ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Thursday, April 29, 2010

நீயும் நானும்...










மவுனத்தின் அணிகலனாய் நான்

அதிர வைக்கும் பட்டாசாக நீ

கவிதையும் கன்வுமாய்வானில் சிறகடிக்கும் நான்

அழுத்தமாய் தரையில் ஊன்றி நிற்கும் நீ

எதுவும் வேண்டாத்துறவியாய் நான்

ஆயிரம் ஆசைகளுடன் நீ

இலக்கற்ற சோம்பலுடன் நான்

ஓய்வே இல்லாத நீ

தொட்டாற்சிணுங்கியாய் நான்

எதற்கும் கலங்காத நீ

ஆனாலும் என்னுயிர் என்கிறாய் நீ

உன்னுயிர் என்கிறேன் நான்

எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது இப்படித்தானோ...

ஊசியும் நூலுமாய் ஓடுகிறது வாழ்க்கை அழகாக..


டிஸ்கி: நாங்களும்ம்ம்....கெளம்பிட்ட்டோமில்ல.....






































































28 comments:

Chitra said...

////எதுவும் வேண்டா துறவியாய் நான்

ஆயிரம் ஆசைகளுடன் நீ///


.....ஹா ,ஹா ,ஹா ,ஹா . ..... இதில் உள்குத்து இல்லையே...... ஹா,ஹா,ஹா,ஹா....
கவுஜையில் பின்னி பெடல் எடுத்திட்டீங்க...... சூப்பர்!

சாந்தி மாரியப்பன் said...

ஊசியும் நூலுமாய், ஊடும்பாவுமாய் ஓடும் வாழ்க்கை இனிமையாய்த்தான் இருக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா??????? :)))))

நாடோடி said...

//நாங்களும் கெளம்பிட்டோமில்ல.....///
ந‌ல்ல‌ தான் கிள‌ம்பிருக்கீங்க‌... க‌விதை ந‌ல்லா இருக்கு..

மணிஜி said...

நெடுநாள் ஆசை ஒன்று..(மீ த ஃபர்ஸ்ட் சொல்லத்தான்)

ஹேமா said...

கண்ணகி....கவிதை கவிதை.
அசத்திட்டீங்கப்பா.அதுவும் காதல்.சொல்லியிருக்கிறது அத்தனையும் உண்மை தோழி.
வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

நீங்களுமா? ரைட்டு...

ராமலக்ஷ்மி said...

நல்லாவேதான் கெளம்பியிருக்கீங்க கண்ணகி:)! கவிதை அருமை!

Madumitha said...

ஊசியும் நூலுமாய்
வாழ்க்கை.
புதிய சிந்தனை.
வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

நல்ல முயற்சிங்க!

வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய எழுதுங்க!

பிரபாகர்...

ஜெய்லானி said...

//ஊசியும் நூலுமாய் ஓடுகிறது வாழ்க்கை அழகாக..//

அடி பிண்ணிட்டீங்க , சூப்பர்...

sathishsangkavi.blogspot.com said...

ஆகா....

அடுத்து நீங்கதானா..........?

பனித்துளி சங்கர் said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

நசரேயன் said...

எங்களை எல்லாம் பார்த்தா பாவமா தெரியலை

தாராபுரத்தான் said...

எல்லோரும் கவி..தைக்க புறப்பட்டுட்டாங்க..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலக்கல் கண்ணகி.... இன்னும் நூறு வருஷம் இப்படியே ஊசியும் நூலுமாய் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எதிர் எதிர் துருவங்களா இல்லைனா வாழ்க்கை போர் அடிச்சுடும்... அழகா சொல்லி இருக்கீங்க... சூப்பர் கண்ணகி

கண்ணகி said...

முதல் முயற்சிக்கு ஆதரவு...?????? கொடுத்த அனைவருக்கும் நன்றி...நன்றி....நன்றி...

மங்குனி அமைச்சர் said...

//டிஸ்கி: நாங்களும் கெளம்பிட்டோமில்ல.....///


எங்க போரிக

கண்ணகி said...

எப்படி திருத்துவது என்று சொல்லுங்கள் தங்கராஜ் சார்.

settaikkaran said...

தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்

கண்ணகி said...

நன்றி.....நன்றி...மனமார்ந்த நன்றி...சேட்டைக்காரரே...

logu.. said...

super..

nallarukku.

SShathiesh-சதீஷ். said...

நீங்கள் எங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்தியமைக்கு நன்றி. உங்கள் தளத்தில் எங்கள் வாக்கெடுப்பு இடம்பெறும் தளத்தின் லிங்க் அடங்கிய லோடோவை இணைத்து ஆதரவு வழங்கலாமே.

கண்ணகி said...

நன்றி.லோகு முத்ல் வருகைக்கும் கருத்துக்கும்.

கண்ணகி said...

நன்றி.சதீஸ்..

முனியாண்டி பெ. said...

மிகவும் அருமை

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

http://adisuvadu.blogspot.com/2010/04/blog-post_22.html

கண்ணகி said...

நன்றி..முனியாண்டி..மொதமொதலா வந்து கருத்துச்சொன்னதுக்கு...