ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Sunday, November 1, 2009

ஆயிரம் பொன் பரிசு

இரண்டு நபர்கள் காட்டுப்பாதை வழியாக பக்கத்து ஊருக்குச்சென்றார்கள். வழியில் இன்னொரு நபரும் அவர்களுடன் இணைந்துகொண்டார். சிறிது தூரம் நடந்தவுடன் மூவருக்கும் பசிக்க ஆரம்பித்தது.

முதல் நபரிடம் ஐந்து பழங்களும், இரண்டாம் நபரிடம் மூன்று பழங்களும் இருந்தன்.

மூன்றாம் நபர் நான் பணம் தருகிரேன்...... எனக்கும் பழம் தாருங்கள்... என்றார்.

மூவரும் பழத்தை சமமாகப் பங்கிட்டு சாபிட்டார்கள். மூன்றாம் நபர் அவர்களுக்கு எட்டு ரூபாய் தந்தார்.

அந்தப்பணத்தை மற்ற இருவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்???......என்ன விகிதத்தில் பகிர்ந்து கொள்வார்கள்............

விடை சொல்லுவோருக்கு ஆயிரம் பொன் பரிசு.

முந்துங்கள்......

26 comments:

நாகா said...

நெஜம்மாவே இதுல ஏதாவது ட்விஸ்டு இருக்குமோ? 5 - 3 இல்லதானே?

கண்ணகி said...

ட்விஸ்ட் எல்லாம் இல்லை. கண்டுபிடியுங்கள். நியாயமான பங்கீடுதான்.

கண்ணகி said...

நன்றி வால். கவனிக்கிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

தெரியலையேங்க. பதில் சொல்லுங்க

கண்ணகி said...

அசுக்கு.புசுக்கு. ஒரு பத்து பேராவது கேட்கட்டும். அதுவரை மண்டை காயுங்கள்

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ் பத்து பேரு சீக்கிரம் வாங்கப்பா.

இல்லைன்னா எனக்கு மட்டும் மெயில்லயாவது அனுப்புங்களேன்.

கண்ணகி said...

ஆயிரம் பொன் என்க்கு தந்தால் சொல்லுவேன்

vasu balaji said...

நினைச்சேன். சவரன் விக்கிற விலைக்கு ஆயிரம் பொன். ஹூம். சாப்புட்டாங்க. பங்கு போட்டாங்க. அடுத்தவன் கணக்கு நமக்கெதுக்கு. தெரியல தாயி.

கண்ணகி said...

இப்படி எத்த்னைபேர் வூட்டு கல்யாணத்துலே சாப்பிட்டுவிட்டு மொய் எழுதாமே போனீங்க. மொய் எழுதாதவங்க குலுக்களில் சேர்த்த்க்க்கொள்ளப்படமாட்டார்கள்.
அவ்..அவ்....

☀நான் ஆதவன்☀ said...

இந்த புதிருக்கு இன்னும் பதில் சொல்லலையே?

//ஒரு பத்து பேராவது கேட்கட்டும்//

இந்த பத்தாவது பின்னூட்டத்தை பத்தாவது பேராக எடுத்துக்கொண்டு விடையை தயவுசெய்து கூறவும் :)

கண்ணகி said...

பொறுமை. பொறுமை. ஆதவன். அந்தப்பத்துப்பேரை நீங்கள்தான் கூட்டிவரவேண்டும். இல்ல்யென்றால் இரண்டு நாளில் நானே சொல்லிவிடுவேன். ஹி.ஹி.ஹி.

தாராபுரத்தான் said...

நானும் உங்கள்வுடன் சேர்ந்து கொள்கிறேன்.

Madhavan Srinivasagopalan said...

என்னங்க .. ரொம்ப ஈசியான புதிர்லாம் போடறீங்க..? ஆனாலும், நல்ல கணக்கு. நன்றி.
5 பழம் வைத்திருந்தவர் ரூ. 7 ம் , 3 பழம் வைத்திருந்தவர் ரூ.1 ம் பெறுவார்கள்.

விளக்கம்
மொத்த பழங்கள் 8 . மூவரும் சமாமாக பங்கிட்டதால் , தலா 8 /3 பழங்கள் ஒவ்வொருவரும் சாப்பிட்டனர்.
மூன்றாமவர் 8 /3 பழங்களுக்காக ரூ 8 கொடுத்தார். அதாவது ஒரு பழத்தின் விலை 8 / (8 /3 ) = ரூ 3 /-

முதலாமவர் 5 பழங்களில் 8 /3 (2 .6666666667 அதாவது 2 மற்றும் மூன்றில் இரண்டு பங்கு பழங்கள் ) சாப்பிடதால், அவர் மூன்றாமவருக்கு கொடுத்த பழங்களின் எண்ணிக்கை 5 - 2 .66666666667 = 2 .333333333333 அதாவது 2 மற்றும் மூன்றில் ஒரு பங்கு பழங்கள்.
ஒரு பழம் ரூ 3 , எனவே, 2 .333333333333 பழங்களின் விலை ரூ.7 ஆகும்.

இரண்டாமவர் 3 பழங்களில் 8 /3 (2 .6666666667 அதாவது 2 மற்றும் மூன்றில் இரண்டு பங்கு பழங்கள் ) சாப்பிடதால், அவர் மூன்றாமவருக்கு கொடுத்த பழங்களின் எண்ணிக்கை 3 - 2 .66666666667 = 0 .333333333333 அதாவது மூன்றில் ஒரு பங்கு பழமாகும்.
ஒரு பழம் ரூ 3 , எனவே, 0 .333333333333 பழங்களின் விலை ரூ.1 ஆகும்.

மொத்தம் ரூ 7 + 1 = 8

பின் குறிப்பு :
எனது முந்தைய விடையில், கடைசி வரியில் '7 ' என்பது கூகிள் தமிழ் தட்டச்சு செய்யும் பொது '௭' என் வந்து விட்டது. '7 ' என்ற எண்ணிற்கு தமிழில் '௭' என்பது சிலருக்கு தெரியாமலிருக்கும்.. எனவே எனது முந்தைய பதிவை வெளியிடாமல், இந்த பதிவை வெளியிடுமாறுகேட்டுக்கொகிறேன்.
மேலும்.. எனக்கு பரிசு எதுவும் வேண்டாம் நன்றி. எனது வலைப்பூவிற்கும் வந்து (படித்தது) உங்கள் கருத்தினை சொல்லவும். http://madhavan73.blogspot.com

கண்ணகி said...

மாடி73 கணக்குப்புலிங்க நீங்க.. நானே அதை மறந்துட்டேன்....உங்க விடை சரி. இது என் சினேகிதிகிட்ட சுட்டது. அவங்க சொல்லி கொடுத்தது இது.

வேறு மாதிரி சொல்லிக்குடுத்தாங்க. நன்றிங்க. உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

sathishsangkavi.blogspot.com said...

//அந்தப்பணத்தை மற்ற இருவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்???......என்ன விகிதத்தில் பகிர்ந்து கொள்வார்கள்............//

ஏங்க என்னையும் சேர்த்து மூன்றாக பங்கு போடுங்க...

Madhavan Srinivasagopalan said...

//மாடி73 கணக்குப்புலிங்க நீங்க.. நானே அதை மறந்துட்டேன்....உங்க விடை சரி. இது என் சினேகிதிகிட்ட சுட்டது. அவங்க சொல்லி கொடுத்தது இது.

வேறு மாதிரி சொல்லிக்குடுத்தாங்க. நன்றிங்க.//

I wonder is there any other way. Can you please let me know the other way.

Also, on what dare, you announced '1000 pon, prize'?

கண்ணகி said...

நன்றிங்க... வாத்தியார் அய்யா. ஏதோ ஆயிரம் பொன் பரிசுன்னு போட்டலாவது வந்து படிப்பாங்களேன்னு நப்பாசையில் போட்டதுங்க.அதுக்காக பிரம்பக்காட்டி பமுறுத்தாதீங்க. இனிமேல் காப்பி அடிக்கமாட்டேன்.

விடை: பழம் வைத்திருந்த இருவரும் ஒவ்வொரு பழத்தையும் 3துண்டுகள் ஆக்கினார்கள்.

முதல் ஆள் 5பழங்கள் 15 துண்டு

இர்ண்டாம் ஆள் 3பழங்கள் 9துண்டு.

15ம்9ம் 24. அதை மூன்று பங்காக்கினால் தலா 8

இப்போது முதல் ஆள் தனக்கு 15ல் 8ஐ வைத்துக்கொண்டு 7ஐ மூன்றாவது ஆளுக்கு கொடுத்தார்.

இர்ண்டாம் ஆள் 9ல் 8ஐ வைத்துக்கொண்டு 1துண்டை மூன்றாம் ஆளுக்குக்கொடுத்தார்.

பணத்தையிம் அதேபோல் பிரித்துக்கொண்டார்கள்.

நீங்க சொன்ன விடையேதான்.சரிங்களா.
ரொம்ப நன்றிங்க.

Madhavan Srinivasagopalan said...

//ஏதோ ஆயிரம் பொன் பரிசுன்னு போட்டலாவது வந்து படிப்பாங்களேன்னு //

நல்ல யுக்தி.. பாராட்டுக்கள்.

எனது விடை எல்லோருக்கும் சுலபமாகப் புரியாது. உங்களின் விடை, 'common sense' இருந்தாலே புரியக்கூடியது (சற்று எளிய முறை).

பின்குறிப்பு : நான் ஆசிரியர் அல்ல. கையில் பிரம்பும் அல்ல. கவலை வேண்டாம்.

Madhavan Srinivasagopalan said...

I mean, 'My answer is Theoretical, while what you said is practical'.

கண்ணகி said...

நன்றிங்க மேடி73

தமிழ் பையன் said...

நல்ல கணக்கு. திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் அடிக்கடி கேட்கலாம் இந்தக் கணக்கை. அவர் மேடி மாதிரி இல்லாம கண்ணகியின் பதில் போல எளிதாகச் சொல்வார்.

கண்ணகி said...

நன்றி...தமிழ்பாய்...

Madhavan Srinivasagopalan said...

உங்களின் இந்த பதிவினை 'வலைச்சரத்தில்' அறிமுகம் செய்துள்ளேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும். நன்றி.

madhavan 17-12.2010

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

வலைச்சரத்தில் உங்க பதிவு பார்த்து வந்தேன்.. நல்லா இருக்குங்க... உங்க கணக்கீடு. :-))

கண்ணகி said...

நன்றி...வாத்தியார் சார்...மனமார்ந்த நன்றி..

கண்ணகி said...

நன்றி...ஆனந்தி...வருகைக்கும் கருத்துக்கும்...அறிமுகம் செய்த மாதவன் சாருக்கு மறுபடிய்ம் நன்றி...