ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Monday, February 1, 2010

சரக்கு நாங்களும் அடிப்பமில்ல....

x
x
x


  • எனக்கொரு பெக்...தம்பிக்கொரு பெக்......பிராந்தி......

ஊற்றிகொடுத்தார் அப்பா.......சர்க்கரை எல்லாம் போட்டு நல்லாத்தான் இருந்துச்சு.....ஒரு மிடறு குடித்துவிட்டேன்....அந்த வாசனை ஏனோ பிடிக்கவில்லை. .ஏதோ சந்தேகத்தில் ( பெங்களூரில் பாரில் புகுந்து பெண்களை எல்லாம் அடித்தார்களே...அதுமாதிரி அடிச்சுப்புடுவாங்க..அப்புறம் குடிகாரின்னு பட்டம் குடுத்திருவாங்களோ.என்று என் மனக்கண்ணில் தெரிந்திருக்குமோ.......ஆமாங்க  இவங்க கவர்ன்மெண்டே டாஸ்மாக் கடை எல்லாம் நடத்துதே.....அங்க குடிக்கிற ஆம்பளகலப்போய் அடிக்கலாமே...)  குடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்.....நம்புங்க சாமி........இப்பெல்லாம் இல்லங்க,,,,சந்தேகமாப் பார்க்காதீங்க....

தம்பி முழுசாக்குடிச்சுட்டான்....அப்புறந்தாங்க வேடிக்கை.....

புல் மப்பு......அங்க ஓடறான். இங்க ஓடறான்....அலமாரியில் ஏறி பாத்திரங்களை எல்லாம் “கேட்ச்” அப்படின்னு வீசறான்.

அடுக்கிவைத்த பேப்பர்களை வாரி வாரி வீசறான்......

பெல்ட் போட்ட டவுசர இழுத்து இழுத்து விட்டுக்கிட்டு.

இஞ்சி தின்ன குரங்கு மாதிரி........ரஜினி படத்துல குட்டியானை ஒண்ணு தண்ணி அடிச்சுட்டூ ரகள பண்ணுமே...அதுமாதிரி.  அட சாமி.......அளும்புன்னா....அளும்புதான்.. அவன் பண்ணியது.......

சிரிச்சு சிரிச்சு எல்லோருக்கும் வயிறே வ்லிச்சுருச்சு, அம்மாவத்தவிர ......

பின்ன வாந்திஎடுத்துட்டு தூங்கினவனைத்திட்டிக்கிட்டே அவங்கதான சுத்தம் பண்ணினாங்க....

வேற ஒண்ணும் இல்லங்க.....எனக்கும் தம்பிக்கும் அப்ப தீராத சளி...பிராந்தி குடுத்தா சரியாப்போயிருமுன்னு.

ஒரு புண்ணியவான் கொடுத்த ஐடியாலதாங்க இந்தக்கூத்து...

எனக்கொரு சந்தேகம்....ஆம்பளப்பசங்க எந்த வயசுல குடிக்க ஆரம்பிக்கிறாங்க....பெரும்பாலும் கல்லூரி போற பருவம் ஆகத்தான் இருக்கும்..

ஆமா இந்த சரக்கில அப்படி என்னதான் இருக்கு.

ஆனா என்ன ஒண்ணு......குடிக்கிற எல்லாருமே அயோக்கியன் இல்ல...குடிக்காதவங்க எல்லாம் யோக்கியனும் இல்ல்...

அதுலயும் இந்த சரக்கு அடிக்கிறவனாவது அடிச்சுட்டு மட்டை ஆய்டறான்.

இந்த சரக்கு அடிக்காத புண்ணியாத்மாக்கள் இருக்காங்களெ....அவங்க விடற சவுண்டு இருக்கே....எஙகூட்டுக்காரர் மாதிரி.....

ஏதாவது எங்கூட வாக்குவாதம் பண்ணி ஜெயிக்க முடியலைன்னு வச்சுக்கங்க........நம்ம கலைஞர் மாதிரி வேறு ஒரு குற்றத்த நம்மமேல சுமத்துவாங்க.......அதோட விடுவாங்களா.....”உனக்கெல்லாம் குடி,சிகரெட்டுன்னு திரியறாங்க பாரு....அவன மாதிரி வாய்ச்சுருக்கணும்....னு...வசனம் பேசுவாங்க....

என்னமோ நமக்காக இதெயெல்லாம் தியாகம் பண்றமாதிரி.....

நாங்களுந்தான்  சரக்க்டிக்கிறதில்ல. சிகரெட் குடிக்கிரதில்ல......நாங்க என்ன சொல்லிக்கிட்டா திரியறோம்....உங்களுக்கெல்லாம் சரக்கடிக்கிற பொண்டாட்டி வாய்ச்சுருக்கணும்...அப்படின்னு....

கல்யாணத்துக்கு முன்னாடி தண்ணி போட்டா பொண்ணு குடுக்கமாட்டாங்கன்னு நல்லகுடி நாச்சி வேசம் போடறது...அப்புறம் உங்களால்தான் பிரச்சின...கவலய மறக்கறதுக்கு தண்ணி போடறேன்னு ஆரம்பிக்கவேண்டியது....

ஏங்க எங்களுக்கெல்லாம் கவலை வராதா.....நாங்கல்லாம் ஆரம்பிச்சோமுன்னா உங்களுக்கெல்லாம் ஒண்ணும் மிச்சமிருக்காது...ஞாபகத்துல வச்சுக்குங்க....
.

எங்க சொந்தக்காரர் ஒருத்தரு.....ரொம்ப நல்லவரு....மனைவி மேல் ரொம்பப்பிரியம்...(ஸ்லேவ்...பார் .....ராஜீ).......அப்ப்டின்னு சைக்கிள்ள பச்சை குத்திட்டு த்திரிஞ்சவரு. ஸ்லேவுன்னா அடிமைன்னு அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுது..அதிகாலைல குளிச்சு சந்தனமும், சவ்வாதுமாய் நீட்டா இருப்பாரு. நிரந்தர வேலை இல்ல. கிடைத்த வேலைகளைச் செய்வார்.மனைவி சொல்லுக்கு ம்றுவார்த்தை கிடையாது அவ்வளவு பிரியம்..5,7வயதில் 2ஆண்குழந்தைகள்.நேரம் தவறாமல் எல்லா வேலையும் நடக்கும்..

ஆனா இரண்டு மாத்த்திற்கொருமுறை ஒரு ரெண்டுநாளாவது மலையேறிடுவாரு......சரக்குதான் வேறென்ன.....சரக்கு அடிசுட்டா எல்லாம் தலைகீழா மாறிடும்..ஆளத்தேடணும்....எங்கியாவது ரோட்டோரத்திலியோ, சாக்கடை ஓரத்திலியோ விழுந்துகிடப்பார்.அவர் மனைவி கண்ணீரும் கம்பலையுமா எங்கூட்டுக்கு ஓடிவருவாங்க....எந்தம்பியும் அந்தக்காவும் ஆட்டோ எடுத்துட்டுப்போய் வீட்டுக்கு அள்ளிப்போட்டுக்கிட்டு வருவாங்க..அந்த அண்ணாவோட அண்ணந்தம்பிகள் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள்...மானம் போகுது மரியாதை போகுதுன்னு....மனைவிதான் பாவம்.....வேறென்ன.....

அவரின் 5வயதுமகன் ”சாயாயாயம்  குய்ப்பியா....குய்ப்பியா” என்று மழலையில் அவன் அப்பாவை முடியைப்பிடித்துஅடிப்பதையும், அவர் மயக்கத்தில் கிடப்பதையும் பலமுறை பார்த்திருக்கிறேன்.

இவரும் அதிகமா எல்லாம் அடிக்கமாட்டாராம். .ஒரு ரவுண்டிலியே பிளாட் ஆகிவிடுவார்போல. அப்புறம் தண்ணி அடிச்சுட்டு அடுத்தவ்ன்கூட சண்டைபோடறதோ, பொண்டாட்டிய வையறதோ கிடைதாம்.ரோட்டரத்துல மட்டும்தான் படுத்துக்குவாராம். ரொம்ப நல்லவராம்....இப்ப்டிச்சொல்லி அந்தக்கா மனசத் தேத்திக்குவாங்க..

அப்புறம் ஒரு பொறுப்பான அரசு உத்தியோகம் கிடைச்சுது. கொஞசநாள் நல்லா இருந்தார்.அப்புறம் பழைய கதைதான்....அப்புறம் இதெல்லாம் வேலைக்காகாதுன்னு  அந்தக்கா ஒருவழி கண்டுபிடிச்சாங்க...பச்ச வேட்டி கட்டு...பழனிக்கு மாலை போடு ஆறு மாசத்துக்குன்னு......

எல்லாம் மாலை கழுத்துல இருக்குற வரைதான்...அப்புறம் பழய கதைதான்...அப்புறம் அந்தக்கா என்ன செய்வாங்க... ஒரு வாரத்துல வேற்கோயிலுக்கு மாலை போடு....ன்னு ஒரு பதினைந்துவருடம் போராடி பசங்களுக்கு கல்யாணவயசு வயசு வந்திருச்சு...இது தேவையா அப்படின்னு சொல்லிக்கில்லிஇப்ப அந்த பழக்கத்தையே விட்டுட்டாரு. இரண்டு மகன்களும் இன்று நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

இன்று அந்தக்குடும்பம் நல்ல நிலையில் இருக்கக்காரணம் அந்தப்பெண்ணின் பொறுமையும்,தியாகங்களும்தான்..அந்தப்பழக்கத்தை அவர் விட்டாருன்னா அதுக்குக்காரணம் அவரின் குடும்பப்பாசமும்தான்...

இன்னொரு உறவினர் குடும்பம்...கிராமத்து ஆள்.. மகா முரடர்....5,7வயதில் இரண்டு ஆண்குழந்தைகள்.3வயதில் ஒரு பெண்குழந்தை....மொடாக்குடி.....பின் மனைவியைப்போட்டு அடின்னு ஒரே அதகளம்தான்.பார்த்தார், அந்த அப்பாவிப்பெண் தாங்கமுடியாமல் ஒரு முடிவு எடுத்தார்.இரண்டு ஆண்குழந்தைகளையும் அவர் அம்மாவீட்டில் கொண்டுவிட்டுவிட்டு பெண்குழந்தையை வயிற்றில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துவிட்டார்.இன்றும் என் மனதில் நீங்காத வடு அது....இதில் நான் யோசித்த விசயம்.....

ஆண்குழந்தைகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால் பெண்குழந்தைக்கு எந்தக்காலத்திலும் தாயின் உதவி தேவை...அதோடு தன் புருசன் போலவே தன் பெண்ணுக்கும் கிடைத்துவிட்டால் என்ற பயம் ஏற்பட்டிருக்குமோ..அதனால்தான் அந்தப்பெண்குழந்தைக்கு அந்தக்கதியோ.....

அவருக்கென்ன கொஞச நாள் கழித்து வசதி இல்லாத் ஒருபெண்ணை வேறு திருமணம் செய்துகொண்டார் அதுவும் வேறு குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. தன் குழந்தைகளை பார்த்துக்கொள்வது மட்டுமே என்று...பாவம் அந்தப்பெண் அது அவரின் சூழ்நிலை...

.இந்த இரண்டு குடும்பங்களிலுமே பாதிக்கப்பட்டது பெண்கள்தானே....அந்தக்குடும்பத்த உறவினர்கள் உட்பட ஒருவரும்கண்டுகொள்ளமாட்டார்கள். அந்தக்குடுபத்துத்துக்குழந்தைகளுக்கு குடிகாரனின் பிள்ளைகள் என்ற பட்டம் கிடைக்கும்..அவர்களின் திருமண வயதில் இது பெரும்பிரச்சினையாக இருக்கும்....பிள்ளைகள் எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும் தகப்பன் குடிகாரனாக இருந்தால் அந்த வீட்டில் பெண்னோ, பிள்ளையோ எடுக்கத் தயங்குவார்கள்.....பொண்டாட்டிதான் என்ன்மோ தப்பு பண்ணிட்ட மாதிரி எல்லா இடங்களிலும் தலயக் குத்திட்டு நிப்பாங்க.. அவுருபாட்டுக்கு .சம்பந்தமே இல்லாதமாதிரி போஸ் குடுத்துட்டு இருப்பாங்க.சம்பந்தப்பட்ட அந்தப்பெண்கள் ஸ்டிராங்கா இருந்தாங்கன்னா முதல் குடும்பம் மாதிரி போராடி குழந்தைகுட்டிகளை நல்ல நிலைக்குக் கொண்டு வருவாங்க...இல்லாவிட்டால் இரண்டாவது கதைதான்....எத்தனை பார்க்கிறோம்..அப்புறம் இன்னொண்ணு...இந்த ஆட்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் நல்லதையே சொன்னாலும் சபையேறாது..யாரும் காது கொடுத்துக் கேட்கமாட்டாங்க...மதிக்கவும் மாட்டாங்க....

இதெல்லாம் ஏங்க அந்த ஆட்களுக்குத் தெரிய மாட்டேங்குது.உடல் நலத்தையும் கெடுத்துக்கிட்டு மத்தவங்களையும் தொந்தரவு பண்ணிக்கிட்டு.... யாரோ எப்படியோ போகட்டும் ...நமக்கு பாட்டில் இருந்தா சரி என்ற சுயநல்ம்தானே....அப்படி இருப்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல்.விருப்பம் போல  இருக்கலாமே... ஒரு பெண்ணாவது நிம்மதியாக இருப்பாளே.....எல்லா அவமானங்களிலில் இருந்தும் அந்தப்பெண்ணாவது தப்பிப்பாளே.. சிந்தியுங்க சாமி..........

டிஸ்கி: இதுமாதிரி நிறையப்பேருக்கு நேரில் புத்தி சொல்ல ஆசைதான்.....ஆனா அப்புறம் நம்மளப்பார்த்தாலே வில்லியப் பார்த்தமாதிரி தெறிச்சு ஓடிடுவாங்களே....அதனால்தான் இ ந்த மாதிரி.....வேறென்ன செய்ய....

43 comments:

க.பாலாசி said...

//அதுலயும் இந்த சரக்கு அடிக்கிறவனாவது அடிச்சுட்டு மட்டை ஆய்டறான்.

இந்த சரக்கு அடிக்காத புண்ணியாத்மாக்கள் இருக்காங்களெ....அவங்க விடற சவுண்டு இருக்கே....எஙகூட்டுக்காரர் மாதிரி.....//

ஓகோ...

//அவருக்கென்ன கொஞச நாள் கழித்து வசதி இல்லாத் ஒருபெண்ணை வேறு திருமணம் செய்துகொண்டார் அதுவும் வேறு குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. தன் குழந்தைகளை பார்த்துக்கொள்வது மட்டுமே என்று...பாவம் அந்தப்பெண் அது அவரின் சூழ்நிலை...//

இதெல்லாம் ரொம்பவே கொடுமைங்க....

நல்ல இடுகை...

Jafar ali said...

குடிகார சமூகத்துக்கு நல்ல அறிவுரை! மிக்க நன்றி!

அண்ணாமலையான் said...

நல்ல தேவையான முயற்சி.. உங்களின் துனிச்சலான முயற்சிக்கு வாழ்த்துகிறேன்..(இதெலென்ன துனிச்சல்னு கேக்கறீங்களா? இன்னிக்கு நாட்டோட முதுகெலும்பே இந்த வருமானத்துல தான் இருக்கு, அத கொறைக்க சொல்ல துனிச்சல் வேனும்ல?)

ஆதி மனிதன் said...

என்ன ஆச்சு இந்த வலைதளங்களுக்கு? கொஞ்ச நாளா "விபத்து விழுப்புணர்வு" போட்டாங்க அது சரி. ஆனா இப்ப இந்த "குடி" பற்றி அதிகமா எழுத ஆரம்பிச்சிட்டாங்க. என்னமோ போங்க. இதெல்லாம் படிச்சு திருந்துற ஆளுங்களா இருந்தா இவங்கல்லாம் எப்பவோ திருந்திருப்பாங்க. ஆனா நீங்க குறிப்பிட்ட சில நிகழ்வுகள் கூட அடிமட்டத்தில் உள்ளவர்களை பற்றிதான். இவங்கதான் அதிகமா குடிச்சு அழிஞ்சு போறாங்க. மேல்மட்டத்தில் உள்ளவர்கள் குடியினால் அழிந்தது மிகவும் குறைவே. சோ... எங்கயோ நாம நம்ம முயற்சிய மிஸ் பண்றோம்.

//ஆனா என்ன ஒண்ணு......குடிக்கிற எல்லாருமே அயோக்கியன் இல்ல...குடிக்காதவங்க எல்லாம் யோக்கியனும் இல்ல்...//

100% true. ஆனா சராசரி மனைவிமார்கள் தான் இத ஏத்துக்கவே மாட்றாங்க.

ஹுஸைனம்மா said...

//எனக்கொரு பெக்...தம்பிக்கொரு பெக்......பிராந்தி.....//

அய்யோ, முதல் வரியே டெரரா இருக்கே!!

தமிழ் உதயம் said...

யாரும் திருந்தற ரகமா தெரியல. இருந்தாலும் ஊதுற சங்கை ஊதுவோம்.

அம்பிகா said...

நகைச்சுவையாய் சொன்னாலும் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கீங்க. மிக அவசியமான பதிவு.

ஜோதிஜி said...

சமீப காலமாக திருப்பூரில் உள்ள பாரில் கூட்டம் நிரம்பி வழிவதும், அதுவும் சாலை வரைக்கும் கூச்சம் இல்லாமல் வெளியே நின்று கொண்டு தாக சாந்தி செய்து கொண்டு அவர்கள் கொடுக்கும் அலப்பறைகளை பார்க்கும் போது நான் பார்த்து கொண்டு வந்த போது, இதுவும் ஒரு சாதராண கலாச்சாரமாகவே மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றியது. இது சரி தவறு என்பதை விட பாதிக்கப்படுபவர்கள் அத்தனை பேர்களின் குடும்பம் மட்டுமே.

ஜோதிஜி said...

ஏன் தமிழிஷ் ல் இணைப்பது இல்லையா?

Chitra said...

ஆனா என்ன ஒண்ணு......குடிக்கிற எல்லாருமே அயோக்கியன் இல்ல...குடிக்காதவங்க எல்லாம் யோக்கியனும் இல்ல்...

......இந்த பதிவு, ஒரு நல்ல சரக்கு (மேட்டர்).
கலக்குங்க..........

☀நான் ஆதவன்☀ said...

எல்லா நிகழ்ச்சிகளை படிக்கும் போதும் கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் இதுக்கு அடிமை ஆகாம ஏதாவது பார்ட்டின்னு வந்தா மட்டும் தண்ணியடிக்கிற சிலபல நல்ல பசங்களும் இருக்காங்களே!

பார்க்கலாம் அந்த சிலபல பசங்களுக்கு வர்ரவ ’குடிக்காதீங்க’ன்னு கேட்டா அப்புறம் குடிக்காம போக கூட வாய்ப்பிருக்கு.... :-)

Prathap Kumar S. said...

ஆரம்பத்துலேயே அடவாடியா தொடங்கி நடுவுலேருந்த கடைசில வரை டச்சிங்காக இருந்தது. உண்மைதாங்க பெண்களுக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கல. கடைசில பாதிக்கப்படறதுன்னு பார்த்தீங்கன்னா பெண்கள் தான்... ஆணாதிக்க சமுதாயத்துல இதுவும் ஒரு அங்கம்...

உங்க எழுத்தை ரொம்ப ரசிச்சேன்... அதுவும் ஆரம்பத்துல எனக்கொரு பெக், என்தம்பிக்கொரு பெக்.... ஹஹஹ ஆடிப்போய்ட்டேன்...

ஹேமா said...

இவங்க எல்லாம் தானாத் திருந்தணும்.சொல்லித் திருந்துற ஜென்மங்கள் இல்லை.அடுத்தவங்க கஸ்டத்தை உணரணும்.தன் சுகத்துக்கு குடிச்சு சாப்பிட்டு பேசாம படுக்குதுகளா.அப்பத்தான் அவங்க வீரதீரத்தையெல்லாம் காட்டுவாங்க.
இன்னும் திட்டணும்.வேணாம்.

தாராபுரத்தான் said...

வீட்டுக்கு வீடு இந்த கதைகள் நம்ம ஊரிலும் உள்ளது.அருமையம்மா.

புலவன் புலிகேசி said...

:)

மணிஜி said...

சரக்குன்னா இன்னாதுங்க?

Unknown said...

அக்கா எனக்கும் சளி . என்ன பண்ணுறது. பிரந்தி குடிச்ச உடனே உங்களுக்கு சரி ஆனதா? அடுத்த பதிவில் தெரியப்படுத்தவும்

கண்ணகி said...

நன்றி பாலாஜி...


நன்றி.ஜாபர்.முதல் வருகைக்கும். கருத்துக்கும்...உங்கபேரு எனக்கு சொல்லத்தெரியலே...

:) நன்றி அண்ணாமலையார்.

வேற ஒண்ணும் தோணலை ஆதிமனிதன். ஆமா சராசரி கணவன்மார்கள் குடிக்காமல் இருக்கலாமே...

நன்றி,,ஹுசெனம்மா...

நன்றி. தமிழுதயம் சார்.

நன்றி அம்பிகா.

கண்ணகி said...

ஜோதிஜி...இந்த பார் போகும் ஆணகள் உழைப்பதில் பாதி பணத்தை அங்கேயும் இன்னும் பகுதியை ஓட்டலிலும் செலவழித்துவிட்டு மீதிதான் வீட்டுக்குத்தருகிறார்கள். பாவம் அந்தப்பெண்கள் என்ன செய்வார்கள்.

ஜோதிஜி தமிலிஷ் அனுப்ப புது ஐ.டி. தரணுமா. கெச்.டி.எம்.எல். உடன் என்னால் போராட முடியவில்லை.

கண்ணகி said...

நன்றி. சித்ரா..

நன்றி..ஆதவன்...

கண்ணகி said...

நாஞ்சில் பிரதாப் நன்றிங்க.... கொஞசம் அடாவடியா எழுதுனாத்தான் படிப்பாங்க போல. அதனாலதான் இப்படி..ஹி..ஹி.

கண்ணகி said...

மீதிய நீங்க திட்டுங்க ஹேமா...

நன்றிங்க..அப்பன்..

கண்ணகி said...

நன்றி புலிகேசி.

தண்டோரா பலசரக்குக்கடையில வேண்ணா கேட்டுப்பாருங்களேன்..

கண்ணகி said...

அத எங்கப்பாகிட்டதான் கேட்கணும்...ஜெகனாதன்.

மாதேவி said...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு.

கண்ணகி said...

நன்றி...மாதேவி..கருத்துக்கும் முதல் வருகைக்கும்..

Sakthi said...

nallavela naan unga thambi kaila maatala..!

கண்ணகி said...

நன்றி.சக்தி முதல் வருகைக்கு.கருத்துக்கு..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அக்கா..
இந்த பதிவுல.... பெக் , பிராந்தி என்னென்னமோ
வார்த்தைகள் வருதுங்களே...

அப்படினா என்னாங்கா?

கண்ணகி said...

இருங்க...வெளியூர்க்காரரையோ, ரெட்டைவாலையோ கேட்டுச் சொல்றேன்பா.....

Dr.Rudhran said...

good keep writing

கண்ணகி said...

நன்றி டாக்டர் சார். முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

Anonymous said...

நல்ல கருத்துள்ள பதிவு. மிக்க நன்றி!

கண்ணகி said...

illaingka vinitha....

அன்புடன் மலிக்கா said...

என்னத்தசொன்னாலும் புரியாத சில பல ஜென்மங்களை என்னச்சொல்ல.

நல்லதொரு இடுகை

கண்ணகி said...

அவர்கள் வாழ்க்கை அவரவ்ர் கையில் மலிக்கா. நாம் என்ன செய்ய...

வெள்ளிநிலா said...

i hope you like to game to play. for further information pls read this blog - http://vellinila.blogspot.com/2010/01/blog-post_28.html

Unknown said...

// ஆண்குழந்தைகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால் பெண்குழந்தைக்கு எந்தக்காலத்திலும் தாயின் உதவி தேவை...அதோடு தன் புருசன் போலவே தன் பெண்ணுக்கும் கிடைத்துவிட்டால் என்ற பயம் ஏற்பட்டிருக்குமோ..அதனால்தான் அந்தப்பெண்குழந்தைக்கு அந்தக்கதியோ..... //

ஆமாங்க..., 100 % உண்மை

கண்ணகி said...

நன்றிங்க வெள்ளிநிலா. வருகைக்கு.

கண்ணகி said...

நன்றி.. பேநாமூடி....

சாமக்கோடங்கி said...

தினம் ஒரு தகவல் சுப்பர்..

நன்றி..

ஜோதிஜி said...

நீங்கள் இயல்பாக கணக்கு தொடங்கியே பதிவு ஏற்றலாம்.

பிரேமா மகள் said...

hai... innikkuthan unga pativiRku vanthen... kalakkaringa.. oru ponnu thanni adichchannu thairiyama sollaringa....
v.good... naanum thanni adichchathai sonnen.. ore vanthu kumaichchathu..

if possible.. visit that..

http://premamagal.blogspot.com/2010/04/blog-post_22.html