எங்கள் விட்டுக்கு அருகில் உள்ள நண்பர் வீட்டில் இரவில் கெடாவிருந்து.அழைப்பு வந்த்து எங்களுக்கும், கணவரின் சக அலுவல்ருக்கும். அவர் என் கணவரின் தொழில் போட்டியாளர்.இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள்.என் கணவருக்கு ரெகுலர் கஸ்டமர்கள் அதிகம். ரொமப நாட்களாக தொழில் செய்பவர். என்ன செய்தாலும் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களிடம்தான் வருவார்கள். அந்தக்காண்டு...என் கணவரின் நண்பருக்கு.....
என்ன செய்தார் தெரியுமா....
அவர் பத்திரிக்கைகளில் எல்லாம் எழுதுவார். அவர் ஒரு கதையில் என் கணவர் பேரை வில்லனுக்கு வைத்து ஊர் பேரோடு போட்டு வெளியிட்டார். குங்குமத்தில் வெளிவந்தது. என் கணவர் அதைப்பார்த்துவிட்டு சிரித்துவிட்டார். ஆனால் விசயம் அதொடு போகவில்லை. அந்தப்பேரில் அந்த ஊர் முக்கியஸ்தர் ஒருவரும் இருந்தார். அவர் உடனே தன் படைபரிவாரங்களோடு கிளம்பிவந்து அந்த நண்பரை ஒரு பிடிபிடித்துவிட்டார். முழிமுழியென்று முழித்துப்போனார் பார்ட்டி....அப்புறம் என்ன.... என் கணவரிடம் சரண்டர். “ அய்யா.... அவர் எழுதியது என்னைப்பற்றித்தான். உங்களை இல்லை” என்று மணிககணக்கில் பஞ்சாயத்துப்பேசி அனுப்பி வைத்தார். இப்படி அடிக்கடி நடக்கும். ஏதாவது ஏடாகூடமாக செய்து வம்பில் மாட்டிக்கொள்வார்.
கதைக்கு வாங்க. நண்பர் பத்து நாட்கள் வெளியூர் போய்விட்டார். அவர் அலுவலகத்துக்கும் விருந்து நடைபெறும் வீட்டிற்கும் நடுவில் ஒரு வேலியும் அதில் ஒரு படல் வைத்து வழி உள்ளது.நண்பர் அந்த வழியாகத்தான் அந்த வீட்டுக்குச் செல்வார். வீட்டுக்காரர்கள் அதில் கழிவறை கட்டுவதற்காக 8அடிஆழம்6அடி அகலத்தில் கிணறு மாதிரி வெட்டி வைத்திருந்தார்கள். அது அவருக்குத்தெரியாது.
அப்போதுதான் முதல் பந்தி ஆரம்பித்தது. இலையில் கை வைத்தோம். சடசடவென்று மழை. கரண்ட் போய்விட்டது. மெழுகுவர்த்தி தேடி எடுப்பதற்குள் “ டொம்” “ ஆ அய்யொ அம்மா” என்று ஒரு அலறல்.
அவ்வள்வுதான், “யாரோ விழுந்துவிட்டார்கள்” என்று ஒரே கூக்குரல். எல்லோரும் எழுந்துவிட்டோம்......”சார்தான் விழுதுவிட்டார்” என்று அடுத்த சத்தம். என்க்கு கதிகலங்கிவிட்டது. அழுதுகொண்டே இருட்டுக்குள் என் இரண்டு வய்துக்குழந்தையோடு ஓடினேன்.
ஆனால் விழுந்தது கதைப்பார்ட்டி....... அழுகையை நான் நிறுத்திக்கொள்ள, அவர் மனைவி தொடர்ந்தார்.....அவர் குழி இருப்பது தெரியாமல் வேலியைதிறந்து காலை வைக்கவும், கரண்ட் போகவும்....... ஒரே லக..லக..லகதான்.
மழையோ கொட்டுகிறது. ஏணி ஒன்றை உள்ளேவிட்டார்கள். ஏறமுடியவில்லை. கால் முறிந்துவிட்டது. பாவம் துடித்துப்போய்விட்டார் மனிதர்.........நான்குபேர்கள் உள்ளே ஒரு கட்டிலோடு இறங்கி மேலே தூக்கிப்போட்டார்கள்.
அப்புறம் என்ன? ஆஸ்பத்திரிதான். மாவுக்கட்டுதான். அவர் மனைவியோடு நானும் ஈரோடு போய் நடுராத்திரி இரண்டு மணிக்கு பசியோடு திரும்பி வந்தால் இங்கே எல்லாம் சுத்தம். கழுவி கமுத்தி வைத்துவிட்டார்கள்.
விழுந்தது அவர்கள் வீட்டில். விழுந்தது எங்கள் நண்பர் ஆனதால் நாங்கள் கூட்டிப்போனோம். ந்ம் வீட்டில் விழுந்தவர்களை ந்மக்குப்பதிலாக் கூட்டிப்போனார்களே. எதாவது எடுத்து வைப்போம் என்று நினைத்தார்களா?...அவர்கள் ஜாம்..ஜாமென்று விருந்து போட்டு அவர்கள் வேலையை முடித்துக்கொண்டார்கள். நாங்கள்தான் சிவபட்டினி. குழந்தைக்கு பழத்தைக்கொடுத்து பசியாற்றினோம்.
“ ஆண்டவன் அன்று அந்த வீட்டு அரிசியில் எங்கள் பேரை எழுதவில்லை போல”
யோகி 78
53 minutes ago
48 comments:
அவர் வீட்ல கிணறு வெட்டினது அவருக்கே தெரியாதா?
//ஆனால் விழுந்தது கதைப்பார்ட்டி....... அழுகையை நான் நிறுத்திக்கொள்ள, அவர் மனைவி தொடர்ந்தார்..//
இந்த சிரித்து விட்டாலும் அதற்கடுத்து அவருக்கு கால் முறிந்ததைக் கேட்டு கஷ்டமாக போய்விட்டது
ஓகோ...
//அழுகையை நான் நிறுத்திக்கொள்ள, அவர் மனைவி தொடர்ந்தார்.....//
என்னா.... டைமிங்... கலக்கல்
இடுகை அருமை
ரசித்தேன்
கோபம்.
எண்ணி(?) எனக்கு கணக்கு சொல்லுங்கள்.
ஏனிந்த அவசரம்?
//அப்புறம் என்ன? ஆஸ்பத்திரிதான். மாவுக்கட்டுதான்.//
இயல்பு நிகழ்வுகளையும் நகைச்சுவையா சொல்றீங்க வாழ்த்துக்கள்
குழி வெட்டப்பட்டது, விருந்து நடந்த வீட்டில். இவர்தான் பத்து நாளாக ஊரில் இல்லையே. ஆதவன்.
”யாருப்பா இது.
ம” புதுவரவு. நன்றி.
நன்றி.... தம்பி. கதிர். ரசிப்புக்கு நன்றி.
ஜோதிஜி. எதுக்கு கோபம். எண்ணி....எண்ணி. பார்த்துட்டேன். ஒரு பிழையும் காங்கலையே????நீங்களே சொல்லிவிடுங்க...... என்ன பிழையென்று??? திருத்திகொள்கிறேன்.
கோபம், சண்டை, அழுகை, நகைச்சுவை எல்லாம் கலந்துதானே வாழ்க்கை. வசந்த்.
அழுகை நிறுத்திக்கொள்ள , தொடர்ந்தார் இடம் எனக்கும் பிடிச்சிருந்தது :))
ஜோதிஜி சொல்வது நீங்க அவசரமாக தட்டச்சியதால் ஏற்பட்ட தட்டச்சு பிழைகளைத்தான் :)
நன்றி முத்து. திருத்திகொள்கிறேன்.
/ந்ம் வீட்டில் விழுந்தவர்களை ந்மக்குப்பதிலாக் கூட்டிப்போனார்களே. எதாவது எடுத்து வைப்போம் என்று நினைத்தார்களா?./
இப்புடியெல்லாம் எதிர் பார்க்குறது யாரு தப்பு. இவ்வளவு அப்புராணியா நீங்க?
ஆமாங்க. ஆமாம். அப்படிபட்ட் அப்புராணிதாங்க. வானம்பாடி சார்.
நகைச்சுவையோடு, நல்ல செய்தியையும் கொடுத்திருக்கிறீர்கள்....அருமை.
வாழ்த்துக்கள்
நன்றி. ஆரூர்.
adutha pathivu enga
//அழுகையை நான் நிறுத்திக்கொள்ள, அவர் மனைவி தொடர்ந்தார்.....
நன்றாக வாய் விட்டு சிரித்தேன். :=))
ஆனா என்னோட Manager கிட்ட மாட்டிகிட்டேன் :(
நன்றி சுரேஸ்.
\\“ ஆண்டவன் அன்று அந்த வீட்டு அரிசியில் எங்கள் பேரை எழுதவில்லை போல”\\
இயல்பான நகைச்சுவையோடு அழகாகவும் எழுதுகிறீர்கள்
நன்றி. ஈரோடு சுரேஸ். அம்பிகா. முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.
இதோ வந்துட்டேன். ஜெய்சங்கர்.
//ஆனால் விழுந்தது கதைப்பார்ட்டி....... அழுகையை நான் நிறுத்திக்கொள்ள, அவர் மனைவி தொடர்ந்தார்..//
:))))))))))))
நன்றி.....முதல் வருகைக்கும் கருத்துக்கும்.....குறை ஒன்றும் இல்லை கண்ணா....
சில நேரத்தில் இப்படியும் நடந்துவிடுகிறது.நல்ல பதிவு.
நன்றி...தாராபுரத்தான் சார்...
////ஆனால் விழுந்தது கதைப்பார்ட்டி....... அழுகையை நான் நிறுத்திக்கொள்ள, அவர் மனைவி தொடர்ந்தார்..//
யப்பா.... தப்பிச்சாச்சா... இருந்தாலும்..என்னா வில்லத்தனம்...
ரைட் நடத்துங்க...
நகைச்சுவை கோர்வையா இருக்கு..
வாழ்த்துக்கள்...
அடிப்பட்டு வலியில துடித்தததான் எழுதியிருக்கிங்க...இருந்தாலும் நகைச்சுவையாய்... இருந்தது.
அதிலும்... நீங்க நிறுத்திக்கொள்ள....
அவங்க ஆரம்பித்த இடம் கண்முன் தோன்றியது.
ச்ச....கண்ணகி எவ்ளோ டைமிங்கோட நகைச்சுவை கோபம்ன்னு கலந்து கட்டி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறீங்க.இயல்பு நிகழ்வுகளை ரசிப்பதும் அழகுதான்.
நன்றி...ஹேமா...
:)))
:(
அக்கா கொஞ்சம் "spelling mistake correct" பண்ணி பிறகு போஸ்ட் போடுங்கள். படிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது.
மற்றபடி //அழுகையை நான் நிறுத்திக்கொள்ள, அவர் மனைவி தொடர்ந்தார்.....// உண்மையிலேவா?
திருத்திக்கிறேன் ஆதிமனிதன்..இதுஒரு பழய பதிவு. தவறுதலாக மறுபடி வந்துவிட்டது...
நிஜம்தான்...
நன்றி...கருணாகரசு...
நன்றி இயற்கை..
நன்றி சஞ்சய்காந்தி....
//“ ஆண்டவன் அன்று அந்த வீட்டு அரிசியில் எங்கள் பேரை எழுதவில்லை போல” //
அப்படித்தான் இருக்கும்போல!!
நைட் 2 மணிக்கு சாப்பிடுவது , உடம்புக்கு கெடுதலுங்கக்கா..
பக்கத்து வீட்டுக்காரர்கள் , உங்கள் மேல் எவ்வளவு கரிசனம் வத்துள்ளனர்.
அவர்களுக்கு ஏதாவது கிப்ட், வாங்கி கொடுங்க முதல்ல...
அக்கா..
என்னோட கமென்ஸ்க்கு ஏதாவது மறுமொழி போட்டிருக்கீங்களானு
அப்படீனு வந்தேன்..
நான் சும்மா டமாசுக்கு சொன்னேன்..
தயவு செய்து , அவங்களுக்கு , கிப்ட் வாங்கி கொடுக்காதீங்க..
வரேங்கா...
தம்பி,,,பட்டாபட்டி. வெளியில் கொஞம் வேலை. அதனால் பதில் அளிக்கத்தமதம் ஆய்போச்சு...ஸாரி.....உங்கள் ஆலோசனை நல்லாத்தான் இருக்கு..பக்கத்து வீட்டுக்காரர்க்கு கிப்ட் வாங்கிகொடுத்தா நம்மள மறக்கமாட்டாங்கதானே...
நகைச்சுவை கோர்வையா இருக்கு..
வாழ்த்துக்கள்...
நன்றி ஜீவன்(தமிழமுதன்) முதல் வருகைக்கும் கருத்துக்கும்..
தினமும் ஒருதடவை வந்து பார்த்திட்டு போயிட்டு இருக்கோமின்னு தெரிஞ்சுக்க தாயி்.
நன்றி..தமிழ்திரட்டி...
மறக்காமல் வந்த அப்பன் சார்.. நன்றிங்க.. வந்துர்ரேன்....சிக்கீரம்..
ஈரோட்டுக்குப் போனவர்கள் வரும் போது சாப்பிட்டு வராதது உங்க குத்தம். ஆனாலும் உங்களுக்கும், கணவருக்கும் பெரிய மனசுங்க. உங்களிக்கு கெடுதல் நினைக்கும் ஒருவருக்கு கூட ஆபத்தில் உதவி செய்கின்றீர்கள் பாருங்கள் அது தான் மனிதர்கள் குணம். நன்றி.
நன்றி...பித்தன்....
change your blog visiter widget
Post a Comment