என் மனசின் குரல் கேட்டதுஅப்போதுதான் முதல்முறையாக இருக்க வேண்டும். அப்போது என் வயது 12இருக்கலாம். உறவினர் ஒருவர் வீட்டில் பணம் திருட்டுப்போய் விட்டது. அவர்களிடம் வேலை செய்யும் ஒருவர் மேல் சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அடி.உதை. நகக்கண்ணில் ஊசி என்று பல சித்ரவதைகள் நடந்தாகக் கேள்விபட்டேன். ஒரு பலனும் கிடைக்கவில்லை. இப்போதாக இருந்தால் மனித உரிமை பாதிக்கப்பட்டது என்று போர்க்கொடி தூக்கிவிடுவார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவயதில் இருந்தே என்னைதோள்மீது தூக்கித் திரிந்தவர். சுந்தரம் அண்ணா என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
இந்த நிலையில் ஒருநாள் இரவு என்னை குளிக்கவைத்து என் உறவினர் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். நான் தலைச்சன் பெண். அன்று அமாவாசை. என் உள்ளங்கையில் மை தடவிப்பார்த்தால் திருடனைக்கண்டு பிடித்து விடலாமாம். சுற்றிலும் நாலைந்து பெரியவர்கள். போலீஸ். மந்திரவாதி. நடுவில் நான். நேரமோ இரவுபத்துமணி. தூக்கக்கலக்கத்தில் வந்த நான் சூழ்நிலையப்பார்த்ததும் பயந்து விட்டேன். என் அப்பா வெளியூர் போய்விட்டார். இருந்திருந்தால் என்னைக்கூட்டிபோக அனுமதித்திருக்க மாட்டார்.
பூஜை போடப்பட்டது. பாப்பா! உள்ளங்கையை நன்றாகப்பார். சுந்தரம் பணத்தை எங்கே ஒழித்து வைத்திருக்கிறான் என்று. கூட யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று சொல் ! என்றார் பூசாரி.
உள்ளங்கையை உற்று உற்றுப்பார்த்தால் ஒன்றுமே தெரியவில்லை. லைட் வெளிச்சம்தான் அதில் பட்டு எதிரொலித்தது. !!ஒன்றும் தெரியவில்லை தாத்தா!! என்றேன். நன்றாகப்பார் தெரியும் பார்!! என்று மிரட்டினார். உடன் ஒரு முடிவோடு வாயில் வந்ததெல்லாம் புளுக ஆரம்பித்தேன். இரண்டு பேர் தெரிகிறார்கள். காரில் போகிறார்கள் என்று அவிழ்த்து விட ஆரம்பித்தேன். சுந்தரம்தானே அது என்று கேட்டார்கள்.
அப்போதுதான் என் மூளை வேலை செய்தது. என் அன்பிர்க்குரியவரின் சித்தரவதை செய்யப்பட்ட முகம் தெரிந்தது.கண்டிப்பாக அவர் எடுத்திருக்க மாட்டார் என்று நினைத்தேன். அதனால் இல்லவே இல்லை. இது வேறு ஆட்கள் என்று உறுதியாகத் தெரிவித்தேன்.
!! சரி! கார் போகும் வழி தெரிகிறதா!!
!! தெரிகிறது. !!
!!பணம் வைத்துள்ள இடம் தெரிகிறதா!!
!!தெரிகிறது. !!
அதோடு விட்டார்களா? !!வா! அந்த இடத்தைக் காட்டு !! என்று என்னைக் காரில் ஏற்றிக்கொண்டு ஊர் முழுவதும் விடிய விடிய சுற்றினார்கள். காசா பணமா ! ரீல் மேல் ரீல். நான் விட்டது.!!!!!!! ஒன்றும் கிடைக்கவில்லை.??? .
முடிவில் நான் தூங்கிவிட்டேன்??
இரண்டு நாள் கழித்து பணம் படுக்கும் மெத்தைக்கு அடியில் கிடைத்தது. அங்கு வைத்ததை மறந்துவிட்டு அந்த அப்பாவியை வீண்பழி சுமத்தி துன்புறுத்தி விட்டார்கள்அவர் ஊரைவிட்டே போய்விட்டார். இப்போது எங்கே இருக்கிறாரோ.
ஒரு அப்பாவியைக் காப்பாற்றிய நிம்மதி எனக்கு. எல்லோரையும் சுத்தலில் விட்டதை இன்று நினைத்தாலும் தாங்க முடியாத சிரிப்புதான். உங்களுக்கு எப்படி!!!!
Showing posts with label அனுபவம்.. Show all posts
Showing posts with label அனுபவம்.. Show all posts
Tuesday, October 20, 2009
Subscribe to:
Posts (Atom)