நேற்றைய தினமலர் செய்தியைப் பார்த்ததும் பகீரென்றது....கொடிவேரி அணையில் சாயக்கழிவு நீர் தேங்கி நின்றதைக்கண்டு சுற்றுலாப்பயணிகள் உடலில் அரிப்பு ஏற்படும் என்று அஞ்சி குளிக்காமல் சென்றனர் என்கிறது செய்தி...இந்த சாயநீர் கலப்பு பிரச்சினை இன்று நேற்றல்ல.. வெகு காலமாக இருக்கிறது...இப்போது அணையில் நீர் வரத்து இல்லாத்தால் வெளியில் தெரிகிறது.
இதற்காக பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன...கொஞச காலம் நிறுத்தப்படும்...பிறகு மீண்டும் தொடரும்...இது ஒரு தொடரும் நிகழ்வு....இப்படியே போனால் நொய்யலின் கதிதான் ...கொடிவேரிக்கும்....??
.அரசு ஏன் இந்த மாதிரி தொழிலகங்களை நீர்வழிப்பதைகளின் அருகில் அனுமதிக்கிறது.???..தொழில்கள் வளரவேண்டும்தான்....அதேசமயம் நம் வாழ்வாதாரங்களே பாதிக்கப்படுவதை எப்படி அனுமதிப்பது...கோபி வட்டாரமே விவசாயத்துக்குப் பெயர் போனது...இப்போது நிலமை தலைகீழ்.....அதிகாலை நான்கு மணிக்கே திருப்பூர் கம்பெனி பஸ்கள் எல்லா ஊர்களிலும் ஆட்களை
அழைத்துச்செல்ல அணிவகுத்து நிற்கின்றன...பெரும்பாலான குடும்பங்களின் இளம்தலைமுறையினர் விவசாயத்தைக் கைவிட்டு திருப்பூருக்கு செல்கின்றனர்..வீட்டுப்பெரியவர்கள்தான் ஏதோ
கிடைக்கும் ஆட்களை வைத்து விவசாயம் செய்கின்றனர்...கிடைக்கும் ஓரிரண்டு வேலை ஆட்களும் "100ரூபாய்” திட்ட வேலைக்குச் சென்று நோகாமல் இருப்பதையே விரும்புகிறார்கள்..
அந்த வேலையில்தானே இரண்டு பேர் செய்யும் வேலையை இருபது பேர் செய்யலாம்.???...அப்புறம் எப்படி விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கும்....வேலை தருகிறேன் என்று இப்படி திருப்பிவிடுவதால்.இந்தத் தலைமுறையோடு விவசாயமே அற்றுப்போய்விடும்போல் இருக்கிறது..அப்புறம் பருவமழை பாதிப்பு....
இந்த லட்சணத்தில் தட்டுத்தடுமாறிகிடைக்கும் நீரில் விவசாயம் செய்தால் இந்தக்கழிவுநீர் பிரச்சினை...நம் ஈரோடு மாவட்டத்தின் ஒரே நீர்வீழ்ச்சி... எத்தனைபேரை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது.அங்கு
சென்றுவருபவர்களுக்குத் தெரியும்...அதன் அழகும்...பசுமையும்...அந்த அழகுக்குப் பாதிப்பா??.....எத்தனைஊர்களுக்கு குடிநீராகச் செல்கிறது...குடிப்பவர்கள் உடல்நிலை.???..எல்லா ஆறும் இன்று
விசமாகிகொண்டிருக்கிறது...இப்போதாவது விழித்துக்கொள்ளாவிட்டால் நல்ல குடிநீர்இல்லாமல் சாகவேண்டியதுதான்..
நொய்யலை இப்படி கண்டுகொள்ளாமல் விட்டுத்தான்.அந்த ஆறே பாழாகிவிட்டது....பலகோடி செலவில் கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை கழிவுநீர் அணையாகப் பேர் வாங்கி இருக்கிறது...அரசு ...
விழித்துக்கொண்டு கொடிவேரி அணையைக் காப்பாற்ற ஆவண செய்யவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்..இல்லாவிட்ட்டால்.... ”புலி வருது...புலி வருது”....புலி வந்தே விடும்..இதில்
மக்களுக்கும், அரசுக்கும் சரிப்பாதி பங்கு உள்ளது...இதில் கடைசியில் பாதிக்கப்படுவது மக்களாகத்தான் இருக்கும்..
ஒருபுறம் அணையை அலங்காரம் பண்ணிவிட்டு மறுபுறம் சாயக்கழிவுகளை விட்டால் என்ன ஆகும்....
.அணையை அலங்கரித்தால் போதாது....அது சுற்றுலாவை வேண்டுமானால் வளர்க்கும்..பிறகு நொய்யல் மாதிரி ஆகிவிட்டால் யார்வருவார்கள்.....முதலுக்கே மோசம் வந்துவிடும்.
.
ஒருபுறம் அணையை அலங்காரம் பண்ணிவிட்டு மறுபுறம் சாயக்கழிவுகளை விட்டால் என்ன ஆகும்....
.அணையை அலங்கரித்தால் போதாது....அது சுற்றுலாவை வேண்டுமானால் வளர்க்கும்..பிறகு நொய்யல் மாதிரி ஆகிவிட்டால் யார்வருவார்கள்.....முதலுக்கே மோசம் வந்துவிடும்.
.
கோடி கோடியாக மானியங்களும் தள்ளுபடிகளுமா நம் தாகத்தைத் தீர்க்கப்போகிறது,,???? ....கண் கெட்டபிறகு சூர்ய நமஸ்காரமா????....முழிச்சுக்குகங்க....முழிச்சுக்குங்க....
நன்றி..கூகிள் படத்திற்கு..
நன்றி..கூகிள் படத்திற்கு..