் நின்றுகொண்டார்...

இதுபோதாது என்று  ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஈரோடு போய் ஒரே நாளில் இரண்டுமூன்று படங்கள் பார்ப்போம்.

இந்தப்பார்ட்டிகளோடு சத்யராஜ் பிரபலமான் “நூறாவதுநாள்” படத்துக்குப்போனால் எப்படி இருக்கும்...

சுவற்றுக்குள் இருந்து ஒரு எலும்புக்கூடு நளினியைக்கட்டிப்பிடிக்குமே....அப்ப அந்தக்கா கத்துன கத்தலில் தியேட்டரே எங்களை திரும்பிபார்த்தது, அப்புறம் கணவர் வெளிநடப்பு....இந்தப்படத்துக்கெல்லாம் ஏன் கூட்டிவர்ரீங்கன்னு அர்ச்சனை வேற நடக்கும்.

அப்புறந்தாங்க வேடிக்கை. இந்தப்பயந்தாக்கொல்லிகளை சும்மா விடலாமா..அப்புறம் திங்கற சோறு எப்படி எங்களுக்கெல்லாம்ஜீரணம் ஆகும்....போடு பிளானை....

தினமும் மாலைநேரம் அந்தக்காவும், தோழியும் வருவார்கள்.

. எங்களது ஓட்டுவீடு... ஹாலில் உள்ள மர விட்டத்தில் என்சின்னத்தம்பியை கறுப்பு ஸ்வெட்டர், முகத்தை மறைத்து வெள்ளைத்துணி.சகிதம்.முனி படத்தில் குத்தவைத்து உட்கார்ந்து ராஜ்கிரண் ஒரு போஸ் கொடூப்பாரே. அது மாதிரி கைகளை அசைத்து வா...வா....என்று கூப்பிடுவதுபோல்உட்கார வைக்கப்பட்டான். கதவுக்குப்பின்னால் என் பெரிய தம்பி மெயின் சுவிட்ச் அருகில்..நான் ஹாலில் மறைந்துகொள்வது.

பெண்கள் இருவரும் ஹாலுக்குள் நுழைந்ததும்  மேலேஉட்கார்ந்திருக்கும் தம்பிதான் கண்ணில்படுவான்.உடனே “ஜங்” கென்று அவன் குதிக்க நான் வீல் என்று சவுண்டு கொடுக்க பெரியவன் மின்சாரத்தைப் பிடுங்க....(கதை வசனம், டைரக்சன் யாரு நானாச்சே)..

எல்லாம் பிளான்படிதான் நடந்தது....வந்தார்கள்....பார்த்தார்கள்.....அலறினார்கள்.....ரோட்டுக்கு ஓடினார்கள்....

அவர்கள் “பேய்....பேய்...”.... என்று கத்திய கத்தலில் ரோட்டில் கூடிய கூட்டம்தான் எதிர்பாராத திருப்பம். அப்புறம் அசடு வழிந்துகொண்டேவெளியே நாங்கள் வந்து விளக்கம் கொடுத்தது வேறு கதை..அடடா...எத்தனை சாகசங்கள்...

இப்பல்லாம் இதுமாதிரி பசங்கள் விளையாடுவார்களா........படிப்பத்ற்கே நேரம் போதவில்லையே..ஊம்....அது ஒரு காலம்....கொசுவத்தியை தூண்டிவிட்ட அம்பிகாவுக்கு நன்றி...

அடுத்து கதை சொல்ல அழைப்பது க..பாலாஜி, வால்பையன்,ஆரூரான்,ஹேமா, அமைதிச்சாரல், இயற்கை,,,,வாங்களேன் நேரமிருந்தால்...






72 comments:

CS. Mohan Kumar said...

வாழ்வே மாயம் படம் பார்த்த காட்சி நீங்க சொன்ன விதம் ரசித்தேன்

மணிஜி said...

கொசுவர்த்தி நல்லாத்தான் புகைஞ்சுது. இப்ப குட்நைட் அட்வான்ஸ் வந்தாச்சு கண்ணகிம்மா!

சாந்தி மாரியப்பன் said...

கண்ணகீ...

கீ கொடுத்திட்டீங்க.. கண்டிப்பா முயற்சி செய்கிறேன்.

முனி வேஷம் படிச்சிட்டு இன்னும் சிரிச்சிட்டிருக்கிறேன்.

Anonymous said...

அருமை நல்ல சுத்தினிங்க கொசுவத்தியை

Unknown said...

//.. எஙகூருக்கெல்லாம் படம் வெளிவந்து மூன்றுவருடம் கழித்துத்தான் வரும். ..//
இப்பெல்லாம், மூனாவது வாரமே(சமயத்துல மூனாவது நாளே) கொட்டாய்ல ஓடுதுங்க..

☀நான் ஆதவன்☀ said...

:))) வாலிப பருவம் அனைவருக்கும் மறக்கமுடியாத குறும்புகளை கொண்டது தான்.

தாராபுரத்தான் said...

படிக்கும் போது நாமே அந்த பாத்திரங்களில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது.

*இயற்கை ராஜி* said...

அழைப்புக்கு நன்றி. விரைவில் முயல்கிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). சொன்னது…
இப்பெல்லாம், மூனாவது வாரமே(சமயத்துல மூனாவது நாளே) கொட்டாய்ல ஓடுதுங்க..//

என்ன சார் சொல்றீங்க...
இப்பதான் படம் ரிலீஸ்- ஆவதுக்குள்ள பார்க்கலாமே..

சந்தனமுல்லை said...

:-))) ரசித்தேன்! டெரராத்தான் இருந்திருக்கீங்க!

ஆதி மனிதன் said...

யப்பா சாமி. போன பதிவுல "பெக்கு" இந்த பதிவுல பேய் பட டைரக்சன். ஒரே டெரரா இருக்கீங்க. அடுத்து என்ன மேட்டரு?

அம்பிகா said...

பதிவிட்டதற்கு நன்றி கண்ண்கி.

நல்ல நகைச்சுவை பதிவு.
இவ்ளோ வாலா நீங்க !!!!!

Unknown said...

ரொம்ப நல்லா புகைவருது:-)

Thenammai Lakshmanan said...

எனக்கே கிலியோ முனியோ அடிச்சது போல இருக்கு கண்ணகி

வால்பையன் said...

என் கதையை சொல்ல ஒரு ப்ளாக் பத்தாதே!

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வுங்க:)))!

//என்று தேம்ப//

இதெல்லாம் நிறைய உண்டு பள்ளி வயதில். பள்ளியிலிருந்தே அழைத்துச் செல்வார்கள் அல்லது திரையிடுவார்கள். சோகக் காட்சியில் வாய்விட்டு தேம்பி அழுபவர் பலரைப் பார்க்கலாம்!!

கண்ணகி said...

நன்றி மோகன்குமார் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

கண்ணகி said...

நன்றி. தண்டோரா.....

கண்ணகி said...

நன்றி. சாரல் சீக்கிரமா வாங்க...

இன்னும் நிறைய இருக்கு.

கண்ணகி said...

நன்றி. நான் ரசித்த...உங்க பேர் நல்லாருக்கு..

கண்ணகி said...

நன்றி. திருஞானசம்பந்த்(பட்டிகாட்டான்)எங்க இப்ப வர்ர படமெல்லாம் ஒருவாரத்துல கொட்டாய விட்டே ஓடிடுதே....

கண்ணகி said...

நன்றி நான் ஆதவன்.

கண்ணகி said...

நன்றிங்க அப்பன் சார்.

கண்ணகி said...

வாங்க..வாங்க..இயற்கை..எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

கண்ணகி said...

நன்றி பட்டாபட்டி. இப்பல்லெலாம் படமா எடுக்கிறாங்க...

கண்ணகி said...

ஹி.ஹி. சந்தனமுல்லை.. ரொம்பப் புகழாதீங்க..

கண்ணகி said...

நன்றி ஆதிமனிதன்,,வருது. வருது..ஒவ்வொண்ணா வருது..

கண்ணகி said...

நன்றிங்க அம்பிகா. எல்லாம் உங்க தயவு...பெண்களும் வால் பண்ணுவாங்க.

கண்ணகி said...

நன்றிங்க.திருமதி.காதர். உங்க பேர் தமிழில் எழுத வரல.

கண்ணகி said...

நன்றிங்க..தேனம்மை லட்சுமனன்..

கண்ணகி said...

ஆமாங்க வாலு... எனக்கும் பத்தல. மீதிய மறுபடி பாத்துக்கல்லான்னு மனசத் தேத்திக்கிட்டேன்.

சீக்கிரம் வாங்க வாலு.. என்னென்ன வால் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா..

Chitra said...

வாழ்வே மாயம் - உங்களுக்கு அல்ல. வாழ்வே கல கல . சரிதானே?

கண்ணகி said...

ஆமாங்க முத்துலட்சுமி....ஆமாம். நன்றி..

பித்தனின் வாக்கு said...

அடி ஆத்தி இது என்ன கூத்து, இந்தப் பெண்ணு என்ன ஒரே வில்லங்கம்மா இருக்கும். எதுக்கு உங்க தம்பி கறுப்பு போர்வை எல்லாம் போர்த்திக் கொண்டு நடிக்கனும்? நீங்க சும்மா நின்னா பத்தாதா? அப்புறம் குறைகள் சொல்லச் சொன்னீர்கள்,அதுனால சொல்கின்றேன். உங்கள் பதிவில் ஒரு குறை, விறு விறுப்பா படிக்கும் போது திடீர்ன்னு முடிஞ்சது. அவ்வளவு சுவாஸ்ரஸ்யமா இருக்கு. நன்றி.

கண்ணகி said...

நன்றிங்க..ராமலட்சுமி

Unknown said...

@ பட்டாபட்டி..

//.. இப்பதான் படம் ரிலீஸ்- ஆவதுக்குள்ள பார்க்கலாமே.. ...//
ஹி.. ஹி..

நானு கொட்டாய்ல சொன்னேனுங்க..

Unknown said...

நல்லாத்தான் சுத்துறீங்க..,

கமலேஷ் said...

ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க...வாழ்த்துக்கள், தொடருங்கள்....

வேலன். said...

அருமையான பதிவு.... வாழ்க வளமுடன் வேலன்.

கண்ணகி said...

நன்றி. கமலேஸ்..கருதுக்கும், முதல் வருகைக்கும்.

கண்ணகி said...

நன்றி.வேலன்..

ஹேமா said...

கண்ணகி...நானுமா ?எங்க தேடி பிடிசிங்க என்னை ?நான் குழப்படியே இல்லையாம்.அம்மா சொல்லுவாங்க.என்ன எழுதன்னே தெரில.சரி முயற்சி செய்றேன்.

உங்களைப்போல இப்பிடி நினவெல்லாம் தெரில.உங்க குழப்படி வாசிச்சு சிரிச்சிட்டேன்.

பழமைபேசி said...

வணக்கமுங்கோ!

நினைவுகள்... சுகமே சுகம்.

கொஞ்சம் வரிசைப்(format)படுத்துறதுல கவனம் செலுத்த முடியுமா?

பழமைபேசி said...

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). கூறியது...
//.. எஙகூருக்கெல்லாம் படம் வெளிவந்து மூன்றுவருடம் கழித்துத்தான் வரும். ..//
இப்பெல்லாம், மூனாவது வாரமே(சமயத்துல மூனாவது நாளே) கொட்டாய்ல ஓடுதுங்க..
//

அதான் நாமெல்லாம் ஊருட்டுட்டு ஓடியாந்துட்டமே? பேசறதப் பாரு பழமைய!

(இஃகி!)

கண்ணகி said...

அறிவுரைக்கு நன்றி, பழமை. திருத்திக்கொள்கிறேன்.

கண்ணகி said...

இப்பத்தப்படமெல்லாம் மூணுநாள்ல கொட்டாயவிட்டே ஓடிடுதுங பழமை. இகி...இகி...நாம ஊரவிட்டு ஓடியாந்தாலும் மனசுபூரா அங்கதான இருக்கு..

கண்ணகி said...

ஹேமா... உங்கள் கவிதைகள் எப்போதும் ஒரு பாதிப்பைத்தரும்.

நம்முடைய பதினம நினைவுகள் மனதை லேசாக்கும்..முயற்சியுங்கள்.

Jerry Eshananda said...

ரசித்தேன்.

Unknown said...

//.. நாம ஊரவிட்டு ஓடியாந்தாலும் மனசுபூரா அங்கதான இருக்கு.. ..//

அப்படி சொல்லுங்க..!!
பழமண்ணா கேட்டுச்சுங்களா..??

Paleo God said...

ஒன்பதாம் தேதியே சுத்திட்டீங்களா??:( நான் இப்பதாங்க படிச்சேன்..:) சும்மா சொல்லக்கூடாது பயங்கர ரவுடி போல :))

ஆனா இப்ப அந்த மாதிரி படம் பார்த்து அழுவராங்களா என்ன ?? ஹும் அது ஒரு காலம்.

கண்ணகி said...

நன்றி சங்கர்...முதல் வருகைக்கு...அதென்னாங்க பயங்கர ரவுடி.

சரி இப்படியாவது ஒரு பட்டம் இருக்கட்டும்....நன்றி...

கண்ணகி said...

நன்றி பட்டிக்காட்டான்..

Unknown said...

//என்சின்னத்தம்பியை கறுப்பு ஸ்வெட்டர், முகத்தை மறைத்து வெள்ளைத்துணி.சகிதம்.முனி படத்தில் குத்தவைத்து உட்கார்ந்து ராஜ்கிரண் ஒரு போஸ் கொடூப்பாரே.//

இதுக்கு நீங்களே மேக்கப் இல்லாம ட்ரை பண்ணியிருக்கலாம்

கண்ணகி said...

எங்கடா குசும்பு ஜெய்சங்கர ரொம்பநாளா காணாமேன்னு பார்த்தேன்.

ஜெய்லானி said...

இளமை காலம் அது ஒரு இனிய காலம் தான்.சூப்பர்......

கண்ணகி said...

நன்றி. ஜெய்லானி. முதல் வருகைக்கு.

புலவன் புலிகேசி said...

கொசுவத்திய சுத்தி ஒரு படம் காட்டிட்டீங்க..

வெங்கட் said...

ரொம்ப ரசிச்சி எழுதி இருக்கீங்க..!
நீங்க பின் குறிப்பு எதுவும் எழுதலையே..
இருந்திருந்தா அதையும் பாராட்டி இருக்கலாம்..!

கண்ணகி said...

நன்றி... வெங்கட்...இன்னும் தொடரலாம் என்ற நினைப்புத்தான்....

R.Gopi said...

நல்லா சுத்துனீங்க கொசுவத்திய...

ஆனாலும், படம் டபுள் ஓகே...

படா டெர்ரரா இருந்திருக்கீங்களே...

ரைட்....

flower said...

you are technically sound.May i know who you are.Because i want to learn something from you.

கண்ணகி said...

நன்றி....ப்ளவர். முதல் வருகைக்கு...எனக்கு எந்த தொழிழ்நுட்பமும் தெரியாது,எல்லாம் இணைத்தில் கற்றுக்கொண்டதுதான்...

கண்ணகி said...

நன்றி கோபி,முதல் வருகைக்கு.. நான் கரப்பான்பூச்சிக்கு பயப்படற ஆளு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பயங்கரமா பயமுறுத்தி இருக்கீங்க..

நானெல்லாம் சினிமா என்ன? ந்யூஸ்ல, பேச்சு வாக்கில, எமொசனலா சொன்னதுக்குக்கூட தொண்டை அடைக்க அழுவென்.. சில சமயம் சில தேசபக்தி, சோக இப்படி எதாச்சும் பாடல்கள் கூட தொண்டை அடைக்க கண்ணீர் வரவழைக்கும்..

( ஆமா அது என்ன முன்னாடியே எனக்கு நன்றி சொல்லி இருக்கீங்க :P)

கண்ணகி said...

வாங்க முத்துலட்சுமி....கருத்துக்கு நன்றி....ராமலட்சுமிக்குப்பதில் முத்துலட்சுமிக்கு நன்றி சொல்லிவிட்டேன்...எல்லா லட்சுமியும் நமக்கு பிரண்டுதான்...

கண்ணகி said...

நன்றி ராமலட்சுமி...கொஞசம் பெயர்க்குழப்பம்....முத்துலட்சுமி ஞாபகப்படுத்தினாங்க....

shortfilmindia.com said...

interesting :)

cablesankar

ராமலக்ஷ்மி said...

//எல்லா லட்சுமியும் நமக்கு பிரண்டுதான்...//

ரைட்டு:))!

*இயற்கை ராஜி* said...

naanum eluthiten ga

கண்ணகி said...

நன்றி. கேபிள்சங்கர்..முதல் வருகைக்கும்.கருத்துக்கும்...

கண்ணகி said...

நன்றி...இயற்கை....படிச்சுட்டேன்..

பனித்துளி சங்கர் said...

அருமையான பகிர்வு !